பேரறிவாளன் விடுதலை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.
பேரறிவாளன் விடுதலை வழக்கு - நேரத்தை ஒன்றிய அரசு வீணடிப்பதாக உச்ச நீதிமன்றம் கருத்து.
இவ்வழக்கில் ஆளுநருக்காக மத்திய அரசு வாதிடுவது ஏன்?-நீதிபதிகள்.
மாநில அரசின் முடிவு அரசியலைப்பு சட்டத்திற்கு எதிராக இருக்கும் போது ஆளுநர் குடியரசுத்தலைவரிடம் முறையிடலாம்- மத்திய அரசு.
எந்த விதியின் கீழ் குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் அனுப்பினார்- நீதிபதிகள்.
பேரறிவாளனை விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை, மத்திய அரசுக்கே உள்ளது இவ்விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுப்பார்- மத்திய அரசு.
எந்த விதியின் கீழ் மாநில அரசுக்காக நீங்கள் (மத்திய அரசு வழக்கறிஞர்) வாதிடுகிறீர்கள்?
ஆளுநருக்காக மாநில அரசுதான் வாதிட வேண்டும், மத்திய அரசு இல்லை.
ஆளுநருக்கு அதிகாரம் இருந்தும் 3 ஆண்டுகள் முடிவெடுக்காமல் இருந்தது ஏன்?- நீதிபதிகள்.
சி.பி.ஐ. இவ்வழக்கை விசாரித்துள்ளதால் முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் வாதம்.
தமிழக அரசு தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்கும் முடிவை எடுத்து, அதுதொடர்பான தகவலை மத்திய அரசிடம் பகிர்ந்துகொண்டது.
அதற்குப் பிறகுதான் மத்திய அரசு இந்த விவகாரத்தில் தனக்கு அதிகாரம் இருப்பதாக கூறி தலையிட்டது, அதன்பின்னரே அனைத்து குழப்பங்கள் தொடங்கின - தமிழக அரசு வாதம்.
உச்ச நீதிமன்றத்தின் கேள்விகளும், மத்திய அரசின் வாதமும் வேறு வேறாக உள்ளது என நீதிபதிகள் கருத்து.
நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அரசு தெளிவாக பதிலளிக்கவில்லை - நீதிபதிகள்.
இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட தண்டனைகளுக்கான கருணை மனுக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத்தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது- மத்திய அரசு.
அப்படியானால், 70 ஆண்டுகளாக ஆளுநர்கள் அளித்த தண்டனை குறைப்பு உள்ளிட்டவை அரசியலமைப்புக்கு எதிரானதா?- நீதிபதிகள் கேள்வி
நாட்டில் நடக்கும் ஒவ்வொரு கொலை வழக்குகளின் தண்டனை மீதும் கருணை காட்டும் முடிவை எடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே சென்று விட்டால், ஆளுநருக்கான சிறப்பு அதிகாரம் 161 என்ற பிரிவு எதற்கு, அது அரசியலமைப்பில் தேவையில்லயா?- நீதிபதிகள் கேள்வி
அமைச்சரவை முடிவெடுத்து ஆளுநருக்கு அனுப்பும்போது, அதில் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை ஆளுநர் செலுத்த முடியாது. மாநில அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் - தமிழக அரசு தரப்பு.
மாநில அமைச்சரவையின் முடிவிற்கு ஆளுநர், கட்டுப்பட்டவர் தானே? - நீதிபதிகள் கேள்வி
IPCயின் கீழ் தண்டனை பெற்றவர்களுக்கு கருணை வழங்கும் விவகாரத்தில், சட்டவிதிகளை மீறி அமைச்சரவையின் முடிவு இருந்தால் அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் உண்டு- மத்திய அரசு.
இந்திய தண்டனை பிரிவு 302 மீது முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் இருக்கிறதா? - நீதிபதிகள் கேள்வி
நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி மத்திய மற்றும் மாநில அரசு இரண்டிற்கும் இதில் அதிகாரம் உண்டு- மத்திய அரசு.
தண்டனை மீது கருணை காட்டவும் முடிவை எடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே சென்றுவிட்டால் ஆளுநருக்கான சிறப்பு அதிகாரம் 161 என்ற பிரிவு எதற்கு? அது அரசியலமைப்பில் தேவையில்லயா?- நீதிபதிகள் கேள்வி
அமைச்சரவையின் முடிவு சட்டவிதிகளை மீறி இருக்கும் பட்சத்தில் அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பு ஆளுநருக்கு அதிகாரம் உண்டு- மத்திய அரசு.
ஆளுநரே இவ்விவகரத்தில் கையெழுத்திட்டு முடிவு எடுத்திருக்கலாம். ஆனால், குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளோம் எனக்கூறி குடியரசுத் தலைவரையும் இவ்வழக்கின் உள்ளே இழுத்து விட்டார்- தமிழக அரசு.
பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை விவகாரத்தில் அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்ததோடு, இதில் முடிவு எடுக்க குடியரசு தலைவருக்கு அனுப்பியது அரசியல் சாசன பிழை - தமிழக அரசு.
இந்திய தண்டனை சட்டம் நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்டது இல்லை. அவற்றில் சில மாற்றங்களை மட்டுமே நாடாளுமன்றம் மேற்கொண்டுள்ளது.
சில திருத்தங்களை மேற்கொண்டதாலேயே, மாநிலங்கள் மீது மத்திய அரசு அதிகாரம் செலுத்த முடியாது - தமிழக அரசு.
பேரறிவாளனை விடுவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு.
அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
No comments:
Post a Comment