அக்னிப்புரட்சி இன்றைய (03.06.2022) முக்கிய செய்திகள்.
* மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 99 வது பிறந்த தினம்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99 வது பிறந்தநாள் அரசு விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது.
சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
* சிதம்பரம் நடராஜர் கோயில் பொது கோயிலாக இருப்பதால் இந்து அறநிலையத் துறைக்கு அதிகாரம் உண்டு.
கோயில் நிர்வாகத்தை சீரமைக்க, கோயில் விவகாரங்களை விசாரிக்க குழுவை நியமிக்க அதிகாரம் உள்ளது.
தீட்சிதர்கள் புகார்களுக்கு இந்து அறநிலையத்துறை பதில்.
ஆய்வு குழுவுக்கு தீட்சிதர்கள் ஒத்துழைக்க வேண்டும் - இந்து அறநிலையத்துறை.
* கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'விக்ரம்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது
லோகேஷ் கனகராஜ் இயக்கித்தில் உருவான விக்ரம் திரைப்படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்
* திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது.
ஆரூர்தாஸ் இல்லத்திற்கே நேரில் சென்று விருது வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் கெளரவிப்பு.
* மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 21 துறைகளில் பணியாற்ற 94 பேராசிரியர்கள் தேவை.
ஜூலை 18-ம் தேதிக்குள் jipmer.edu.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
* சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 உயர்வு.
ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.4,810-க்கும், ஒரு சவரன் ரூ.38,480-க்கும் விற்பனை.
வெள்ளி ஒரு கிராம் ரூ.68.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
* 2021-ம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருது மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முநாதனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஐ.சண்முகநாதனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கினார்.
* நாடு முழுவதும் அஞ்சல் துறை மூலம் கோவில்பட்டி கடலை மிட்டாய் விநியோகம்:
கோவில்பட்டி கடலை மிட்டாயை இந்தியா முழுவதும் எந்த இடத்தில் இருந்தும் ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ள அஞ்சல்துறை மூலம்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
புவிசார் குறியீடு பெற்ற உணவு பண்டமான கடலைமிட்டாயை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அஞ்சலகம் மூலம் ஆர்டர்கள் பெறப்பட்டு, இன்று முதல் கடலைமிட்டாய்களை அனுப்பும் பணி தொடங்கியுள்ளது.
ஒரு பெட்டியில் தலா 200 கிராம் கொண்ட 5 பாக்கெட்டுகள் என ஒரு கிலோ கடலைமிட்டாய் இருக்கும்.
இதற்கு 390 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
* பிரியங்கா காந்திக்கு கொரோனா உறுதி.
காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்திக்கு கொரோனா பெருந்தொற்று பாதிப்பு உறுதி.
சோனியா காந்திக்கு நேற்று கொரோனா உறுதியான நிலையில், இன்று பிரியங்காவுக்கு பெருந்தொற்று பாதிப்பு உறுதி.
* நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆஜராக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கு சம்மன்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆஜராக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கு சம்மன்.
வெளிநாட்டில் இருப்பதால் அவகாசம் கோரியிருந்த நிலையில், புதிய சம்மன்.
* கோயில் விழாக்களில் நாடகம் நடத்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி.
கோவில் திருவிழாக்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நாடகங்கள் நடத்த அனுமதி - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
“ஆடலும் பாடலும் நிகழ்ச்சிக்கு அனுமதி தர முடியாது" - உயர் நீதிமன்றம் திட்டவட்டம்.
* இடைத்தேர்தலில் உத்தரக்கண்ட் முதலமைச்சர் வெற்றி.
உத்தரக்கண்ட் மாநிலத்தில் சம்பாவத் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி வெற்றி.
55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தி, உத்தரக்கண்ட் முதலமைச்சர் வெற்றி.
* மலர்க்கண்காட்சி - உதயநிதி தொடங்கி வைத்தார்.
சென்னையில் முதன்முறையாக நடைபெறும் மலர் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார், உதயநிதி ஸ்டாலின்.
கலைவாணர் அரங்கில் சிறப்பு ஏற்பாடுகளுடன், இன்று முதல் 3 நாட்களுக்கு, மலர்க்கண்காட்சி நடைபெறுகிறது.
* தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிப்பு
திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சியில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு - தேர்தல் அதிகாரி சீனிவாசன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
திமுகவில் இருந்து கிரிராஜன், கல்யாணசுந்தரம், ராஜேஸ்குமார் ஆகியோர் தேர்வு.
அதிமுகவில் இருந்து சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோர் தேர்வு.
காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தேர்வு.
சட்டமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவு இல்லாததால் 7 சுயேட்சை வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு.
* தமிழகத்தில் உள்ள 2 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம்.
சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த மாநில அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் - ராஜேஷ் பூஷன்.
* விசா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரத்தின் முன் ஜாமின் மனு தள்ளுபடி.
ஆடிட்டர் பாஸ்கர் ராமன், விகாஸ் மகாரியாவின் முன் ஜாமின் மனுவையும் தள்ளுபடி செய்தது டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.
முன் ஜாமின் மனுவை நிராகரிக்கும் உத்தரவை 7 நாட்கள் நிறுத்தி வைக்குமாறு கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞர் கோரிக்கை.
* தனிநபர் ஒருவர் தான் விருப்பிய மதத்தை பின்பற்ற உரிமை உண்டு என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
ஒருவர் தான் விரும்பும் மதத்துக்கு மாற அரசியல் சட்டப்படி உரிமை உண்டு எனவும் நீதிமன்றம் கருத்து.
கட்டாயப்படுத்தி மதம் மாற்றுவது தொடர்பான புகாரை விசாரிக்க போதிய ஆதாரம் இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் திட்டவட்டம்.
* இரயில் பயணிகள் கவனத்திற்கு:
இரயில் பயணிகள் இனிமேல் அதிக சுமைகளை எடுத்துச் செல்ல கட்டணம் செலுத்த வேண்டும்.
2ஆம் வகுப்பில் 35 கிலோ வரை கட்டணம் கிடையாது. ஸ்லீப்பர் கிளாஸ் 40 கிலோ, 3 டயர் ஏ.சி. 40 கிலோ, 2 டயர் ஏ.சி. & முதல் வகுப்பு 50 கிலோ, முதல் வகுப்பு ஏ.சி.70 கிலோ வரை கட்டணம் கிடையாது.
No comments:
Post a Comment