அக்னிப்புரட்சி இன்றைய (23.05.2022) முக்கிய செய்திகள்.
* அண்ணாமலை சொந்த ஊரை தாண்ட முடியாது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எச்சரிக்கை.
72 மணி நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை எனில் கோட்டையை முற்றுகையிடுவோம் என்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பேச்சு தொடர்பாக எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச்சு.
இது திமுக ஆட்சி. சொன்னதை செய்து காட்டியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உங்களது மிரட்டல்களுக்கு திமுக அஞ்சாது.
கர்நாடகத்தில் உள்ள அரசுக்கு சல்யூட் அடித்த அண்ணாமலை சொந்த ஊரான கரூர் மாவட்டத்தையே தாண்ட முடியாது.
கர்நாடகாவில் இருந்து காவிரி நீரைத் தமிழகத்துக்கு கொடுக்கக் கூடாது என பேசிய அண்ணாமலை, தற்போது தமிழக பாஜக தலைவர்.
இவர் தமிழகத்துக்கு என்ன செய்யப் போகிறார். மதக்கலவரத்தை உருவாக்க பார்க்கிறார் அண்ணாமலை.
இது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி. சவாலுக்கு பயப்பட மாட்டோம் -எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
* ஆஸ்திரேலிய பிரதமர் தேர்தலில் தொழிலாளர் கட்சி தலைவர் அந்தோனி நார்மன் அல்பேனீஸ் வெற்றி - புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
நாட்டின் 31வது பிரதமரான அவருடன் 2 பெண்கள் உள்பட 4 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
* டெல்லி: சூறைக்காற்று மற்றும் மழை காரணமாக 40க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படுவதில் தாமதம்.
விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய பல்வேறு விமானங்கள் ஜெய்ப்பூர் மற்றும் அண்டை மாநில விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
* தமிழகத்தில் வரும் ஜூன் 2ம் தேதி மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் அறிவிப்பு.
* கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம். சென்னை, தலைமை செயலகத்தில் இருந்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இருபோக சாகுபடி பரப்பை 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்த திட்டம், பயிர்களின் உற்பத்தித் திறனில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களை அடைய இலக்கு.
1,997 கிராமப் பஞ்சாயத்துகளில் 9 லட்சம் விவசாய குடும்பங்கள் பயன்பெறும்.
* நாட்டையே உலுக்கிய விஸ்மயா தற்கொலை வழக்கு - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.
வரதட்சணை கொடுமையால் கேரளவை சேர்ந்த விஸ்மயா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் கிரண்குமார் குற்றவாளி என தீர்ப்பு.
தன் தந்தையிடம் அழுது கொண்டே பேசிய ஆடியோவை நீதிமன்றம் சாட்சியாக வைத்து கணவர் கிரண் குமார் குற்றவாளி என தீர்ப்பு.
கிரண்குமாரின் தண்டனை விவரங்கள் நாளை அறிவிக்கப்படும்-கொல்லம் கூடுதல் நீதிமன்றம்.
* சென்னை: டெல்லியில் பலத்த மழையால் சென்னை - டெல்லி இடையே இன்று 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் பல விமானங்கள் பல மணி நேரம் தாமதத்தால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் தவித்து வருகின்றனர்.
* திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 28ம் தேதி நடைபெறும்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்-திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் விழா குறித்து ஆலோசனை.
* மிரளவைத்த சிதம்பரம் போராட்டம்:
கடலூர்: சிதம்பரம் நடராஜர், தில்லை காளி ஆகிய சுவாமிகள் நடனத்தை அவதூறாக ஒளிபரப்பிய விவகாரம்.
யூடியூப் சேனல் மீது நடவடிக்கை கோரி சிதம்பரத்தில் 10,000 க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் குவிந்து கண்டன ஆர்ப்பாட்டம்.
* பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுகிறது - இபிஎஸ்
திமுக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுகிறது.
தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் அளித்த புகாரில் ஜூனியர் விகடன் இயக்குநர்கள் மீது வழக்குப்பதிவு.
பொய் புகாரை வழக்காக பதிவு செய்து ஊடகங்களை மிரட்டும் போக்கு கண்டனத்திற்குரியது- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.
* டெல்லிக்கு புதிய துணைநிலை ஆளுநர் நியமனம்:
டெல்லியின் புதிய துணைநிலை ஆளுநராக வினய் குமார் சக்சேனாவை நியமனம் செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு.
துணைநிலை ஆளுநர் பதவியில் இருந்து அனில் பைஜால் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து குடியரசு தலைவர் நடவடிக்கை.
* குரங்கு அம்மை பாதிப்புள்ள நாடுகளுக்கு கடந்த 21 நாட்களில் சென்று வந்தவர்கள் தகவல் தர வேண்டும்.
வெளிநாட்டில் குரங்கு அம்மை, அறிகுறி உள்ளோருடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனே தகவல் தர வேண்டும்.
குரங்கு அம்மை பாதிப்பு என சந்தேகத்திற்கிடமான அனைத்து நோயாளிகளும் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
குரங்கு அம்மை அறிகுறி என சந்தேகம் இருந்தால் ரத்தம், சளி மாதிரிகள் புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்படும்.
குரங்கு அம்மை கண்டறியப்பட்டால், அவருடன் 21 நாள் தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறிய வேண்டும்- அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாநகராட்சி ஆணையர்களுக்கும் தமிழக மருத்துவத்துறை செயலர் கடிதம்.
No comments:
Post a Comment