அக்னிப்புரட்சி இன்றைய (19.05.2022) முக்கிய செய்திகள்.
* அரசுப் பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3,000 ஆசிரியர்களுக்கு மேலும் ஓராண்டு கால பணி நீட்டிப்பு வழங்கியது பள்ளிக்கல்வித்துறை; ஊதியம், இதர படிகளை வழங்கிடவும் அரசாணை வெளியீடு
* சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கி அரசாணை.
இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் கருத்தினை அரசு பரிசீலனை செய்து நடவடிக்கை.
பக்தர்களின் கோரிக்கை மற்றும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி விதிகளை பின்பற்றி தரிசனம் செய்ய அனுமதி.
* தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு!
17 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
தென் பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம்; சிதம்பரம் காந்தி சிலை முன்பு கே.எஸ்.அழகிரி தலைமையில் கட்சியினர் வாயில் வெள்ளைத்துணி கட்டி ஆர்ப்பாட்டம்
* 1988ம் ஆண்டு அதிவேகமாக வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்திய வழக்கில், பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை - உச்சநீதிமன்றம் உத்தரவு.
* கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபடுவது குறித்த தமிழக அரசின் உத்தரவு கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.
சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை விவகாரம் குறித்த ஆலோசனை கூட்டத்தில் கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங் உறுதி.
தீட்சிதர்களை கேட்காமலேயே தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது - தீட்சிதர்கள் தரப்பு வாதம்
தமிழக அரசின் உத்தரவை வைத்து சட்ட ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கூடுதல் ஆட்சியர் எச்சரிக்கை.
* தமிழன் அதனால் விடுதலை செய்ய வேண்டும் என பேரறிவாளனுக்கு ஆதரவாக குரலெழுப்புபவர்கள் கூறுகின்றனர்;
ஒரு தமிழன் கொலை குற்றத்திற்கு உள்ளானால் அவனை விடுதலை செய்துவிட வேண்டும் என்பது நியதியா?-தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.
பேரறிவாளனின் தாயார் நீண்ட சட்டப்போராட்டத்தை நடத்தி வெற்றி பெற்றிருப்பதாக சிலர் கூறுகின்றனர்.
அற்புதம்மாளின் மனநிலையை நான் அறிவேன், அதேபோல ராஜீவ் காந்திக்கும், அவருடன் மரணித்த 17 பேருக்கும் தயார் இருக்கின்றனர். அவர்களுடைய மனநிலையை யார் அறிவார்கள்?
கன்றுக் குட்டியை கொன்றான் என்பதற்காக தன்னுடைய மகனுக்கே தண்டனை அளித்த தமிழ் மன்னன்தான் மனுநீதி சோழன்;
தமிழ்நாட்டின் சரித்திரம் அப்படிதான் இருந்திருக்கிறது-தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.
* மாநிலங்களவை தேர்தலில் அ.தி.மு.க. ஆதரவு கேட்ட நிலையில் பா.ம.க குழு ஆய்வு செய்து அ.தி.மு.க.விற்கு ஆதரவு என பா.ம.க தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு
* விசா முறைகேடு வழக்கு:
காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை 4 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி
* உச்ச நீதிமன்றம் அடுத்தடுத்து அளித்த 2 தீர்ப்புகள் மாநில அரசின் உரிமைகள், சட்டமன்ற உரிமைகளை எடுத்துக்கூறியுள்ளது; இது ஒரு திருப்புமுனை - மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி.
ஜி.எஸ்.டி. கவுன்சில் ஒரு முடிவை ஒன்று கூடி பரிசீலனை செய்து மாநில அரசுக்கோ, ஒன்றிய அரசுக்கோ அனுப்பக் கூடிய அமைப்பே என்பதை உச்ச நீதிமன்ற தீர்ப்பு தெளிவுபடுத்தியுள்ளது.
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் பரிந்துரையை மாநிலங்கள், ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அதனை கட்டாயப்படுத்தும் உரிமை இல்லை.
இன்றுவரை ஜி.எஸ்.டி. கவுன்சிலின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டே வருகிறோம்; இனி மாநிலங்கள் அதனை ஏற்றுக்கொள்வது சட்டத்திற்காக அல்ல, விருப்பத்திற்காக மட்டுமே இருக்கும் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
* குன்னூரில் திமுக தொண்டர்கள் இடையே முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
கோடை விழாவில் கலந்து கொள்ள உதகை செல்லும் வழியில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு
திமுக ஆட்சியில் பெண்களுக்காக அற்புதமான திட்டங்கள் நிறைவேற்றம்
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் உங்களை சந்திப்போம் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு உங்களை முதல் முறையாக சந்திக்க வந்துள்ளேன்
உங்கள் அன்புக்கும், பாசத்திற்கும் நான் கட்டுப்பட்டுள்ளேன் - முதல்வர் ஸ்டாலின்
இந்நிலையில் உதகையில் தோடர் இன மக்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடனமாடி, செல்ஃபி எடுத்து உற்சாகம்.
* சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் பக்தர்கள் அனுமதி
கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய காவல்துறை பாதுகாப்புடன் பக்தர்களுக்கு அனுமதி
* பிரதமரின் 'விரைவு சக்தி' (GATI Sakthi) தேசிய பெருந்திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டம் மப்பேட்டில் 159 ஏக்கர் நிலத்தில் அமையவிருக்கும் பன்முனை சரக்கு பூங்காவிற்கு அடிக்கல் நாட்டுவதற்காக வருகிற 26ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகம் வருகிறார்.
பன்முனை சரக்கு பூங்கா எதற்கு?
பொருளாதார ரீதியாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்தியாவின் சரக்கு போக்குவரத்து கடந்த 10 ஆண்டுகளில் இரு மடங்கு உயர்ந்துள்ளது. வரும் 10 ஆண்டுகளில் இது மேலும் இரு மடங்காக உயரக்கூடிய நிலையில் நம் போக்குவரத்து கட்டமைப்புகளை சீரமைப்பது அவசியமானது மட்டுமல்ல, அவசரமும் கூட.
இந்தியாவில் சரக்கு போக்குவரத்து செலவு உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 13 சதவீதமாக உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. மற்ற முக்கிய நாடுகளில் இது 8 சதவீதமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய ஏற்றுமதியாளர்கள் கோடிக் கணக்கான பணத்தை சரக்கு போக்குவரத்திற்காக செலவழிக்கின்றனர். இதன் காரணமாக நம் நாட்டின் தயாரிப்புகள் மற்ற நாடுகளின் தயாரிப்புகளை விட விலை அதிகமாக உள்ளதால், இந்திய ஏற்றுமதியின் போட்டித்தன்மை வெகுவாக பாதிக்கப்படுவதோடு, வேளாண் துறையிலும் நமது விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
ரயில் மூலம் சரக்குகளை கொண்டு சென்றால், செலவும் குறைவதோடு, நேரமும் சேமிக்கப்படும் என்ற போதிலும் உரிய கட்டமைப்புகள் இல்லாததால், 60 சதவீத பொருட்கள் சாலை மார்க்கமாகவே நமது நாட்டில் கொண்டு செல்லப்படுகின்றன. பொருட்களை கொண்டு செல்ல தேவைப்படும் அளவிற்கு சாலைகளுக்கேற்ற வாகனங்களும், வாகனங்களுக்கேற்ற சாலைகளும் முறையாக இல்லை என்பதால் தாமதம் ஏற்படுத்துவதோடு பல சிக்கல்களை உருவாக்குகிறது. மேலும், இந்த பொருட்களை பாதுகாக்க நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கிடங்குகள், குளிர்பதன கிடங்குகள் ஆகிய கட்டமைப்புகள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதை சமாளிக்கவே, 'அதி விரைவு சக்தி' (GATI Sakthi) தேசிய பெருந்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதில் ஒரு பகுதியாகவே, 35 பன்முனை சரக்கு பூங்காக்களை நாடு முழுக்க அமைக்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம். இதன் மூலம் சென்னையில் உள்ள துறைமுகங்கள், விமான நிலையம் ஆகியவற்றை ரயில் மற்றும் சாலை போக்குவரத்தோடு இணைக்கும் முனையமாக மெப்பேடு பூங்கா செயல்படும். இதன் மூலம் தமிழகத்தில் சரக்கு போக்குவரத்து தொய்வின்றி, விரைவாக, குறித்த நேரத்தில் சென்றடைவதோடு , எரிபொருள் மற்றும் போக்குவரத்து செலவை குறைக்கும். சென்னையில், வாகனங்களால் ஏற்படும் மாசு குறையும்.
சென்னை துறைமுகத்திற்கு சொந்தமான 158 ஏக்கர் பரப்பளவில் 1200 கோடி ரூபாய் மதிப்பில் அமைகின்ற இந்த பூங்காவானது பத்தாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும். அந்த பகுதியே இனி சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய நிலையில், பல்வேறு சிறு குறு வர்த்தகம் வளரும். தமிழக தொழில்துறை மற்றும் தமிழக வர்த்தகம் மேம்படுவதோடு, தமிழக உற்பத்தியாளர்கள் மற்றும் தமிழக விவசாயிகள் இந்த 'அதிவிரைவு சக்தி' தேசிய பெருந்திட்டத்தின் மூலம் அதிக பயனடைவது உறுதி செய்யப்படுகிறது. இதுபோன்று தமிழகத்திற்கு வளர்ச்சி திட்டங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு, நதிநீர் இணைப்பு திட்டங்கள், விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சி திட்டங்கள், மத்திய மோடி அரசு வழங்குகிறது.
* காஞ்சிபுரம் ஒரகடம் அருகே தனியார் கார் உதிரிப்பாக பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து
No comments:
Post a Comment