அக்னிப்புரட்சி இன்றைய (17.05.2022) முக்கிய செய்திகள்.
* நெல்லை கல்குவாரி விபத்து: பெரும் போராட்டத்துக்குப் பின் 4-வது நபர் சடலமாக மீட்பு.
நெல்லை மாவட்டம் அடம்பிடிபன்குளம் கிராமத்தில் நடந்த கல்குவாரி விபத்தில் ஆறு பேர் சிக்கியிருந்தனர்.
இரண்டாம் நாள் முடிவில் நான்காவது நபரான லாரி கிளீனர் முருகன் பாறை இடுக்குகளில் இருந்து பேரிடர் மீட்புக் குழுவினரால் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்.
3ஆம் நாள் இன்று மீதமுள்ள ராஜேந்திரன் மற்றும் செல்வகுமார் என இரண்டு லாரி ஓட்டுநர்களை மீட்பதற்கான பணிகள் நடை பெற்று வருகின்றது.
* மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல்:
உலகெங்கும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஒரே நாளில் லட்சம் 7.12 லட்சம் பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தினசரி அதிக பாதிப்புகள் கொண்ட நாடுகள் பட்டியலில் வடகொரியா முதலில் உள்ளது.
கடந்த சில நாட்களாகவே அங்கு கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது.
அங்கு ஒரே நாளில் 3.92 லட்சம் பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், தைவான் நாட்டில் 61 ஆயிரம் பேருக்கும் அமெரிக்காவில் 53 ஆயிரம் பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
* திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் ஜவுளி வியாபாரிகள் கடையடைப்பு.
பஞ்சு மற்றும் நுால் விலை உயர்வை கண்டித்து நேற்று தொடங்கிய போராட்டம் 2வது நாளாக இன்றும் நீடிப்பு.
* முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தொடர்புடைய டெல்லி, சென்னை, மும்பை உள்ளிட்ட 7 இடங்களில் சிபிஐ சோதனை.
ப.சிதம்பரத்தின் மகனும் சிவங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு தொடர்பாக சிபிஐ சோதனை.
சீனர்களுக்கு விசா வாங்கி தர ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு.
சுமார் 250 விசாக்கள் வாங்கி தருவதற்காக லஞ்சம் பெற்றதாக புகார்.
கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான 9 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை.
சென்னை, மும்பை, ஒடிசா, கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட இடங்களில் 4 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை.
* மொபைல் போன் ஏற்றுமதியில் புதிய உச்சம் படைத்துள்ளோம்.
“5ஜி தொழில்நுட்பம் நமது நாட்டின் பொருளாதாரத்தில் சுமார் 450 பில்லியன் டாலர் பங்கு வகிக்கும்" - பிரதமர் மோடி.
* கல்குவாரி விபத்து - நிவாரணம் அறிவிப்பு.
நெல்லை கல்குவாரி விபத்தில் உயிரிழந்த முருகன், செல்வன் ஆகியோரின் குடும்பத்துக்கு இரங்கல்.
நிவாரணமாக தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூ.10 லட்சமும், தொழிலாளர் நல வாரியம் மூலமாக தலா ரூ.5 லட்சமும் வழங்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு மாநிலங்களவை பதவி கொடுக்க அதிக வாய்ப்பு.
இன்னும் 2 நாட்களில் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார் -மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.
* போலி மருத்துவரின் சிகிச்சையால் கடலூர் மாவட்டத்தில் 5 வயது குழந்தை உயிரிழந்த விவகாரம்.
அம்மா மினி கிளினிக் திட்டத்தை மூடியதால் நேர்ந்த சோகம் - எதிர்கட்சி தலைவர் பழனிசாமி.
உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியும் அம்மா மினி கிளினிக்கை மீண்டும் திறக்க வேண்டும்.
* இலங்கை அதிபருக்கு எதிரான தீர்மானம் தோல்வி:
இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் தோல்வி.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுமந்திரன் கொண்டுவந்த தீர்மானத்தை 68 பேர் ஆதரித்த நிலையில் 119 பேர் எதிராக வாக்களித்தனர்.
* 8-ம் வகுப்பு படித்து விட்டு ITI தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10-ம் வகுப்பு முடித்ததற்கு இணையான சான்று வழங்கப்படும்.
10-ம் வகுப்பு முடித்து ITI படித்தவர்களுக்கு 12-ம் வகுப்புக்கு இணையான சான்று வழங்கப்படும்.
சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் அரசாணை வெளியீடு.
உயர்கல்வி பயில மட்டுமே இணையான சான்றிதழ் பயன்படும்.
அரசு வேலைவாய்ப்புக்கு இந்த சான்றிதழ் கருத்தில் கொள்ளப்படாது - தமிழக அரசு.
* திட்டமிட்டபடி மே 21 ல் குரூப்-2 தேர்வு - டிஎன்பிஎஸ்சி தலைவர்.
11.78 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
4.96 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், 6.81 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள், 3ம் பாலினத்தவர்கள் 48 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழ் வழியில் படித்தவர்கள் 79,942 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் 38 மாவட்டங்களில் 117 மையங்களில் குரூப்-2 தேர்வு நடைபெற உள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 7 மையங்களில் 1,15,843 பேர் தேர்வு எழுதவுள்ளனர்.
குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 3 மையங்களில் 5,624 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர்.
காலை 9 மணிக்கு பின் தேர்வு மையத்திற்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தேர்வை கண்காணிக்க 333 பறக்கும் படைகள், 6,400 சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஜூன் மாத இறுதியில் குரூப்-2 தேர்வு முடிவுகளை வெளியிட திட்டம்- டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன்.
* வங்கிகள் தனியார்மயத்துக்கு எதிரானவன் நான்!
- வங்கி ஊழியர்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி விளக்கம்
ரிசர்வ் வங்கி வாரிய இயக்குனர் பதவியில் இருக்கும் நான் பல முறை தனியார் மயம் குறித்த விவாதம் வரும்போதும் அதனை எதிர்த்து குரல் எழுப்பி இருக்கிறேன்.
பொதுத் துறை வங்கிகளின் NPA பிரச்சனை குறித்து பாஜக, இடதுசாரிகள், வங்கி ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட எவரும் வாய் திறப்பதில்லை.
தற்போதைய நிலையில் தன்னிச்சயாக கடனளிக்கும் அதிகாரம் பொதுத்துறை அலுவலர்களுக்கு வழங்கப்பட வில்லை. சட்ட நெருக்கடிகள் மற்றும் பல்வேறு விதிகள் அவர்களை நெருக்கடிக்குள் ஆக்குகிறது. இப்படியே போனால், எதிர்காலத்தில் பொதுத் துறை வங்கிகள் அரசின் கணக்கு வழக்குகளை மட்டுமே பார்த்து கொண்டிருக்கும். கார்ப்பரேட் கடன்கள் மொத்தமும் தனியார் வங்கிகளின் கைகளுக்கு சென்று விடும்.
பொதுத்துறை வங்கிகளில் பணியாற்றும் அனைத்து அலுவலர்கள் மற்றும் ஊழியர்களையும் நான் கழிசடை என கூறவில்லை.
ஆனால் கழிசடை எனக் விமர்சனம் செய்ததில் எனக்கு தவறாக தெரியவில்லை. எனவே அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்.
அரசு பதவிகளில் எனக்கு ஆசை இல்லை. அழுத்தத்தின் காரணமாகவே ரிசர்வ் வங்கி வாரிய இயக்குனர் பதவியில் நீடிப்பதாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி விளக்கம்
* காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தில் வடகலை பிரிவினரும் வேதபாராயணம் பாட அனுமதி - சென்னை உயர் நீதிமன்றம்.
முதல் 3 வரிசைகளில் தென்கலை பிரிவினரும், அவர்களுக்குப் பின்னர் வடகலை பிரிவினரும், பின்னர் சாதாரண பக்தர்களும் அமர அனுமதிக்க வேண்டும் - நீதிபதி உத்தரவு.
* பேரறிவாளன் வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு.
பேரறிவாளனை முன் கூட்டியே விடுதலை செய்யக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.
No comments:
Post a Comment