அக்னிப்புரட்சி இன்றைய (24.05.2022) முக்கிய செய்திகள்.
* அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
தமிழகத்தில் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கான 1,000 இடங்கள் காலியாக உள்ள நிலையில் அதனை நிரப்புவதற்கான கலந்தாய்வு.
இன்று முதல் 6 நாட்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவிப்பு.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் இன்று காலை 10 மணிக்கு மருத்துவக் கலந்தாய்வு தொடங்குகிறது.
* நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இன்னும் 20-30 வருடங்களுக்கு பாஜகவை மையப்படுத்தியே இந்திய அரசியல் சுழலும்- பிரபல தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோர்.
இந்திய அரசியலில் பாஜக மிகப்பெரிய சக்தியாக உருவாகியுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.
எந்தவொரு விஷயமோ அல்லது கருத்தியலோ அதன் உச்சத்தை அடைந்த பின்னர் கட்டாயம் அது சரிவை சந்திக்கும் என்பதுதான் விதி.
எனவே பாஜகவுக்கும் இந்த நிலை ஏற்படும் என பலரும் கருதுகின்றனர்; இதனை நானும் ஒத்துக் கொள்கிறேன்.
ஆனால் இந்த விஷயம் இப்போது உடனே நடைபெற்றுவிடாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
அதாவது, பாஜகவின் சரிவானது அடுத்த 5 அல்லது 10 வருடங்களுக்குள் நடைபெறாது.
அகில இந்திய அளவில் ஒரு கட்சியால் 30 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற முடிகிறது என்றால், அக்கட்சி அவ்வளவு எளிதில் வலுவிழந்து விடாது.
அதற்காக, இனி வருகிற அனைத்து தேர்தல்களிலும் பாஜகவே வெற்றி பெறும் என நான் கூறவில்லை.
ஆனால், அடுத்த 20 - 30 வருடங்களுக்கு பாஜகவை மையப்படுத்திதான் இந்திய அரசியல் சுழலும் என்றுதான் கூறுகிறேன்.
இன்னும் சரியாக கூற வேண்டுமென்றால், நீங்கள் அடுத்த 20 - 30 வருடங்கள் பாஜகவை ஒன்று ஆதரிக்க வேண்டும்; இல்லையெனில் எதிர்க்க வேண்டும். மாறாக அக்கட்சியை உங்களால் புறக்கணிக்க முடியாது என்ற சூழலே நிலவும்.
சுதந்திர இந்தியாவில் முதல் 40 வருடங்கள் காங்கிரஸ் இந்த நிலையில்தான் இருந்தது- பிரசாந்த் கிஷோர்.
* சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் இருசக்கர வாகனங்களில்
தலைக்கவசம் அணியாமல் சென்றதாக 3,926 பேர் மீதும் தலைக்கவசம் அணியாமல் பின் இருக்கையில் அமர்ந்து வந்ததாக 2,023 பேர் மீதும்
என மொத்தமாக 3,926 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
* தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 41வது நினைவு நாள்
தினத்தந்தி குழும தலைவர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினத்தந்தி குழும இயக்குநர் சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மரியாதை
சென்னை எழும்பூரில் உள்ள சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
* தமிழகத்தில் இருந்து ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் - தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடிதம்
* கும்மிடிப்பூண்டியில் லிப்ட் அறுந்து விழுந்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு.
அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் விக்னேஷ் சிகிச்சை பலனின்றி மரணம்.
ஏற்கனவே பள்ளி மாணவன் இறந்த நிலையில், தற்போது மற்றொருவர் உயிரிழப்பு.
* சென்னையில் கடந்த 20 நாட்களில் மட்டும் 18 கொலைகள் நடந்துள்ளது.
இது போன்ற நிகழ்வுகளால் தலைநகர் கொலைநகராக மாறி, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மக்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகி இருக்கிறது- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.
* டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முதல் முறையாக முன்கூட்டியே மே மாதத்தில் மேட்டூர் அணை திறக்கப்படுகிறது.
12 டெல்டா மாவட்டங்களில் 16.5 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
முன்கூட்டியே நீர் திறப்பதால், குறுவை சாகுபடி பரப்பு அதிகரிக்கக்கூடும்.
ஜூன் 12ம் தேதி திறக்கப்படும் அணை இம்மாதம் முன் கூட்டியே திறக்கப்படுகிறது
* கேரளாவை உலுக்கிய விஸ்மயா வழக்கு - குற்றவாளியான கணவர் கிரண்குமாருக்கு 10 ஆண்டு சிறை - கொல்லம் கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு
வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்த விஸ்மயாவின் கணவருக்கு 10 ஆண்டு சிறை, ₨12.5 லட்சம் அபராதம் விதிப்பு
* பஞ்சாப் மாநிலத்தில் பதவிநீக்கம் செய்யப்பட்ட சுகாதார அமைச்சர் விஜய் சிங்கலா ஊழல் புகாரில் கைது.
அரசு ஒப்பந்தங்களுக்கு 1% கமிஷன் கேட்டதாக புகார் எழுந்த நிலையில் ஆதாரங்கள் கிடைத்ததால் நடவடிக்கை.
* சேலம், செல்லியம்பாளையத்தில் நடைபெறும் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு:
தமிழ்நாட்டை திமுக அரசு தலைநிமிர வைத்திருக்கிறது. வீழ்ச்சியுற்று இருந்த தமிழ்நாடு, இன்று எழுச்சியுற்றுள்ளது.
ஊர்ந்து கொண்டிந்த தமிழ்நாட்டை, ஓராண்டு திமுக அரசு நெஞ்சை நிமிர வைத்திருக்கிறது.
மதத்தின் பெயரில் ஆட்சிக்கு எதிராக அவதூறுகளை பரப்பி வருகின்றனர். யாருக்கும் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.
மக்களுக்காக என் சக்தியையும் மீறி உழைப்பேன், உழைத்துக்கொண்டே இருப்பேன்.
என்னுடைய இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறேன், மக்களுக்கு நன்மை செய்யவே நேரம் பத்தவில்லை.
ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி தனது சொந்த மாவட்டத்திற்கும், தொகுதிக்கும் கூட எதையும் செய்யவில்லை.
திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை குறைக்கப்படும் என அறிவித்தபோது, இதற்கு வாய்ப்பே இல்லை என்றார்கள்.
ஆட்சிக்கு வந்த உடனே பெட்ரோல் விலையை குறைத்தது திமுக அரசு.
மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை குறைக்கும் போது, மாநில வரியும் குறையும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அதிமுக ஆட்சியில் ஒரே ஒரு முறைதான் ஜூன் மாதம் மேட்டூர் அணை திறக்கப்பட்டது.
திமுக ஆட்சியில் கடந்த ஆண்டு சரியாக ஜூன் மாதம் மேட்டூர் அணை திறக்கப்பட்டது.
இயற்கை திமுக ஆட்சிக்கு கொடுத்த வரத்தால், இந்தாண்டு மே மாதமே மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
* சென்னை துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு சொகுசு கப்பல் சேவை - வரும் 4ம் தேதி தொடங்கி வைக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர்..
* சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி ரத்து நாளை அமலுக்கு வருகிறது.
சூரிய காந்தி எண்ணெய், சோயா எண்ணெய் இறக்குமதிக்கான சுங்க வரி மற்றும் செஸ் வரியை ரத்து செய்தது மத்திய அரசு.
2024 மார்ச் வரை ஆண்டுக்கு 20 லட்சம் மெட்ரிக் டன் சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு செஸ் மற்றும் சுங்க வரி விலக்கு - மத்திய அரசு.
* சென்னையில் பாஜக பிரமுகர் வெட்டி கொலை:
சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் பாலசந்தர். இவர் பாஜக எஸ்சி/எஸ்டி பிரிவு மத்திய சென்னை மாவட்டத் தலைவராக இருந்து வந்தார்.
இவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் பாதுகாப்புக்காக காவலர் ஒருவரும் நியமிக்கப்பட்டிருந்தார்.
இன்று இரவு பாலசந்தர் தனது பி.எஸ்.ஓ பாலகிருஷ்ணனுடன்
சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கர் தெருவிற்கு சென்றுள்ளார்.
அங்கு பாலசந்தர் நின்று பேசிக்கொண்டிருந்த போது பி.எஸ்.ஓ பாலகிருஷ்ணன் அருகிலிருந்த டீக்கடைக்கு சென்றார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் பாலசந்தரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார், உடலை கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment