பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
நிர்வாகிகளுக்கு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா பயிற்சி
தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்கத்தில் பா.ம.க. மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கான பயிற்சி வகுப்புகள் மே 30-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அந்த வரிசையில் பாட்டாளி சமூக ஊடகப் பேரவை நிர்வாகிகளுக்கான பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது.
இன்றைய பயிற்சி வகுப்பில் மொத்தம் 250க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
இன்றைய பயிற்சி வகுப்பை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார்கள். பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், தலைமை நிலையச் செயலாளர் இசக்கி படையாட்சி, தேர்தல் பணிக்குழு செயலாளர் செல்வக்குமார், பாட்டாளி சமூக ஊடகப் பேரவையின் தலைவர் அருள் ரத்தினம், நிர்வாகிகள் வினோபாபூபதி, மோகன் சாமிக்கண்ணு, தமிழ் கோவிந்தன் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பயிற்சியின் நிறைவில் அனைவரும் மருத்துவர் அய்யா அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment