அக்னிப்புரட்சி இன்றைய (27.05.2022) முக்கிய செய்திகள்.
* சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப் படுவதாக அறிவிப்பு.
ஜூன் 2ஆம் தேதி முதல் தொடங்க வேண்டிய தேர்வுகள், ஜூன் 15ஆம் தேதி முதல் நடைபெறும்.
சென்னைப் பல்கலை.யின் கீழ் இயங்கும் அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் அறிவிப்பு பொருந்தும் - சென்னை பல்கலைக்கழகம்.
* தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கன்னட திரைப்படமான அரபி என்ற படத்தில் நீச்சல் பயிற்சியாளராக ரூ.1 ஊதியம் பெற்று நடித்துள்ளார்.
* மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
ஆர்.கிரிராஜன், கே.ஆர்.என். ராஜேஷ்குமார் மற்றும் சு.கல்யாணசுந்தரம் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தேர்தல் நடத்தும் அதிகாரி சீனிவாசனிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
* பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர ஜூலை 1 முதல் விண்ணப்பிக்கலாம் - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் நேரடியாக 2 ம் ஆண்டு பாலிடெக்னிக் வகுப்புகளில் சேர்வதற்கான அட்டவணை இன்று வெளியிடப்படும்.
பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க இந்த் ஆண்டு 10 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் - அமைச்சர் பொன்முடி.
* காவல்துறையினருக்கு பதக்கங்கள் வழங்கும் விழா.
சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் குடியரசுத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழா.
2019 முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான 322 பதக்கங்களை 319 காவல்துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
காவல்துறை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத்துறை உள்ளிட்ட காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment