கல்பாக்கம் அணுமின் நிலையம் எதிரில் இன்று (11.05.22) பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பாமக தலைவர் ஜி.கே.மணி அவர்கள் தலைமையில் போராட்டம் நடைபெற்றபோது.
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பிளம்பர், மரவேலை தச்சர் உள்ளிட்ட சி மற்றும் டி பிரிவு பணிகளுக்கு இந்தியில் தேர்வு, இந்தியில் நேர்காணல் நடத்தப்படும் என்ற அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது. அந்த உத்தரவை ரத்து செய்து விட்டு தமிழில் தேர்வு,தமிழில் நேர்காணல் என உடனடியாக அறிவித்து இப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். சட்டப்படி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு தமிழில் படித்தவர்களுக்கு 80% வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
உடனடியாக அறிவிப்பை ரத்து செய்ய வலியுறுத்தியும் இந்த பகுதியில் அணு மின் நிலையத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு, இந்த சுற்று வட்டார படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, சட்டத்தின்படி 80% தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு,இப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கல்பாக்க அணு மின் நிலையம் முன்பு போராட்டம் நடைபெற்றபோது. இந்தப் போராட்டத்தில் வடக்கு மண்டல இணைப்பு செயலாளர் ஏ கே மூர்த்தி, வன்னியர் சங்க மாநில செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம், மாநில இளைஞரணி செயலாளர் பொன் கங்காதரன், மாவட்ட செயலாளர்கள் கி கணபதி, காரணி ராதாகிருஷ்ணன், நிர்மல்குமார் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான போராட்டத்தில் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment