அக்னிப்புரட்சி இன்றைய (07.06.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (07.06.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (07.06.2022) முக்கிய செய்திகள்.

* இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சன் வெற்றி.

சொந்த கட்சியினரே போர் கொடி தூக்கிய நிலையில் பிரதமர் பதவியை தக்க வைத்தார் போரிஸ் ஜான்சன்.

* ரேஷன் ஊழியர்கள் வேலைநிறுத்தம்: சம்பளத்தைப் பிடிக்க உத்தரவு.

அகவிலைப்படி உயர்வு, நியாயவிலைக் கடைகளுக்கு தனித் துறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் ஜூன் 9ஆம் தேதி வரை மாநிலம் தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக நியாய விலைக் கடை பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.

பொது விநியோகத் திட்டப் பணியாளர்களுக்கு பாதிப்பு மற்றும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பதிலாக, மாற்று பணியாளர்களை கொண்டு நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு ” No work No pay” என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்ளின் விவரங்களை நாள்தோறும் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வலியுறுத்தி, அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கு, கூட்டுறவுச் சங்கப் பதிவாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் தற்காலிகமாக பணிபுரியும் செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் காவல்துறை அவர்களை கைது செய்து உள்ளனர்.

* ஆரோக்கியமான உணவை உட்கொண்டு, தேவையான உடற் பயிற்சிகளை மேற்கொண்டு, உடலைக் காக்க  வேண்டும் என நாம் அனைவரும் உலக உணவுப் பாதுகாப்புத் தின நன்னாளில் உறுதி ஏற்போம் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகெங்கிலும் உணவு மூலம் ஏற்படும் அபாயங்கள், பாதுகாப்பான உணவினை உட்கொள்ளுதல், ஆரோக்யமான சமுதாயத்தை உருவாக்குதல் ஆகியவை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் ஜூன் ஏழாம் நாள் உலக உணவுப் பாதுகாப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

* தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் மருத்துவத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு செய்ய உள்ளனர். ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டையை சட்டவிரோதமாக விற்பனை செய்த விவகாரத்தில் மருத்துவத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

சென்னை : 1,000 மீனவ இளைஞர்களுக்கு உயிர் பாதுகாப்பு, மீட்பு பயிற்சி திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். முதல் கட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் 25 பேருக்கான பயிற்சியை முதலமைச்சர் துவக்கி வைக்கிறார். கடலில் மூழ்கி தவிப்பவர்களை பாதுகாப்பதற்கு 14  மாவட்டங்களில் 1,000 மீனவ இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

* ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் ஐ.டி. ரெய்டு.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் வருமான வரித்துறை சோதனை.

வரி ஏய்ப்பு புகாரில் ஆர்த்தி ஸ்கேன் மையத்துடன் தொடர்புடைய மருத்துவர்களின் வீடுகளிலும் ரெய்டு.

* சிதம்பரம் நடராஜர் கோவிலில் அறநிலையத்துறை விசாரணை குழு ஆய்வை தொடங்கிய நிலையில் தீட்சிதர்கள் எதிர்ப்பு.

உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி கணக்கு விவரங்களை அறநிலையத்துறை அதிகாரிகளிடம் வழங்க தீட்சிதர்கள் மறுப்பு.

* எங்களுக்கும் பாயத் தெரியும்: ஆதீனத்திற்கு அமைச்சர் பதில்.

பதுங்குவதை பயமாக மதுரை ஆதீனம் கருதக்கூடாது; எங்களுக்கும் பாயத் தெரியும்.

அரசியல்வாதிகளை போல் மதுரை ஆதீனம் பேசிவருவதை அறநிலையத்துறை அனுமதிக்காது - அமைச்சர் சேகர்பாபு.

* நாளை மறுநாள் M.Phil., தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

http://unom.acc.in என்ற இணையத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் எனவும் கூறியுள்ளது.

* சிதம்பரம் நடராஜர் கோயிலில் அறநிலையத்துறையின் ஆய்வுக்கு ஒத்துழைப்பதுதான் மனுநீதி; மனுதர்மம் - அமைச்சர் சேகர்பாபு.

உரிய சட்டத்தின்படி வந்திருக்கும் புகார்களின் அடிப்படையில் அறநிலையத்துறையின் குழுவினர் ஆய்வுக்கு சென்றிருக்கிறார்கள் என தெரிவித்தார்.

சிதம்பரம் நடராஜர் கோயில் பொதுக்கோயில் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிதம்பரம் கோவிலில் அறநிலையத்துறை ஆய்வு தொடர்பாக தீட்சிதர்கள் அறநிலையத் துறைக்கு மீண்டும் கடிதம்.

சட்டப்பூர்வமான குழு ஆய்வுக்கு வந்தால் அனுமதிப்போம் - தீட்சிதர்கள்.

சிதம்பரம் கோவிலில் இந்து சமய மற்றும் அறநிலையத்துறைக்கு நிர்வாக அதிகாரம் இல்லை என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பில் தெளிவாக உள்ளது - தீட்சிதர்கள்.

தற்போதைய குழு சட்டத்திற்குட்பட்ட குழு அல்ல, உச்சநீதிமன்ற உத்தரவுக்கு கீழ்ப்படிந்து ஆய்வுக் குழுவை திரும்பப் பெற வேண்டும் - தீட்சிதர்கள்.

* நடப்பாண்டு முதல் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடப்படுகின்றன

மீண்டும் சமூகநலத்துறை வசம் மழலையர் வகுப்புகள் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன - பள்ளிக்கல்வித்துறை

* ஊர் பெயரை மாற்றுவது தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவு: ஐகோர்ட் கிளை.

ஊர் பெயரை மாற்றுவது, பேருந்து நிலைய பெயரை மாற்றுவது தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவு சார்ந்தது.

பெயர் மாற்றத்தில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க இயலாது.

மெட்ராஸ், சென்னையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டதை ஏற்றுக் கொண்டோம்.

மாற்றங்களை ஏற்கப் பழக வேண்டும்- உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து.

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றக்கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கில் கருத்து.

* வரும் கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில், Ist ஷிப்டில் பாடம் எடுக்க, 2,423 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம்.

மாதம் ரூ.20,000 தொகுப்பூதியத்தில் 11 மாதங்களுக்கு நியமனம்.

* மருத்துவ தேர்வு வாரிய தேர்வில் தேர்ச்சி பெற்ற செவிலியர்களுக்கு பணி நிரந்தரம். - அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

* ஜெயலலிதா மரண வழக்கை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் ஒரு மாதம் ஏழு நாட்கள் கால அவகாசம் கேட்டு அரசுக்கு கடிதம்

ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையை விரைவில் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவகாசம் கோரி கடிதம்.

* தமிழ்நாட்டில் வருகிற 10ம் தேதி முதல் மாவட்ட அளவில் செஸ் போட்டிகள் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு.

15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான செஸ் போட்டிக்கு அட்டவணையும் வெளியீடு.

44வது செஸ் ஒலிம்பியாட் தொடரை நேரில் பார்ப்பதற்கான வாய்ப்பு.

ஒவ்வொரு மாவட்டத்திலும் வெற்றி பெறும் 2 மாணவர்கள் செஸ் ஒலிம்பியாட் தொடரை பார்க்க சென்னைக்கு அழைத்து வரப்படுவார்கள்.

ஒலிம்பிக்ஸ் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு பல ஊர்களுக்கு ஜோதி எடுத்து செல்வது போல, இந்தாண்டு முதல் செஸ் ஒலிம்பியாட் தொடர் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பும் ஜோதி எடுத்துச்செல்ல அகில இந்திய செஸ் கூட்டமைப்பு முடிவு.

* அரசுப்பள்ளிகளில் 11-ம் வகுப்பு முடித்துள்ள 1,250 மாணவர்களுக்கு நீலகிரியில் 5 நாட்கள் கோடைக் கொண்டாட்ட பயிற்சி முகாம்.

தமிழர் பண்பாடு, கலாச்சாரம், வரலாறு குறித்து கோடைக்கொண்டாட்ட பயிற்சி முகாமில் மாணவர்களுக்கு வகுப்புகள்.
25 மாணவர்களுக்கு ஒரு கைடு நியமனம்.

* கர்ப்பிணிகளுக்கு வழங்கும் ஹெல்த் மிக்ஸ் கிட்டில் ஊழல்: ₹100 கோடி கை மாறியிருக்கிறது; 77 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது - ஆதாரத்துடன் அண்ணாமலை வீடியோ வெளியிட்டு புகார்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages