அக்னிப்புரட்சி இன்றைய (28.05.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (28.05.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (28.05.2022) முக்கிய செய்திகள்.

* கடந்த 4-ம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திர வெயில் காலம் இன்றுடன் நிறைவுபெறுகிறது.

அக்னி நட்சத்திர கோடை காலத்தில் முதல் 2 வாரங்களுக்கு வெப்பம் தணிந்தே காணப்பட்டது.

கடந்த 24-ந்தேதி மட்டும் தமிழகத்தில் 13 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கு மேல் பதிவானது.

* ஓமந்தூரார் தோட்டத்தில் இன்று முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு.

சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் விழாவில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு.

ஓமந்தூரார் தோட்டத்தில் ரூ.1.17 கோடி செலவில் சுமார் 16 அடி உயரத்தில் கருணாநிதியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

* லடாக்கில் ராணுவ வீரர்கள் 26 பேர் சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து..

7 பேர் உயரிழப்பு. மற்றவர்கள் படுகாயங்களுட்ன் மருத்துவமனையில் அனுமதி

* சென்னை, அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் விழா குறித்து ஆலோசனை.

கலைஞரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் நடந்த திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்.

திமுக உட்கட்சி தேர்தல் தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

* ராமேஸ்வரம் மீனவப் பெண் கூட்டு பாலியல் வன்முறை மற்றும் படுகொலை செய்யப்பட்ட வழக்கு:

கைது செய்யப்பட்ட வடமாநிலத்தவர்கள் பிரகாஷ், ரஞ்சன் ராணாவுக்கு வரும் 10ம் தேதி வரை நீதிமன்ற காவல்

குரூப் 2, 2ஏ தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு

உத்தேச விடைக்குறிப்பில் ஆட்சேபனைகள் இருப்பின் ஒரு வாரத்திற்குள் பதிவு செய்யலாம் - டிஎன்பிஎஸ்சி

* பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்வு.

சென்னையில் நடைபெற்ற பா.ம.க சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் புதிய தலைவராக அன்புமணி ராமதாஸை முன்மொழிந்தார் ஜி.கே.மணி

வெற்றி பெறாதது தொண்டர்களின் குற்றம்- இராமதாசு அய்யா வேதனை.

ரியல் எஸ்டேட் பிசினஸில் நீங்கள் காட்டுகிற ஆர்வத்தை ஏன் கட்சியை உயர்த்துவதில் காட்டவில்லை?

43 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு வருகிறேன், இன்னும் அந்த கோலைத்தான் நான் ஏந்தவில்லை.

தற்போது மூன்றாவதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புமணியை கோட்டையில் அமரவைக்க இங்கே ஒரு குடும்பமாக நாம் வருகை புரிந்துள்ளோம்.

100 வாக்குகள் என்னால் வாங்க முடியும், எனக்கு பதவி எதுவும் வேண்டாம் என உழைத்து அன்புமணியை முதலமைச்சர் ஆக்குபவன் தான் உண்மையான தொண்டன்- பாமக நிறுவனர் ராமதாஸ்.

சில காக்கைகள் வரும் போகும், ஆனால் உழைப்பவரை உடன் வைத்துக்கொள்ள வேண்டும், அவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என அன்புமணிக்கு கூறியுள்ளேன்.

நமக்கு இனி காக்கைகள் வேண்டாம்.

2012ல் தொடங்கிய ஆம் ஆத்மி கட்சி 2013ல் ஆட்சியை பிடித்தது கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி; ஆனால் நம்மால் ஏன் முடியவில்லை?

நம்முடைய கொள்கைகள் போல் நாட்டில் வேறு கட்சிகள் ஏதாவது கொள்கைகளை கொண்டுள்ளதா? இல்லையெனில் ஏன் நம்முடைய பலம் 4லிருந்து 40 ஆக மாறவில்லை? 

இது யார் குற்றம்? இந்த குற்றத்தை மீண்டும் நீங்கள் செய்யப்போகிறீர்களா?- பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி.

* பா.ம.க தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாஸுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சமூகநீதிப் பாதையில் பாட்டாளி மக்களின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து பாடுபட வாழ்த்துகிறேன் - முதல்வர் ஸ்டாலின்

* சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு.

12 அடி உயர பீடத்தில்,16 அடிக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

சிலையின் கீழே கருணாநிதியின் 5 கட்டளை வாசகங்கள்  பொறிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages