தைலாபுரம் பாமக அரசியல் பயிலரங்கதில் இருந்து மத்திய அமைச்சர்களும் தப்பவில்லை! - மருத்துவர் இராமதாசு அய்யாவின் நினைவுகள்.
தைலாபுரத்தில் உள்ள பா.ம.க. அரசியல் பயிலரங்கத்தில் நடத்தப்படும் பயிற்சி என்பது பாட்டாளி தொண்டர்களுக்கு மட்டுமானது அல்ல.... பா.ம.க. மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கும் இந்த பயிற்சி உண்டு. பயிற்சியில் கலந்து கொள்ளும் பா.ம.க., மாநில, மாவட்ட நிர்வாகிகள் அதுகுறித்த தேர்வையும் எழுதி தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.
மத்திய அமைச்சர்களும் இந்த பயிற்சியிலிருந்து தப்ப முடியவில்லை. 2004-ஆம் ஆண்டு ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்புகளில் அப்போது மத்திய அமைச்சர்களாக இருந்த என்.டி.சண்முகம், ஏ.கே.மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். பா.ம.க.வைச் சேர்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் தேர்வுகளையும் எழுதி சான்றிதழ்களை என்னிடமிருந்து பெற்றார்கள். ஒரு பயிற்சி முகாமில் பங்கேற்றவர்கள் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் அணிவகுத்து வந்தனர்.
இவ்வாறாக, பா.ம.க. அரசியல் பயிலரங்கத்தில் அளிக்கப்பட்ட பயிற்சிகள் குறித்து இன்னும் சுவையான செய்திகள் ஏராளமாக உள்ளன. அவை குறித்தெல்லாம் விரிவாக எனது முகநூல் பக்கத்தில் எழுதவுள்ளேன். படித்து அறிய காத்திருங்கள்!
No comments:
Post a Comment