அக்னிப்புரட்சி இன்றைய (25.05.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (25.05.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (25.05.2022) முக்கிய செய்திகள்.

* அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் உவால்டேயில் உள்ள தொடக்கப் பள்ளிக்குள் புகுந்த இளைஞர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 குழந்தைகள் , ஒரு ஆசிரியர் உட்பட 21 பேர் பலி.

18 வயதான துப்பாக்கி சூடு நடத்திய நபரும் கொல்லப்பட்டார்.

* அமைச்சர் வீட்டுக்கு தீ - நீடிக்கும் பதற்றம்.

ஆந்திராவில் புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயர் வைக்க எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் வன்முறை.

அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. ஆகியோரின் வீடுகளுக்கு தீ வைத்ததால் பதற்றம்.

வன்முறை நடைபெற்ற அமலாபுரம் தொகுதிக்கு 144 தடை உத்தரவும், வன்முறை குறித்து விசாரணை நடத்தவும் ஆந்திர அரசு உத்தரவு.

* சந்தனக் கடத்தல் வீரப்பனின் சகோதரர் ஆயுள் தண்டனை கைதி மாதையன் மரணம்.

சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாதையன் உடல்நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி.

சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாதையன் மரணம்.

* நடராஜரின் ஆனந்த தாண்டவத்தை கொச்சைப்படுத்துவதா?

சிதம்பரம் நடராஜரின் ஆனந்த தாண்டவத்தை கொச்சைப்படுத்தியது கண்டிக்கத்தக்கது.

இந்துக்கடவுளை இழிவுப்படுத்திய, இந்துக்களின் மனதை புண்படுத்திய, இந்து தெய்வத்தை விமர்சித்த U2 Brutus யூடியூப் சேனலை உடனே தடைசெய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும்-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.

* ராமேஸ்வரம் அருகே கடல்பாசி சேகரிக்கச் சென்ற மீனவப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை.

இறால் பண்ணை பகுதியில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு.

சந்தேகத்தின் அடிப்படையில் 6 வடமாநிலத்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை.

* தனியார் பள்ளிகளில் RTE சட்டத்தின் கீழ் இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.

மாணவர் சேர்க்கைக்கு ஏப்ரல் 20 முதல் மே 24 வரை சுமார் 1.34 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

* எனது தலைமையில் அதிமுக செயல்படும் என 100% எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

அதிமுகவை ஒன்றிணைப்பது தொண்டர்கள் கையில்தான் இருக்கிறது.

அதிமுகவில் எல்லோரும் என்னை எதிர்த்து பேசவில்லை; ஒரு சிலர்தான் பேசுகிறார்கள் - சசிகலா

அதிமுக எதிர்க்கட்சியாக சரியாக செயல்படவில்லை. அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் என்னுடன் பேசிக்கொண்டுதான் இருக்கின்றனர்.

யார் என்பதை வெளியில் சொல்ல முடியாது. என்னை கட்சியில் இணைக்கமுடியாது என சொல்வதற்கு அவர்கள் யார்? - சசிகலா

* குற்றாலம் பேரூராட்சி தலைவராக அதிமுக கவுன்சிலர் தேர்வு:

3-வது முறையாக நடைபெற்ற குற்றாலம் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான மறைமுக தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த கணேஷ் தாமோதரன் வெற்றி பெற்றார்.

250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

* ஏற்கனவே அறிவித்தபடி 1 முதல் 10 வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு

1 முதல் 10-ம் வகுப்புக்கு ஜூன் 13-ல் பள்ளிகள் திறப்பு

12-ம் வகுப்புக்கு ஜூன் 20-ல் பள்ளிகள் திறப்பு

11-ம் வகுப்புக்கு ஜூன் 27-ல் பள்ளிகள் திறப்பு

* மாணவி சிந்துவிடம் நேரில் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை ஓமந்தூரர் அரசு மருத்துவமனையில் சிந்து சிகிச்சை பெற்று வருகிறார்

எழுந்து நடக்க முடியாத நிலையிலும் பிளஸ் 2 தேர்வு எழுதியிருந்தார் மாணவி சிந்து

மாணவி தோளில் தட்டிகொடுத்து பேசினார். முதல்வர் ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார் பள்ளி மாணவி சிந்து

* காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர் கபில் சிபல் விலகல்

காங்கிரஸில் இருந்து விலகிய கபில் சிபல் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்

சமாஜ்வாதி கட்சி ராஜ்யசபா வேட்பாளராக உ.பி.யில் கபில் சிபல் வேட்புமனுத் தாக்கல்

* தமிழகத்தில் 2022-2023 கல்வி ஆண்டில் அனைத்து சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

* நாளை தேனி செல்கிறார் வி.கே.சசிகலா

சிறையில் இருந்து வந்தபிறகு முதன்முறையாக தேனிக்கு சுற்றுப்பயணம்

சசிகலாவை அதிமுகவில் இணைக்க தீர்மானம் தேனியில் தான் நிறைவேற்றப்பட்டிருந்தது

* இளைஞர்கள்தான் நாட்டின் முதுகெலும்பாக உள்ளனர்.
நாட்டின் வளர்ச்சி இளைஞர்களை நம்பியே இருக்கிறது.

இளைஞர்களின் தகுதிக்கேற்ப அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்- சென்னை ராணி மேரி கல்லூரியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.

வேலை இல்லை என்ற நிலையும், வேலைக்கு தகுதியுள்ள இளைஞர்கள் இல்லை என்ற நிலையையும் மாற்ற முயற்சி எடுத்து வருகிறோம்.

தமிழ்நாட்டின் மாணவர்கள் மிகவும் திறமையானவர்கள்; அவர்களின் வளர்ச்சிக்கு அரசு உறுதுணையாக இருக்கும் -  முதலமைச்சர் ஸ்டாலின்.

* வரும் கல்வியாண்டின் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு

1 - 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செப். 26 - 30ம் தேதி வரை காலாண்டு தேர்வு.

11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப். 23-30ம் தேதி வரை காலாண்டு தேர்வு- பள்ளிக்கல்வித்துறை.

1-10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு டிசம்பர் 19-23ம் தேதி வரை அரையாண்டு தேர்வு.

11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 16-23ம் தேதி வரை அரையாண்டு தேர்வு.

2023 ஏப்ரல் 3ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது. 11ம் வகுப்புக்கு 2023 மார்ச் 14ம் தேதியும், 12ம் வகுப்புக்கு 2023 மார்ச் 13ம் தேதியும் பொதுத்தேர்வு நடைபெறும்- பள்ளிக்கல்வித்துறை.

* நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு.

சீன நாட்டினருக்கு விசா கிடைக்க லஞ்சம் வாங்கிய புகாரில் சி.பி.ஐ.யை தொடர்ந்து அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது.

* பிரதமர் மோடியின் சென்னை வருகையால் நாளை பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு - சென்னை போக்குவரத்து காவல்துறை

ஈ.வே.ரா.சாலை, சென்னை மருத்துவக் கல்லூரி சந்திப்பு, அண்ணா சாலை, எஸ்.வி.படேல் சாலை, ஜிஎஸ்டி சாலைகளில் செல்வதை நாளை தவிர்க்க வேண்டும்

மாற்று வழியில் பயணம் செய்ய வாகன ஓட்டிகள் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும் - சென்னை போக்குவரத்து காவல்துறை

நாளை பிரதமர் மோடி வருகையை ஒட்டி சென்னை காவல் ஆணையர் தலைமையில் 5 கூடுதல் ஆணையர்கள், 8 இணை ஆணையர்கள், 29 துணை ஆணையர்கள் உட்பட 22,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்

* தலைநகர் கொலைநகராக மாறியிருப்பதாக நேற்றுத்தான் சொன்னேன்

நேற்று மாலையே சென்னையில் அரசியல் பிரமுகர் ஒருவர் வெட்டி கொல்லப்பட்டிருக்கிறார் - எடப்பாடி பழனிசாமி

* மழையின் குறுக்கீடு - ரசிகர்கள் கவலை!

ஆர்சிபி vs லக்னோ அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் மழைக்குறுகீடு; டாஸ் போடுவதில் தாமதம்!

* பிரதமர் நரேந்திர மோடி வருகையால் சென்னையில் ட்ரோன்கள் பறக்க தடை

இதர ஆளில்லா சாதனங்கள் பறக்கவும் தடை விதித்தது சென்னை காவல்துறை

மாண்புமிகு பாரத பிரதமர் வருகை – விவிஐபி நடமாட்டத்திற்கு ஏற்ப பொதுமக்கள் தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படு கின்றனர்.

* அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு :

முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்

முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் தர்மர் வேட்பாளர்களாக அறிவிப்பு

* சென்னை மாவட்ட ஆட்சியர் மாற்றம். அமிர்தஜோதி ஐஏஎஸ் புதிய மாவட்ட ஆட்சியராக நியமனம்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages