பாராட்டுகள் தெரிவித்து மருத்துவர் அய்யா மருத்துவர் அன்புமணி இராமதாஸ் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி...நன்றி...நன்றி - பாமக தலைவர் ஜி.கே.மணி
பாட்டாளி மக்கள் கட்சி தலைவராக 25 ஆண்டுகாலம் செயல்பட்ட எனக்கு (ஜி.கே.மணி) வெள்ளிவிழா,தானே திட்டமிட்டு தன் மனதில் எண்ணியவாறு மிகச் சிறப்பாக பாராட்டு விழாவை நடத்திய, உயரிய உண்மைப் பொருள்பட மனதில் எண்ணியதை உணர்வுபூர்வமாக பாராட்டுக் கவிதை வாசித்து பாராட்டிய சமூகநீதிக்காவலர் மருத்துவர் அய்யா அவர்களுக்கும், இந்த விழாவிற்கு தலைமை ஏற்று மிகச் சிறப்பாக நடத்திக் காட்டிய பா.ம.க இளைஞரணி தலைவர் பசுமைநாயகர் மருத்துவர் அன்புமணி எம்.பி அவர்களுக்கும், தன் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் விழாவிற்கு வந்து தாயுள்ளத்தோடு சிறப்பித்த அய்யாஅவர்களின் துணைவியார் அன்னையார் அவர்களுக்கும், பசுமைத்தாயகம் தலைவர் சகோதரி திருமதி சௌமியா அன்புமணி அவர்களுக்கும், மருத்துவர் அய்யாஅவர்களின் அன்பு மகள்கள் திருமதி ஸ்ரீ காந்தி, திருமதி கவிதா அவர்கள், பேரன்,பேத்திகள் உள்ளிட்ட மருத்துவர் அய்யா அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும், தமிழ்நாடு முழுவதும் இருந்து கலந்துகொண்ட பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம்,சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகள்,அனைத்து அணிகள் சார்ந்த அனைத்து பொறுப்பாளர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி நன்றி நன்றி என நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்த்தி பேசிய மூத்த,முக்கிய நிர்வாகிகளுக்கும்,கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
கைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், அமைச்சர்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதிகாரி பெருமக்களுக்கும் பல்வேறு அமைப்புகள்,சமுதாய இயக்கங்களைச் சார்ந்த தலைவர்களுக்கும், முன்னோடிகளுக்கும், வெளி மாநிலங்களிலிருந்து வாழ்த்திய தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், நண்பர்கள் ஆகியோருக்கும் உற்ற நண்பர்களுக்கும் நன்றி...நன்றி...நன்றி... என இதயங்கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த நிகழ்வில் பங்கேற்ற பத்திரிகை,தொலைக்காட்சி நண்பர்களுக்கும் செய்தி வெளியிட்ட ஊடகத் துறையினருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
No comments:
Post a Comment