வீரப்பனின் அண்ணன் மாதையன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்- பாமக தலைவர் ஜி.கே.மணி
வீரப்பனின் அண்ணன் மாதையன் மைசூர் மத்திய சிறைச்சாலை, கோயம்புத்தூர் மத்திய சிறைச்சாலை,சேலம் மத்திய சிறைச்சாலை போன்ற பல சிறைகளில் 34 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து உடல்நலக்குறைவால் இறந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.இவரை விடுதலை செய்ய வேண்டும் என்று மருத்துவர் ஐயா அவர்கள் பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தார்கள்.நானும் தொடர்ந்து பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்து வலியுறுத்தி வந்தேன்.
மாதையன் சிறையிலிருந்து பரோலில் வரும்போதெல்லாம் நேரில் என்னை சந்திப்பார்.நீண்ட நேரம் பேசுவோம்.பேச்சில் தன்னுடைய வேதனையையும் உடல் நலக் குறைவையும் சோகத்தையும் குடும்ப நிலமைகளையும் நீண்ட நேரம் பேசுவார்.அதைக் கேட்டு நான் மிகுந்த வேதனை அடைவேன்.அவ்வப்போது முடிந்த உதவிகளையும் செய்து வந்தேன். தற்போது அவர் இறந்திருப்பது பெரிதும் வேதனையளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
அவரை இழந்து வாடும் அவரது மனைவி,மகள்கள் உள்ளிட்ட குடும்பத்தினர்கள்,உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.அவரது மனைவி,மகள், மருமகன் ஆகியோரிடம் கைப்பேசியில் பேசி அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்தேன்.
No comments:
Post a Comment