அக்னிப்புரட்சி இன்றைய (16.05.2022) முக்கிய செய்திகள்.
* சென்னையில் தொடர்ந்து 40 வது நாளாக இன்றும் பெட்ரோல் 110.85 ரூபாய், டீசல் 100.94 ரூபாய் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் நீடித்து வருகிறது.
* உலகம் முழுவதும் 52,11,48,193 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; தொற்றில் இருந்து 62,88,233 பேர் குணமடைந்து வீடு திரும்பினர், 47,56,39,712 பேர் உயிரிழப்பு
* நெல்லை, கல்குவாரியில் பாறை சரிந்து விபத்து: ஆறு பேர் சிக்கியதில் 3 பேர் மீட்பு - செல்வம் என்ற இளைஞர் உயிரிழப்பு;
எஞ்சியுள்ள 3 பேரை மீட்கும் பணிகள் 2வது நாளாக நடைபெறுகிறது
* நீட் தேர்வு - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.
நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 20ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.
நேற்றுடன் அவகாசம் முடியவிருந்த நிலையில் மே 20ஆம் தேதி இரவு 9 மணி வரை அவகாசத்தை நீட்டித்தது தேசிய தேர்வு முகமை.
இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் வரும் 20-ம் தேதி இரவு 9:50 மணிக்குள்ளாக,
neet.nta.nic.in வழியாக விண்ணப்பிக்கலாம்.
* நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்களின் 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது.
கடந்த சில மாதங்களாக நூல் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், இம்மாதம் கிலோ ₹40 உயர்வு.
* கேரளாவுக்கு இன்று ரெட் அலர்ட்:
எர்ணாகுளம், இடுக்கி, கண்ணூர், திருச்சூர், பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களில் அதி தீவிர மழை பெய்யும் என எச்சரிக்கை-தேசிய பேரிடர் மீட்பு குழு வருகை.
* நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.
பருத்தி, நூல் விலையுயர்வால் தமிழ்நாட்டில் ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
* தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்சலை கண்டறிய 300 பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன;
21,000 பணியாளர்கள் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள், கொசுக்களை ஒழிக்க தேவையான மருந்து கையிருப்பில் உள்ளது -அமைச்சர் மா.சுப்பிரமணியன்
* சென்னை பல்கலைக்கழகத்தின் 164வது பட்டமளிப்பு விழா.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் பங்கேற்பு. அனைத்து மாணவர்களையும் முதல்வனாக்க உருவாக்கியத் திட்டம்தான் ‘நான் முதல்வன்’ திட்டம்- சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
எனது தலைமையிலான இந்த அரசு உயர்கல்வியின் பொற்காலமாக திகழும் இது மாணவர்களுக்கான அரசு என்பதில் பெருமைகொள்கிறேன்.
இளைஞர்களுக்கான அனைத்து தகுதிகளையும் உருவாக்கும் கடமையை தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது.
மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என சிறப்பு வாய்ந்தவர்களை இந்த பல்கலை. உருவாக்கி உள்ளது.
தமிழக மாணவர்கள் மேன்மை பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது எனது ஆசை.
* சென்னை பல்கலை.பட்டமளிப்பு விழா- தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரை:
உலகின் தொன்மையான மொழி தமிழ் மொழி; தமிழ் இலக்கணமும் இலக்கியமும் பாரம்பரியமிக்கது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் வர வேண்டும்.
தமிழர்கள் 4,000 ஆண்டுகளுக்கு முன் இரும்பை உருவாக்கி பயன்படுத்தி உள்ளனர் என்பதை தொல்லியல் ஆய்வுகள் உறுதிபடுத்தி இருப்பது பெருமை.
கல்வி, தொழில், மருத்துவம் ஆகிய துறைகளில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக உள்ளது.
* இளைஞர்களுக்கு தொழில் துறையில் பயிற்சியளிக்க 22 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
பயிற்சி செலவை தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ஏற்கும்.
உலகளவில் திறன் மேம்பாட்டு போட்டிகளில் பங்கேற்க பயிற்சி அளிக்கப்படும் - அமைச்சர் சி.வி.கணேசன்.
* 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு:
தமிழக கடலோரம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கரூர், திருச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 17, 18 ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கரூர், திருச்சி, திருவண்ணாமலை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 19, 20ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
* நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
திருச்சி மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத ரூ.3 லட்சம் பறிமுதல் செய்தனர்.
தொழில் மைய அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்களிடம் லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
* வடகலை, தென்கலை பிரச்சனை: தீர்வு காண அரசுக்கு அதிகாரம்.
வடகலை, தென்கலை பிரச்சனையை ஒழுங்குபடுத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது.
அதே சமயத்தில் அவர்களுடைய மத உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் - உயர்நீதிமன்றம்.
காஞ்சிபுர வரதராஜ பெருமாள் கோவில் பிரமோற்சவத்தில் வடகலை பிரிவில் வேதபாராயணம் செய்ய அறநிலையத்துறை அனுமதி மறுத்திருந்த நிலையில், அதனை எதிர்த்து நாராயணன் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார்.
* வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் திருப்பூர் பின்னலாடை நிறுவன தொழிலாளர்களுக்கு அதிமுக முழு ஆதரவு அளிக்கும்- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் அறிக்கை.
நூல் விலை குறைப்பு, பருத்தி பதுக்கல் தடுப்பு, குறைந்த விலையில் நூல் கிடைப்பது உள்ளிட்டவை குறித்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓபிஎஸ், ஈபிஎஸ்
இலங்கையில் முற்றிலுமாக பெட்ரோல் இருப்பு தீர்ந்துவிட்டதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தகவல்
* முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான தெரிவுப் பட்டியல் ஜூலை 2022 இறுதியில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு
நட்டத்தை ஏற்படுத்திய #SrilankanAirlines நிறுவனத்தை தனியாருக்கு விற்க இலங்கை அரசின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முடிவு
* ஊட்டி வெலிங்டன் ராணுவ பயிற்சி அகாடமியில் கலந்து கொள்ள கோவை வந்த குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, விமானப்படை ஹெலிகாப்டரில் ஊட்டி செல்ல இருந்த நிலையில் மோசமான வானிலையால் பயணம் ரத்து.
கோவையில் இன்று இரவு தங்கி, நாளை காலை ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி செல்கிறார்.
* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கும் தனித்துவமான வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
சிறப்பு ஊரக விலைப்புள்ளி பட்டியலின் படி, மாற்றுத்திறனாளிகள் 4 மணி நேரம் வேலை செய்தாலே முழு ஊதியம் பெறலாம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு 3 கி.மீ தூரத்திற்குள் மட்டுமே வேலை வழங்கப்படும்.
15 நாட்களுக்குள் வங்கிக்கணக்கில் ஊதியம் செலுத்தப்படும். வேலை அட்டை கோரும் தகுதியுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு நீல நிற அட்டை வழங்கப்படும் - தமிழக அரசு.
No comments:
Post a Comment