அக்னிப்புரட்சி இன்றைய (04.06.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (04.06.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (04.06.2022) முக்கிய செய்திகள்.

* அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட 10 சாமி சிலைகள் சென்னை கொண்டு வரப்பட்டது.

நடராஜர், சிவன், பார்வதி உட்பட 10 சாமி சிலைகளை வெளிநாடுகளில் இருந்து மீட்டது இந்திய தொல்பொருள் துறை.

* உணவகங்களில் வாடிக்கையாளர்களிடம் சேவைக் கட்டணம் பெறுவதைத் தடுக்க விரைவில் விதிமுறைகள் வகுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நுகர்வோர் விவகாரங்கள் துறையின் வழிகாட்டுதலின்படி உணவின் விலை மற்றும் வரிகளை மட்டுமே வாடிக்கையாளரிடம் பெறலாம் என்றும், வாடிக்கையாளரின் ஒப்புதல் இன்றி அவரிடம் சேவைக்கட்டணம் பெறுவது முறையற்ற வணிக நடவடிக்கை என்றும் குறிப்பிட்டுள்ளது.

* தமிழ்நாட்டில் கருமுட்டையை சட்டவிரோதமாக விற்பனை செய்தால் சம்மந்தப்பட்ட மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிமம் ரத்து செய்யப்படும். - அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

* தீட்சிதர்களுக்கு எதிராக அறநிலையத்துறை செயல்படாது”

சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம், தீட்சிதர்களுக்கு எதிராக அறநிலையத்துறை செயல்படாது.

ஆதீனங்களின் பாரம்பரிய நிகழ்ச்சிகளில் இந்து சமய அறநிலையத்துறை தலையிடாது-அமைச்சர் சேகர் பாபு.

* மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களின் பயன்பாட்டிற்கு ரூ. 3.42 கோடி மதிப்பீட்டில் 25 மின் வாகனங்கள்.

சென்னை, தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

* பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கிய மக்கள்:

பாகிஸ்தானில், பெட்ரோல், டீசல் விலை திடீரென கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதைக் கண்டித்து முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெஷார்வர் நகரில், 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.30 உயர்ந்து ரூ.210-க்கு விற்பனை. இலங்கை போன்று பாகிஸ்தானும் திவாலாகும் என மக்கள் அச்சம்.

* கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள்.

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள், மருத்துவ அதிகாரிகளுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீண்டும் உத்தரவு.

மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தல்.

* தமிழகத்தில் முதல்முறையாக சுற்றுலா பயணிகளுக்காக சொகுசுக் கப்பல் திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்று மீண்டும் சென்னை துறைமுகம் வரை 2 நாட்கள்.

துறைமுகம் - விசாகப்பட்டினம் - புதுச்சேரி சென்று மீண்டும் துறைமுகம் வரை 5 நாட்கள் பயணம் என 2 பேக்கேஜ்களில் இந்த சொகுசுக் கப்பல் இயக்கப்பட உள்ளது.

* 3 குழந்தைகள் உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்.

காருக்குள் விளையாடிக் கொண்டிருந்த 3 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழப்பு.

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே காருக்குள் விளையாடிக்கொண்டிருந்த நித்திரை (7), நிதிஷ் (5), கபிசன் (4) ஆகிய 3 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழப்பு.

காரின் கதவை திறக்க தெரியாததால் 3 குழந்தைகளும் மூச்சுத்திணறி இறந்திருக்கலாம் என தகவல்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages