அக்னிப்புரட்சி இன்றைய (11.06.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (11.06.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (11.06.2022) முக்கிய செய்திகள்.

* சென்னையில் இன்று 20 வது நாளாக பெட்ரோல் ரூ.102.63க்கும் டீசல் ரூ.94.24க்கும் விலை மாற்றம் இல்லாமல் அதே விலையில் விற்பனையாகின்றது.

* திருப்பதி ஏழுமலையான் கோவிலின் கடந்த மே மாத உண்டியல் வருமானம் ரூ.130 கோடி.

திருப்பதி தேவஸ்தான வரலாற்றிலேயே இதுவே அதிகபட்ச உண்டியல் வருமானம் - கோவில் நிர்வாகம்.

* சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹480 உயர்ந்து, ஒரு சவரன் ₹38,680-க்கும் ஒரு கிராம் ₹4835-க்கும் விற்பனை.

* அதிகரிக்கும் கொரோனா – முதலமைச்சர் ஆலோசனை.

முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்:

பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்;

கூட்ட நெரிசல் இருக்கும் பகுதிகளில் கண்கானிப்பு பணிகளை தீவிரப்படுத்தவும் உத்தரவு.

* தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க வேண்டும்.
தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல்.

ஆன்லைன் ரம்மிக்கு எதிராக சட்டம் இயற்ற தமிழக அரசு குழு அமைத்ததை வரவேற்கிறேன் - விஜயகாந்த்.

* சென்னை, பிராட்வே பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அகற்றாவிட்டால் தலைமை செயலாளர், மாநகராட்சி ஆணையர் ஆஜராக நேரிடும் எனவும் எச்சரிக்கை

* தமிழகத்தில் நாளை 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தி.மலை, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

* தமிழகத்தில் 4 மாநகராட்சிகளில் நகர வளர்ச்சி குழுமங்கள் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு

மதுரை, கோவை, திருப்பூர், ஓசூர் ஆகிய 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் மாநகராட்சிகளுக்கு குழு அமைப்பு

எல்லைகளை வரையறை செய்யவும், தேவையான பணியிடங்களை நிரப்பவும் சிறப்பு அதிகாரி என்ற பணியிடங்களும் உருவாக்கம் - அரசாணை

* தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் தேடப்பட்டு வந்த காவல் ஆய்வாளர் சரவணன் கைது

சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் என்பவரை கடத்தி சொத்துக்களை அபகரித்த புகாரில் 10க்கும் மேற்பட்ட போலீசார் மீது வழக்குப்பதிவு

* இந்தியாவில் ராணுவம், பொருளாதாரம் போன்று ஆன்மீக வளர்ச்சியும் அவசியம்.

சோமநாதர் கோவில் சொத்துகளை அழித்து கந்தகார், பெஷாவர் நகரங்களை கஜினி முகமது உருவாக்கினார்.

அந்த நகரங்கள் அமெரிக்க குண்டுகளால் தகர்க்கப்பட்டதே சனாதன தர்மத்தின் வலிமை - ஆளுநர் ஆர்.என்.ரவி.

* குடியரசுத்தலைவர் தேர்தல் தொடர்பாக டெல்லியில் ஜூன் 15ம் தேதி ஆலோசனை நடத்த, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்பட 22 எதிர்க்கட்சிகளுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம்.

* சென்னை, கொளத்தூரில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்

நகர்புற குடியிருப்புகளில் மறு குடியமர்வு செய்ய கருணை தொகையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages