தமிழ்நாட்டில் மரம் வளர்ப்பை நாளை முதல் வாழ்த்துகிறேன்! - மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

தமிழ்நாட்டில் மரம் வளர்ப்பை நாளை முதல் வாழ்த்துகிறேன்! - மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

தமிழ்நாட்டில் மரம் வளர்ப்பை
நாளை முதல் வாழ்த்துகிறேன்! - மருத்துவர் இராமதாசு அய்யா

தமிழ்நாட்டில் மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன்,  மரம் நடும் அறமே மாபெரும் அறம் இயக்கத்தை  செயல்படுத்தி வருகிறேன். பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் பிறந்த நாள் மற்றும் திருமண நாளில் மரம் நட வேண்டும். அவ்வாறு மரம் நட்டு அதன் புகைப்படத்தை அனுப்புபவர்களுடன் நான்  தொலைபேசியில் பேசி வாழ்த்து தெரிவிப்பேன் என்று அறிவித்திருந்தேன். அதன்படி 2021 நவம்பர் 30-ஆம் தேதி முதல் மே 19  வரையிலான 171 நாட்களில் 1781 பேர் மரக்கன்றுகளை நட்டுள்ளனர். அவர்கள் மொத்தம் 13371  மரக்கன்றுகளை நட்டுள்ளனர்.

கடுமையான பல்வலியால் அவதிப்பட்டு வந்ததால் கடந்த 10 நாட்களாக பிறந்தநாள், திருமண நாள் உள்ளிட்ட நிகழ்வுகளையொட்டி மரக்கன்று நட்ட பாட்டாளி சொந்தங்களுக்கு என்னால் வாழ்த்து தெரிவிக்க முடியவில்லை.  அவர்கள் அனைவருக்கும் இந்த முகநூல் பதிவு மூலமாக எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாளை முதல் வழக்கம் போல, மரக்கன்று நடும் பாட்டாளி சொந்தங்களுக்கு  நான் தொலைபேசி மூலம் வாழ்த்துக் கூறுவேன். பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் அவர்களின் பிறந்தநாள் மற்றும் திருமண நாளையொட்டி அதிக எண்ணிக்கையில் வாழத்துகளைத் தெரிவிப்பேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages