அக்னிப்புரட்சி இன்றைய (22.05.2022) முக்கிய செய்திகள்.
* கலால் வரியை மத்திய அரசு குறைத்ததை அடுத்து பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல், ₹8.22 குறைந்து ₹102.63-க்கு விற்பனை; ஒரு லிட்டர் டீசல், ₹6.70 குறைந்து ₹94.24-க்கு விற்பனை.
* இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம்
இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோருக்கும் மே 23ஆம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம் என்று சென்னை போக்குவரத்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* 2014 ஆம் ஆண்டு முதல் பெட்ரோல் மீதான வரிகளை உயர்த்தியபோது, மாநில அரசுகளுடன் மத்திய அரசு கலந்தாலோசிக்கவில்லை;
இப்போது வரியை குறைத்த பிறகு மாநில அரசுகளையும் குறைக்க கோருகின்றனர். இதுதான் கூட்டாட்சியா? - அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன்
* நூல் விலையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று முதல் 15 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்!
மக்கள் நலனை கருதி பெட்ரோல் - டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும். தமிழக அரசுக்கு அதிமுக
ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்.
மத்திய அரசின் வரி குறைப்பு உள்ளிட்ட அறிவிப்புகளை வரவேற்கிறேன் - ஓபிஎஸ்.
* கொரோனா கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைபிடிக்க தொழில் நுட்ப கல்வி நிலையங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருகையின் போது “தெர்மல் ஸ்கேனிங்” மூலம் உடல் வெப்பநிலை கண்டறிய வேண்டும்.
முக கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். கிருமி நாசினி மூலம் கைகளை அவ்வபோது சுத்தம் செய்து கொள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும்.
மாணவர்கள் மற்றும் ஊழியர்களிடையே சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க அறிவுறுத்தல் வழங்க வேண்டும்.
கல்வி நிறுவனங்களின் வளாகங்கள் மற்றும் மாணவர்களுக்கு பயன்படுத்தப்படும் பேருந்துகள் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும்.
மாணவர்கள் அல்லது ஊழியர்கள் யாரேனும் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டால் உடனடியாக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவரை சார்ந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கு தடை விதிக்க வேண்டும்.
மாணவர்கள் அல்லது ஊழியர்களில் யாரேனும் குடும்பத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தால் கூட அந்நபரை கல்வி நிறுவனங்களில் நேரடியான வகுப்புகளில் கலந்து கொள்வதற்கு அனுமதிக்க கூடாது.
அனைவரும் கட்டாயம் “ஆரோக்கிய சேது” செயலியை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்.
இந்தியாவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு தங்கள் படிப்பை தொடரும் வகையில் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்.
கல்வி நிலையத்தின் வளாகம்,கேண்டின் உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
அதேபோல, பயன்படுத்தப்படும் முக கவசங்கள் உள்ளிட்டவற்றை முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில்.
* எரிபொருள் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்த நிலையில், தமிழ்நாடு அரசுக்கும் குறைக்க வேண்டிய கடமை உண்டு.
எரிவாயு சிலிண்டர் வைத்திருக்கும் அனைத்து ஏழை மக்களுக்கும் மானியம் அறிவிக்க வேண்டும் - பாமக நிறுவனர் இராமதாசு அய்யா வலியுறுத்தல்.
* கடந்த 6 மாதங்களில் பெட்ரோல் விலை 14 ரூபாய், டீசல் விலை 17 ரூபாய் என மத்திய அரசு குறைத்துள்ளது.
இதனால் 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் - டீசல் விலையை குறைப்பதாக சொல்லி இருந்தது.
72 மணி நேரத்தில் தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை இந்த அரசு செய்ய வேண்டும்.
இல்லை என்றால் கோட்டையை முற்றுகையிடுவோம்- அண்ணாமலை.
* பொறியியல் படிப்புகளுக்கான கட்டனம் அதிகரிப்பு புதிய கட்டண விகிதத்தை வெளியிட்டது AICTE:
B.E., B.Tech., B.Arch., படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.79,600 ஆக நிர்ணயம். அதிகபட்சரமாக ரூ.1,89,800 ஆக நிர்ணயம்.
பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்பதற்கான கட்டணமும் உயர்வு
டிப்ளமோ படிப்புகளுக்கு குறைந்தபட்சமாக ஒரு செமஸ்டருக்கு ரூ.67,900, அதிகபட்சமாக ரூ.1,40,900 என்று நிர்ணயம்.
முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான கட்டனம் அதிகரிப்பு;
M.E., M.Tech., M.Arch., படிக்க ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்சமாக ரூ.1,41,200, அதிகபட்சமாக ரூ.3,04,000 என்று கட்டணம் நிர்ணயம்.
3 ஆண்டு MCA படிப்புக்கு குறைந்தபட்சமாக ரூ.88,500, அதிகபட்சமாக ரூ.1,94,100ஆக கட்டணம் நிர்ணயம்
2 ஆண்டு MBA படிப்புக்கு குறைந்தபட்சமாக ரூ.85,000, அதிகபட்சமாக ரூ.1,95,200ஆக கட்டணம் நிர்ணயம்.
* தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு:
கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் சேர்ப்பு.
ரிஷப் பண்ட்(துணை கேப்டன்), இஷான் கிஷன், தீபக் ஹுடா, ஸ்ரேயாஸ், வெங்கடேஷ், குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகியோருக்கு அணியில் இடம்.
* பெட்ரோல், டீசல் விலை இனி நாள்தோறும் மீண்டும் உயரும் - ராகுல் காந்தி.
'பெட்ரோல், டீசல் விலை இனி நாள்தோறும் மீண்டும் ரூ 0.80, ரூ.0.30 என உயரத் தொடங்கும்”மத்திய அரசு மக்களை ஏமாற்றுவதை நிறுத்த வேண்டும்.
2020 ஆம் ஆண்டு மே மாதம் ரூ.69.50 க்கு விற்பனையான பெட்ரோல் விலை தற்போது ரூ 96.70 க்கு விற்பனை- காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி.
* இந்தியாவில் கொரோனா தொற்றின் BA.4 மற்றும் BA.5 திரிபால் பாதிக்கப்பட்ட தொற்றாளர்களை கண்டறிந்துள்ளதாக INSACOG தெரிவித்துள்ளது.
* தருமபுரம் ஆதீனம் பட்டணப் பிரவேசம்.
பலத்த எதிர்பார்ப்புக்கிடையே மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப்பிரவேசம் நடைபெற்று வருகிறது.
பட்டணப் பிரவேச நிகழ்ச்சிக்காக திருமடம் மின்விளக்குகள், வாழை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
* நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கிய 6வது நபரின் உடல் மீட்பு.
கற்குவியல்களுக்கு கீழே சிக்கியிருந்த ராஜேந்திரன் என்பவரின் உடலை மீட்புக்குழுவினர் மீட்டனர்.
ஆறாவது நபரும் மீட்கப்பட்டதால் 8 நாட்களாக நடந்த மீட்புப் பணி நிறைவு.
No comments:
Post a Comment