அக்னிப்புரட்சி இன்றைய (14.05.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (14.05.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (14.05.2022) முக்கிய செய்திகள்.

* டெல்லியில் கோர தீவிபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை 27 ஆக உயர்வு.

டெல்லியின் முண்ட்கா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே 3 மாடி வணிகக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர்.

கட்டிடத்தில் இருந்து சுமார் 50 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுளதால் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்பு.

* டெல்லி தீ விபத்து - பிரதமர் நிவாரண நிதி அறிவிப்பு.

டெல்லி, வணிக கட்டிட தீ விபத்தில் உயிரிழந்தர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம்.

* செங்கல்பட்டு: மேல்மருவத்தூரில் அரசுப் பேருந்தில் பயணி நடத்திய தாக்குதலில் நடத்துனர் பெருமாள்(54) உயிரிழப்பு

மது போதையில் இருந்த பயணி தாக்கியதில் படுகாயமடைந்த நடத்துனர் பெருமாள் மருத்துவ மனைக்கு செல்லும் வழியில் உயிரிழப்பு!

* தமிழக ஆளுநர் ஆர்.ஏன்.ரவி இன்று காலை 10 மணிக்கு திடீர் பயணமாக சென்னையிலிருந்து டெல்லி செல்கிறார்.

* கோதுமை ஏற்றுமதியை தடை செய்து மத்திய அரசு உத்தரவு

பிற நாடுகளின் கோரிக்கைக்கு ஏற்ப அங்கு கோதுமை தேவை இருப்பின் மட்டுமே அரசின் அனுமதியோடு ஏற்றுமதி செய்யலாம் எனவும் அறிவிப்பு.

* சென்னையில் சிறப்பு பள்ளியின் புதுப்பிக்கப்பட்ட கட்டடத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தசைத்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கான  சிறப்பு பள்ளியின் புதுப்பிக்கப்பட்ட கட்டடம் திறப்பு.

ஆயிரம் விளக்கு பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பில்  பள்ளி கட்டடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

* ஜூன் 3ம் தேதி கருணாநிதி பிறந்தநாளன்று சென்னை மாநகர வரலாற்றில் முதல் முறையாக அரசு சார்பில் மலர் கண்காட்சி.

சென்னை கலைவாணர் அரங்கில் ஜூன் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை மலர் கண்காட்சி

தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெறும் மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

* டெல்லி வர்த்தக வளாக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30-ஆக உயர்வு.

* கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி,  திருச்சி, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

* சென்னையில் செப். 26ம் தேதி முதல் அக் 2ம் தேதி வரை சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கம் டென்னிஸ் அரங்கில் நடத்தப்படும்;

தொடர்ந்து விளையாட்டு அரங்கை மேம்படுத்தி, அதற்கான பணிகள் நடைபெறும்  - அமைச்சர் மெய்யநாதன்

* டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

* மதுரை பள்ளி மாணவி ஜெர்லின் அனிகா பிரேசில் நாட்டில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் ஒற்றையர், இரட்டையர் பிரிவு, குழுப் போட்டி என மூன்றிலும் தங்கம் வென்று இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
- ஓ. பன்னீர்செல்வம்

* மதுரை மாட்டுதாவனி மலர் சந்தையில் நேற்று வரை ரூ. 500-க்கு விற்பனையான மல்லிகை பூ இன்று ரூ. 600  உயர்ந்து ரூ.1100-க்கு விற்பனையாவதால் பொதுமக்கள் அவதி

* புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள தெருக்களுக்கு காவி நிறத்தில் பெயர் பலகை வைத்ததற்கு எதிர்ப்பு;

கருப்பு பெயிண்ட் கொண்டு பெயர் பலகைகளை சேதப்படுத்திய மர்ம நபர்களுக்கு காவல்துறையினர் வலைவீச்சு

* அரசே துணைவேந்தர்களை நியமித்தால் அது ஊழலுக்கு வழிவகுக்கும்

கடந்த காலங்களில் துணைவேந்தர் நியமனங்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக நியமனங்களில் கோடிக்கணக்கில் பணம் லஞ்சமாக வழங்கப்பட்டது

வெளிப்படையான, நேர்மையான முறையில் துணைவேந்தர்களை ஆளுநரே நியமித்து வருகிறார்;

ஆளுநர்கள் சுதந்திரமாக முடிவெடுப்பதே, புதிய சட்டமசோதாக்களுக்கு காரணம்
- கல்வியாளர் பாலகுருசாமி

* 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1.18 லட்சம் மாணவர்கள் ஆப்சென்ட்;

கொரோனாவால் ஏற்பட்ட சமூக- பொருளாதார நெருக்கடியே மாணவர்கள் பங்கேற்காததற்குக் காரணம் - பள்ளிக்கல்வித்துறை தகவல்

* மேல்மருவத்தூரில் அரசுப் பேருந்தில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த நடத்துனர் பெருமாள் குடும்பத்தினருக்கு ₹10 லட்சம் நிதி உதவி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

* சென்னையில் நடக்க உள்ள சர்வதேச உலக மகளிர் டென்னிஸ் தொடருக்காக முதற்கட்டமாக தமிழ்நாடு அரசு ₹5 கோடி ஒதுக்கியுள்ளது - அமைச்சர் மெய்யநாதன் தகவல்.

சென்னையில் செப். 26ம் தேதி முதல் அக் 2ம் தேதி வரை சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கம் டென்னிஸ் அரங்கில் நடத்தப்படும்.

தொடர்ந்து விளையாட்டு அரங்கை மேம்படுத்தி, அதற்கான பணிகள் நடைபெறும்  - அமைச்சர் மெய்யநாதன்.

* நூல் விலை உயர்வை கண்டித்து போராட்டங்கள் தீவிரம்.

ஈரோட்டில் மே 16, 17ம் தேதிகளில் நடைபெறவுள்ள கடையடைப்பு போராட்டத்தில், ஐவுளித்துறை சார்ந்த 25 சங்கத்தினர் பங்கேற்க போவதாக அறிவிப்பு.

* மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமிரா, அவசர அழைப்பு பொத்தான்கள்- பேருந்துகளில் புதிய வசதிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

முதற்கட்டமாக 500 மாநகர பேருந்துகளில் கேமரா, பொத்தான் வசதி அமல்.

* திரிபுரா முதல்வர் ராஜினாமா.
திரிபுரா முதல்வர் ராஜினாமா பிப்லப் குமார் தேப் திடீர் ராஜினாமா.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்த நிலையில் திரிபுரா முதல்வர் ராஜினாமா.

* தமிழகத்தில் 6 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் விலையில்லா மிதிவண்டி வழங்கப்படும் - தமிழக அரசு.

கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி மற்றும் மடிக்கணினி வழங்கப்படாமல் நிலுவையில் இருந்த நிலையில் தமிழக அரசு அறிவிப்பு.

* முந்தைய அரசின் கொள்கை முடிவுகள் மக்களுக்கும், சமுதாயத்துக்கும் நன்மை பயப்பதாக இருந்தால் அவற்றை அடுத்து வரும் அரசுகள் தொடரலாம்.

முந்தைய அரசின் திட்டங்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவற்றை மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியமில்லை மக்களுக்கு நன்மை தராத திட்டங்களை மட்டும் மறு ஆய்வு செய்யலாம் - உயர்நீதிமன்றம்.

மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் என தெரிந்தும் மதுபானத்தை அரசே விற்க வேண்டுமென்ற கொள்கை முடிவில் மட்டும் அடுத்தடுத்து வரும் அரசுகள் ஒத்துப்போகின்றன- சென்னை உயர்நீதிமன்றம்.

ஏற்காட்டில் மாநில கூட்டுறவு பயிற்சி பள்ளி அமைக்கும் முந்தைய அதிமுக அரசின் முடிவை ரத்து செய்த உத்தரவை எதிர்த்த வழக்கில் அறிவுறுத்தல்.

* திரிபுரா மாநிலத்தின் புதிய முதல்வராக மாணிக் சஹா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்.

முதல்வராக இருந்த பிப்லப்  குமார் தேவ் திடீர் ராஜினாமா செய்ததால் மாணிக் சஹா தேர்வு.

* ராஜபக்சே இலங்கையிலிருந்து ஓடமுடியாது, நீதிமன்றம் தடுத்துவிட்டது!

ஆனால்…

இதுவரை சர்வாதிகார ஆட்சி நீண்ட நாட்கள் நிலைக்காது என்பதற்கு சான்று பல நாடுகளின் வரலாற்றை கூறலாம். அவ்வாறு இருந்த தலைவர்கள் மக்களால் தூக்கி எறியப்பட்டு, கொல்லப்பட் டுள்ளனர்.

✓இத்தாலியை முசோலினி ஆண்ட போது, பாசிச அரசாக மாற்றி சர்வாதிகார ஆட்சியை நடத்தினார். இதனால், மக்களின் கடும் கோபத்துக்கு ஆளாகி, அவர்களிடம் இருந்து தப்பிக்க 1945ம் ஆண்டு மனைவி கிளாரா பெட்டாசியுடன் சுவிட்சர்லாந்துக்கு தப்பியோட முயன்றபோது, இத்தாலியின் கோமா ஆற்றின் அருகில் பிடிப்பட்டு இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

✓உகண்டா நாட்டை ராணுவ புரட்சி மூலம் சர்வாதிகார ஆட்சி செய்த இடியாமீன், 1979ம் ஆண்டு லிபியாவுக்கு தப்பி ஓடி தஞ்சம் புகுந்தார். அங்கிருந்து 1981ம் ஆண்டு சவுதி அரேபியாவுக்கு தப்பினார்.1983ம் ஆண்டு அங்கேயே இறந்தார்.

✓எகிப்து நாட்டு அதிபராக 30 ஆண்டுகளாக இருந்தவர் ஹோஸ்னி முபாரக். இவரது ஆட் சியில், வறுமை, வேலைவாய்ப் பின்மை உள்ளிட்டவை அதிகரித்ததால், இவரை பதவி விலகக் கோரி, மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்திய மக்கள் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இவர், மக்கள் வரிப்பணத்தில் உலகம் முழுவதும் சொத்துகள் வாங்கி குவித்ததால் சிறையில் அடைக்கப்பட்டு ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

✓தூடூனிசியா நாட்டில் பட்டினியால் ஒருவர் இறந்ததால் ஏற்பட்ட மக்கள் புரட்சியால் ஆட்சி கவிழ்ந்தது. இதேபோல், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் புரட்சியால் ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது.

✓ லைபேரியா அதிபர் சார்லஸ் டைலர் 2003 ல் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஓடி ஒளிந்தார.தனது பதவி காலங்களில் போர் குற்றவாளியாகவும், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் செய்து கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ளார். இப்படி பல நிகழ்வுகள்….

✓இதே நிலைமைதான் இலங்கையில் தற்போது உள்ளது. மக்களின் புரட்சி போராட்டத்திற்கு பதில் சொல்ல முடியாமல் உயிருக்கு பயந்து தலைவர்கள் அங்கு ஓடி ஒளிந்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages