அக்னிப்புரட்சி இன்றைய (30.05.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (30.05.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (30.05.2022) முக்கிய செய்திகள்.

* ஐபிஎல் 2022 தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றது குஜராத் டைட்டன்ஸ் அணி!

* டெல்டா மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம்.

மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் விவசாய பணிகள் குறித்து நேரில் ஆய்வு.

திருச்சியில் தூர்வாருதல் மற்றும் வடிகால் பணிகளை முதலமைச்சர் இன்று நேரில் ஆய்வு செய்கிறார்.

* மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ப.சிதம்பரம் வேட்புமனு தாக்கல்

சென்னை தலைமைச் செயலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ப.சிதம்பரம்

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கும், எங்களுக்கு ஆதரவு தரும் திமுக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தோழமை கட்சியினருக்கும் என் இதயம் நிறைந்த நன்றி-பா.சிதம்பரம்.

* கேரளாவில் சற்று முன்னதாகவே தென்மேற்குப் பருவ மழைக்காலம் நேற்று தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விவசாயிகளுக்கு முக்கிய ஆதாரமாக விளங்குவது தென்மேற்கு பருவ மழை.

ஜூன் 1 ஆம் தேதி இது தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டில் இரண்டு நாட்கள் முன்பாகவே தொடங்கிவிட்டது.

கேரளாவில் ஜூன் 1 ஆம் தேதி இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது.

பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* தமிழ்நாடு முழுவதும் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க கைரேகை பதிவுக்கு பதில் கண் கருவிழி பதிவின் அடிப்படையில் பொருட்கள் வழங்கப்படும்; அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது- மதுரையில் அமைச்சர் சக்கரபாணி பேட்டி.

* ஆன்லைன் ரம்மி விளையாட்டு முதலில் ஜெயிப்பது போல ஆசையை தூண்டிவிட்டு, பின்பு அனைத்து பணத்தையும் இழக்கும் நிலை உள்ளது.

இது ஆன்லைன் ரம்மி அல்ல, ஆன்லைன் ரம்மி மோசடி.
எனவே, ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தயவுசெய்து யாரும் ஈடுபட வேண்டாம்- டிஜிபி சைலேந்திரபாபு

* சில்லரை விலை குறைவால் ஏற்பட்ட இழப்பை எண்ணெய் நிறுவனங்கள் வழங்க வலியுறுத்தி அகில இந்திய அளவில் நாளை ஒரு நாள் பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தம்.

பெட்ரோல், டீசல் விற்பனை வழக்கம்போல் நடைபெறும் - தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்க தலைவர் முரளி அறிவிப்பு

* 2021 ம் ஆண்டின் UPSC தேர்வு முடிவுகள் வெளியீடு.

உத்திர பிரதேசத்தை சேர்ந்த சுருதி ஷர்மா நாட்டிலேயே முதலிடம்.
முதல் 4 இடங்களையும் பெண்களே பிடித்தனர்.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 1 முதல் 10ம் வகுப்புகள் மற்றும் 12ம்  வகுப்புகளுக்கு ஜூன் 23ம் தேதி பள்ளிகள் திறப்பு

11ம் வகுப்புகள் தொடங்கும் நாள், பின்னர் அறிவிக்கபடும்.
- அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

* திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு.

டெல்டா மாவட்டங்களில் ஆய்வுக்காக சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

* பாஜக சார்பில் நமோ ஆப் என்ற செயலி அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.

அதில் 8 ஆண்டு கால ஆட்சி குறித்து கேள்வி பதில், புகைப்படங்களை கண்டுபிடிப்பது போன்ற பல விளையாட்டுகள் இடம் பெற்றுள்ளது.

தமிழகத்தில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 25 கிலோ மீட்டர் இடைவெளியில் அம்மா உணவகங்கள் அமைக்க உத்தரவிடக் கோரி வழக்கு.
விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

* டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கைது.

ஹவாலா பரிவர்த்தனையில் ஈடுபட்ட வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை.

* 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு வேதியியல் பாடத்தில் இரண்டு கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண்கள்.

பகுதி 1-ல் கேள்வி எண் 9 அல்லது கேள்வி எண் 5-ஐ எழுதியவர்களுக்கு முழு மதிப்பெண்கள்.

பகுதி 2-ல் கேள்வி எண் 29-ஐ எழுதியவர்களுக்கு முழு மதிப்பெண்கள் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.

* எனக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கக்கோரி இனி யாரும் தீர்மானம் நிறைவேற்றி கழக தலைமைக்கு சங்கடத்தை ஏற்படுத்திட வேண்டாம் - உதயநிதி ஸ்டாலின்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages