அக்னிப்புரட்சி இன்றைய (10.06.2022) முக்கிய செய்திகள்.
* கர்நாடகா, ஹரியானா, ராஜஸ்தான், மகாரஷ்டிரா ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 16 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடத்திற்கு இன்று தேர்தல்.
தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் 41 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகி உள்ள நிலையில் மீதமுள்ள இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு.
* கழிவுநீர் தொட்டிகளை மனிதர்கள் இன்றி சுத்தம் செய்ய ரோபோ - சென்னை ஐஐடி கண்டுபிடிப்பு
* எந்த மத விவகாரத்திலும் அரசு தலையிடக் கூடாது, ஆதீனங்களை திட்டமிட்டு முடக்க முயற்சிப்பது கண்டனத்துக்குரியது- தருமபுரம் ஆதினத்துடனான சந்திப்பிற்குப் பின் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி.
* நியாயவிலைக் கடைப் பணியாளர்களின் அகவிலைப் படி உயர்வு குறித்து அரசு பரிசீலித்து வருகிறது;
விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் தங்களது கோரிக்கை குறித்து கவலைப்படாமல் பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்- தமிழக அரசு.
* போலி E Mail - மாணவர்களே உஷார்:
அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் இருப்பதாகக் கூறி, முன்பணம் கேட்டு வரும் இ-மெயில்கள் போலியானது.
NRI மாணவர்களை குறிவைத்து அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் போலியானது- அண்ணா பல்கலைக்கழகம்
மாணவர் சேர்க்கை தொடர்பான தகவல்களுக்கு www.annauniv.edu என்ற பல்கலைக்கழக இணையதளத்தை மட்டுமே அணுக வேண்டும்.
முதல் செமஸ்டர் கட்டணத்துடன் ரூ.1 லட்சம் கட்டினால் முற்றிலும் இலவசமாக படிக்கலாம் என்று பல மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுப்பியதாக சென்றுள்ள போலி இ-மெயில்கள் பற்றி மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்- அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை.
* மருத்துவ மேற்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்தக் கோரும் வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, அனிருத்த போஸ் அடங்கிய அமர்வு உத்தரவு.
காலியாக உள்ள 1,456 எம்.டி., எம்.எஸ்., இடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்தக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
* குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வியூகம்: பொதுவேட்பாளரை நிறுத்த காங். மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முயற்சி
டெல்லி: குடியரசு தலைவர் தேர்தலின் போது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் அடுத்த குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், வேட்பாளர்கள் பெயர்களை ஆளும் பாஜக எதிர்க்கட்சிகள் பரிசீலித்து வருகின்றனர். பாஜக வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பினோய் விஸ்வம் எம்.பி.யிடம் பேசியுள்ளார்.
இந்த தகவலை பினோய் விஸ்வம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஆனால் குடியரசு தேர்தளுக்கான பொது வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் கட்சியிடம் இருந்தோ, பிற எதிர்கட்சிகளிடம் இருந்தோ எந்த தகவலும் வரவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். குடியரசு தலைவர் தேர்தலில் மக்களவை எம்.பி.க்கள் 543 பேர், மாநிலங்களவை எம்.பி.க்கள் 233 பேர், மாநிலங்களில் எம்.எல்.ஏ.க்கள் 4,033 பேர் என மொத்தம் 4,809 பேர் ஓட்டுப்போட தகுதி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
* ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி.
ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க, பரிசல் இயக்க மீண்டும் அனுமதி.
கடந்த 3 நாட்களாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
* சென்னை, தலைமைச் செயலகத்தில் 2,707 அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலி வாயிலாக திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.270.15 கோடி மதிப்பீட்டில் 9 திட்டப் பகுதிகளில் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
4,880 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீடு ஆணைகள் மற்றும் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.500.34 கோடி மதிப்பீட்டிலான பணி ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
* தமிழ்நாட்டில் உயிர்களை பலி வாங்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து அவசரச் சட்டம் பிறப்பிக்க வலியுறுத்தி இன்று (10.06.2022) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னை, எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்திற்கு அருகில் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தலைமையில் மாபெரும் அறப்போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி, மாநில செயலாளர் வடிவேல் ராவணன், மாநில பொருளாளர் திலகபாமா, தேர்தல் பணிக்குழு தலைவர் ஏ கே மூர்த்தி, வழக்கறிஞர் கே பாலு, சென்னை அமைப்பு செயலாளர் மு ஜெயராமன் ஈகை தயாளன், மாவட்ட செயலாளர்கள் கே. என். சேகர், ஏழுமலை, ர.செ. வெங்கடேசன், வண்ணை சத்யா, வி.ஜே. பாண்டியன் பாலசுப்பிரமணியன், மற்றும் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்
* ஆன்லைன் அணிக்கு எதிராக பாமக சார்பில் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் சென்னை எழும்பூரில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து தமிழக அரசுஆன்லைன் ரம்மிக்கு எதிராக அவசரச் சட்டம் இயற்றுவது தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
* சட்ட விரோதமாக யானை தந்தம் வைத்திருந்ததாக நடிகர் மோகன்லால் மீது தொடரப்பட்ட வழக்கு.
திரும்பப் பெறக் கோரி கேரள அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது பெரும்பாவூர் நீதிமன்றம்.
* விசாரணை கைதிகளை இரக்கமின்றி தாக்குவது போலீசின் பேதலித்த மனநிலையை காட்டுகிறது- உயர்நீதிமன்றம்.
போலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
* ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் குறித்து அரசுக்கு பரிந்துரைக்க வல்லுனர் குழு அமைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது
கடந்த ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட பாமக தான் காரணம். இப்போதும் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படுவதற்கும் பாமக தான் காரணம் - மருத்துவர் இராமதாசு அய்யா தனது டுவிட்டர் பதிவு
* மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் ஏன் அமல்படுத்தக் கூடாது?
மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் ஏன் அமல்படுத்தக் கூடாது என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் நாளென்றுக்கு 80 ஆயிரம் மது பாட்டில்கள் திரும்பப் பெறப்படுகிறது என ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியரும் டாஸ்மாக் மேலாளரும் அதிரடி சோதனை மேற்கொள்ள உயர்நீதிமன்றம் அறியுறுத்தியுள்ளது.
* பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் (78) உடல்நிலை கவலைக்கிடம்.
துபாயில் உள்ள மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்.
உடல் உறுப்புகள் இயங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கலால், சிகிச்சைக்காக 3 வாரங்களாக மருத்துவமனையில் உள்ளார் - முஷாரப் ட்விட்டர் கணக்கில் குடும்பத்தினர் தகவல்.
* கர்நாடக மாநிலங்களவை தேர்தலில் பாஜக - 3, காங். - 1 ஆகிய இடங்களை கைப்பற்றின.
பாஜக சார்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜக்கேஷ், லெகர் சிங் ஆகியோர் வெற்றி ;காங்கிரஸ் சார்பில் ஜெயராம் ரமேஷ் வெற்றி.
ராஜஸ்தான் மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் 3 இடங்களை கைப்பற்றியது.
காங்கிரஸ் கட்சியின் முகுல் வாஸ்னிக், ரந்தீப் சுர்ஜேவாலா, பிரமோத் திவாரி ஆகியோர் வெற்றி; பாஜக சார்பில் கன்ஷியாம் திவாரி வெற்றி பெற்றுள்ளார்.
No comments:
Post a Comment