புதுப்பிக்கப்பட்ட பா.ம.க. பயிலரங்கதில் 16- 05.2022 இன்று கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார் பாமக தலைவர் ஜி கே மணி - Agnipuratchi

புதுப்பிக்கப்பட்ட பா.ம.க. பயிலரங்கதில் 16- 05.2022 இன்று கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார் பாமக தலைவர் ஜி கே மணி

Share This

புதுப்பிக்கப்பட்ட பா.ம.க. பயிலரங்கதில் 16- 05.2022 இன்று கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார் பாமக தலைவர் ஜி கே மணி

பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்கம் கடந்த 2002-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு  கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இது வரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு  அரசியல் பயிரங்கத்தில் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. கொரோனா பெருந்தொற்று பரவுவதை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் அரசியல் பயிலரங்கத்தில் பயிற்சி வகுப்புகள் தடைபட்டிருந்தன.

கொரோனா தொற்று அச்சம் இப்போது விலகி விட்ட நிலையில், மீண்டும் பயிற்சி வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்கம் முழுமையாக புதுப்பிக்கப்பட்டது.

புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் பயிலரங்க வளாகத்தின் முகப்பில்  16.05.2022 திங்கள் கிழமை காலை 11 மணிக்கு கொடியேற்று விழா நடைபெற்றது. மருத்துவர் இராமதாசு அய்யா முன்னிலையில் நடைபெற்ற விழாவில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அவர்கள் கலந்து கொண்டு பா.ம.க. கொடியை  ஏற்றி இனிப்புகள் வழங்கினார். மருத்துவர் அய்யா அவர்களால் தொடங்கப்பட்ட 34 அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கும் அரசியல் பயிலரங்கத்தில் அமைப்பு வாரியாக தனித்தனியாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தலைமை நிலைய செயலாளர் இசக்கி படையாட்சி அமைப்பு செயலாளர் செல்வகுமார் மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages