அக்னிப்புரட்சி இன்றைய (18.05.2022) முக்கிய செய்திகள்.
* கடலூர் : சிதம்பரம் தில்லை நகர் பகுதியில் ஆயுதப்படை காவலர் பெரியசாமி(26) என்பவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை.
தனியார் பள்ளியில் +2 வினாத்தாள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு பாதுகாப்பு பணியில் இருந்தப்போது தற்கொலை.
* கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை கைது செய்தது சிபிஐ.
கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை நடத்திய நிலையில், நள்ளிரவில் பாஸ்கர ராமன் கைது.
* தருமபுரி: ஒகேனக்கலில் நீர் வரத்து திடீர் அதிகரித்துள்ளதால், பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை;
சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் - மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி.
* தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் விசாரணை அறிக்கை சமர்பிப்பு.
ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை அறிக்கை முதலமைச்சரிடம் சமர்பிப்பு.
* முதலமச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் முதல் கூட்டம் தொடங்கியது.
மத்திய அரசின் திட்டங்கள் மாவட்ட அளவில் நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது
🔴 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனுக்கு விடுதலை - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
உச்ச நீதிமன்ற தீர்ப்பால் பேரறிவாளனின் 31 ஆண்டுகால சட்டப்போராட்டம் முடிவுக்கு வந்தது
கருணை மனுக்கள், சட்டப்பேரவை தீர்மானத்தின் மீதான முடிவுகளை ஆளுநர்கள் எடுப்பதற்கு கால நிர்ணயம் செய்யப்படவில்லை என்றாலும், ஆளுநர்கள் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும்: உச்சநீதிமன்றம்
மாநில அரசு ஒரு முடிவெடுத்து அதை ஆளுநருக்கு அனுப்பி வைத்தால் அதற்கு ஒப்புதல் அளிப்பது மட்டும்தான் ஆளுநர் உடைய வேலை அதில் தனது சொந்த கருத்துக்களை அல்லது சொந்த முடிவை எடுக்க அவருக்கு அதிகாரம் இல்லை - உச்சநீதிமன்றம்
* பேரறிவாளன் விடுதலை குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், ரவிச்சந்திரன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 6 பேரின் விடுதலைக்கான ஆணையை உச்ச நீதிமன்றத்திலிருந்து தமிழக அரசே பெற முடியும்- பாமக நிறுவனர் ராமதாஸ்.
* பேரறிவாளன் விடுதலைக்காக குரல்கொடுத்த மனிதநேயமிக்க அனைவருக்கும் நன்றி - தந்தை குயில்தாசன்.
* பேரறிவாளன் விடுதலை தமிழக அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி
பேரறிவாளன் விடுதலைக்காக தமிழக முதல்வர் மிகவும் பிரயத்தனப்பட்டார்
தமிழக முதல்வர் கனிவோடு பேரறிவாளன் விடுதலையை கவனித்தார் - தமிழக அரசு வழக்கறிஞர்
* எந்த தவறும் செய்யாமல், இந்த இளைஞனுடைய இளமைக்கால வாழ்க்கை, சீர்குலைக்கப்பட்டு விட்டது. இப்போது, உச்சநீதிமன்றம் நீதியை நிலைநாட்டி இருக்கின்றது; மகிழ்ச்சி.
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது போலவே, மற்ற 6 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும்- வைகோ.
* பேரறிவாளன் விடுதலைக்கு குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி - பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள்.
பேரறிவாளன் விடுதலைக்காக 31 ஆண்டு காலம் போராடியுள்ளோம்.
முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் - அற்புதம்மாள்.
* எங்களுடைய சட்டப்போராட்டத்தில் மிகப் பெரிய திருப்புமுனை தங்கை செங்கொடி மரணம்தான்.
* உலகத் தமிழர்கள் அனைவரும் என்னை தங்கள் வீட்டு பிள்ளையாக பார்த்தனர்.
எதிர்காலம் குறித்து உறவினர்கள், நண்பர்களுடன் ஆலோசித்து முடிவு - பேரறிவாளன்.
* பேரறிவாளனின் தனிமனிதனுக்கான தீர்ப்பு மட்டுமல்ல, கூட்டாட்சி தத்துவத்திற்கும், மாநில சுயாட்சிக்கும் இலக்கணமாகவும் அமைந்துவிட்ட இந்த தீர்ப்பு வரலாற்றில் மீண்டும் மீண்டும் நினைகூரத்தக்கது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
* பேரறிவாளன் விடுதலை குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்
கூட்டாட்சி தத்துவத்திற்கும், மாநில சுயாட்சிக்கும் இலக்கணமாக அமைந்த தீர்ப்பு - முதல்வர் ஸ்டாலின்
நீதி, சட்டம், அரசியல், நிர்வாகவியல் வரலாற்றில் இடம்பெறத்தக்க தீர்ப்பு.
இந்த தீர்ப்பின் மூலம் மாநிலத்தின் உரிமை மிக கம்பீரமாக நிலைநாட்டப்பட்டுள்ளது.
மாநில அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது.
இந்தியா முழுமைக்கான மாநில சுயாட்சி, கூட்டாட்சி தத்துவத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி - முதல்வர் ஸ்டாலின்.
சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து மீதம் உள்ள 6 பேர் விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - முதலமைச்சர்
* ஒரு தாயின் அறப்போர் வென்றது. அற்புதம் அம்மாளின் நெடும்போருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி.
அனைத்து சனநாயக சக்திகளின் நல்லாதரவு மற்றும் தமிழக அரசு நல்கிய ஒத்துழைப்பால் விளைந்த நீதி.
நீதிபதிகளின் நேர்மைக்கு பாராட்டுகள்- தொல்.திருமாவளவன்.
* முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி அவர்களை கொன்ற கொலையாளிகள் எழுவரை உச்சநீதிமன்றம் தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்தது.
அதே உச்சநீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை.
அதேநேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம்- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி.
பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு.
வெள்ளை துணியால் வாயைக் கட்டிக் கொண்டு நாளை அறப்போராட்டம் நடைபெறும். நாளை காலை 10 மணி முதல் 11 மணி வரை அறப்போராட்டம் நடத்த கட்சியினருக்கு கே.எஸ்.அழகிரி அழைப்பு.
* புரட்சித் தலைவி அம்மாவின் துணிச்சலுக்கும், தொலைநோக்கு சிந்தனைக்கும், சட்ட ஞானத்திற்கும் கிடைத்த மகத்தான வெற்றி; நிகரற்ற தலைவர் புரட்சி தலைவி அம்மாவின் நிர்வாகம் துணிச்சல் மிகுந்தது என்பது மீண்டும் நிரூபணம்-பேரறிவாளன் விடுதலை குறித்து இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் கூட்டறிக்கை.
* தமிழ்நாடு மக்களிடமிருந்து அன்புடன்!!!!
இலங்கை மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் புறப்பட்டது.
சென்னை துறைமுகத்தில் இருந்து கொடி அசைத்து அனுப்பி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முதற்கட்டமாக 9,500 டன் அரிசி, 200 டன் பால் பவுடர், 30 டன் மருந்து பொருட்கள் அனுப்பி வைப்பு.
* முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பேரறிவாளன் சந்திப்பு.
பேரறிவாளனை கட்டியணைத்து வரவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முதலமைச்சரை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது; நான் இப்போது சுதந்திர காற்றை சுவாசிக்க போகிறேன் - பேரறிவாளன்
* பேரறிவாளனை விடுதலை செய்து தமிழக அரசு அறிவிப்பு
* சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி உடன் பேரறிவாளன் சந்திப்பு.
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியை பேரறிவாளன், அவரது தாயார் அற்புதம்மாள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
* சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் உடன் பேரறிவாளன் சந்திப்பு
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து பேரறிவாளன், அவரது தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்தனர்
No comments:
Post a Comment