அக்னிப்புரட்சி இன்றைய (29.05.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (29.05.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (29.05.2022) முக்கிய செய்திகள்.

* கோவை ஆனந்தாஸ் உணவக குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை.

* டெல்லியில் சோனியா காந்தியுடன் ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் சந்திப்பு!

நடப்பு அரசியல் சூழல் மற்றும் மாநிலங்களவை தேர்தல் குறித்து ஆலோசனை என தகவல்!

* அகமதாபாத், நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் நிறைவு விழா இன்று நடைபெறுகிறது

ஐபிஎல் நிறைவு விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது

இந்தி நடிகர் ரன்வீர் சிங், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்

நிறைவு விழா காரணமாக அரைமணி நேரம் தாமதமாக இரவு 8 மணிக்கு இறுதிப்போட்டி தொடங்கும்

* நேபாளத்தில்  22 பேருடன் சென்ற விமானம் மாயமானது.

சுற்றுலா நகரமான பொக்ராவிலிருந்து மேற்கு நேபாளத்தில் உள்ள ஜோம்சோம் நகருக்கு 22 பேருடன் சென்ற விமானம் மாயமானதாக தகவல்.

* நடிகர் கமல்ஹாசன் நடித்த விக்ரம்-2 படத்திற்காக ரசிகர்களை கவர விமான நிலையத்தில் டிஜிட்டல் விளம்பரம்

விமான நிலையத்தில் டிஜிட்டல் விளம்பரம் முலம் பட விளம்பரம் செய்வது இதுவே முதல் முறை

* ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடன் 100 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியது

கடல் உள்வாங்கியதால் புனித நீராட வந்த சுற்றுலா பயணிகள் அச்சம்
கடல் உள்வாங்கியதால் பாறைகள், சாமி சிலைகள் வெளியே தெரிந்தன

* வெற்றிகரமான சுயதொழில் முனைவோர் மட்டுமின்றி ஊரகப் பகுதியில் தங்கியிருந்து பிற இளைஞர்களையும் சுயதொழில் முனைவோராக வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் ஸ்ரீதர் வேம்பு.

தமிழகத்தை சேர்ந்த ZOHO நிறுவன தலைவர் ஸ்ரீதர் வேம்புக்கு மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோதி பாராட்டு.

* டி.ராஜேந்தர் உடல்நலம் விசாரித்த முதல்வர்!

சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் உடல்நிலை குறித்து விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

* தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் மற்றும் வடிகால் பணிகள் குறித்து ஆய்வு.

ஆய்வில் விவசாயிகளை சந்தித்து கருத்துக்களையும் கேட்க உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

* இன்று சென்னை தி.நகரில் தனியார் ஹோட்டலில் நடைபெற்ற மருத்துவர் அய்யா அவர்களால் தொடங்கப்பட்ட 34 அமைப்புகளின் தலைவர் செயலாளர் காண ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் மருத்துவர் அன்புமணி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்பொழுது பாமக 2.0 திட்டங்கள், அனைத்தும் சார்ந்ததாக இருக்கும்.
பாட்டாளி மாடல் மற்றும் பாமக 2.0 இரண்டும் வெவ்வேறு ஆக இருக்கும் என்று கூறினார் அதை இப்போது சொல்லிவிட்டால் காப்பி அடித்துவிடுவார்கள்" - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

* ஆதார் அட்டையின் போட்டோ நகலை எந்த நிறுவனத்துடனும் பகிர வேண்டாம். அதை தவறாகப் பயன்படுத்தும் அபாயம் இருக்கிறது என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் ஒர் எச்சரிக்கை.

ஆதார் அட்டை நகலை எங்கும் வழங்க வேண்டாம் என்ற அறிவிப்பை 'திரும்பப் பெற்றது' இந்திய தகவல் தொடர்பு அமைச்சகம்

* கேரளாவில் தென்மேற்கு பருவமழை 3 நாட்களுக்கு முன்னதாகவே தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

* 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிடை‌ மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு !

மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில், ஆவடி மாநகராட்சிகளின் ஆணையர்கள் இடமாற்றம்.

* காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு வேட்பாளராக ப.சிதம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages