அக்னிப்புரட்சி இன்றைய (12.06.2022) முக்கிய செய்திகள்.
* தடுப்பூசி முகாம் துவங்கியது:
தமிழகம் முழுவதும் இன்று ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்.
சென்னையில் 3 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன.
காலை 7 மணி தொடங்கி மாலை 7 மணிவரை தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
* சிதம்பரம் நடராஜர் கோவில் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் - அறநிலையத்துறை.
ஜூன் 21,22 ஆம் தேதிகளில் கடலூர் அறநிலையத்துறை அலுவலகத்தில் கருத்து கூறலாம் - அறநிலையத்துறை.
அதிகாரிகள் ஆய்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அறநிலையத்துறை கருத்து கேட்கிறது.
* மதுரை ஆதினம் குறித்து திமுக நாளேடான முரசொலி கடும் விமர்சனம்
* நாமக்கல் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 2 காவலர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சென்னை வண்டலூர் வெளிவட்ட சாலையில் மண்ணிவாக்கம் மேம்பாலத்தில் பைக் ரேஸ் நடத்திய இளைஞர்களால், இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் உயிரிழப்பு.
ரேஸ் நடத்திய இருவர் தப்பி ஓட்டம் - குரோம்பேட்டை போலீசார் விசாரணை.
* சென்னை, ராயப்பேட்டையில் வரும் 14ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஆலோசனை.
* இன்று (12.06.2022) தைலாபுரம் தோட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக ராஜ்யசபா எம்.பி. தர்மர் அவர்கள் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களை
சந்தித்து வாழ்த்து பெற்றார்... அப்போது பாமக கௌரவ தலைவர் ஜி கே மணி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்
* கோடை விடுமுறைக்கு பின் தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நாளை முதல் திறக்கப்படுகின்றது.
கொரோனா காலத்தில் குறைந்த நாட்களே நேரடி வகுப்புகள் நடந்த நிலையில் நாளைமுதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
நாளையே மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
1-10 வரை நாளை திறக்கப்படும் நிலையில் 12ம் வகுப்புக்கு ஜூன்20, 11ம் வகுப்புக்கு ஜூன் 27ல் பள்ளிகள் திறக்கபடும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
* சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதி.
அவர் உடல்நிலை சீராக உள்ளது, சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருப்பார் என கட்சி செய்தி தொடர்பாளர் தகவல்.
* 'ஆவின்' நிறுவனத்தின் ஆணையர் பிரகாஷ், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அதிரடி மாற்றம்...
* தமிழகத்தில் உள்துறை மற்றும் சுகாதாரத்துறை செயலாளர்கள் உள்ளிட்ட பல ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வணிக வரித்துறை கமிஷனராக இருந்த பணீந்திர ரெட்டி- உள்துறை செயலாளராகவும்,
உள்துறை செயலாளராக இருந்த எஸ்.கே.பிரபாகர் - வருவாய் நிர்வாகத்துறை கமிஷனராகவும்
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் நசீமுதீன்- தொழிலாளர் நலன் மற்றும் தனித்திறன் மேம்பாடு துறை செயலாளராகவும்.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன்- கூட்டுறவு,உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளராகவும்,
சென்னை மெட்ரோ ரயில் வாரிய மேலான் இயக்குநர் மற்றும் முதன்மை செயலாளர்இயக்குநர் பிரதீப் யாதவ்- நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளராகவும்,
நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை முதன்மை செயலாளர் தீரஜ் குமார்- வணிகவரித்துறை கமிஷனர்/முதன்மை செயலாளராகவும்
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில், சிறப்பு அதிகாரி/ முதன்மை செயலாளராக பணியாற்றிய செந்தில்குமார்- தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளராகவும்
தமிழக விளையாட்டு ஆணைய முன்னாள் உறுப்பினர் செயலாளர் ஆனந்தகுமார்- மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராகவும்,
தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் தாரேஷ் அகமது -ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கமிஷனராகவும்
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கமிஷனர் ஜெயகாந்தன்- புவியியல் மற்றும் கனிம வளத்துறை கமிஷனராகவும்
புவியியல் மற்றும் கனிம வளத்துறை இயக்குநர் நிர்மல் ராஜ் - போக்குவரத்து துறை கமிஷனராகவும்
வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை மற்றும் மறுகுடியமர்த்தல் துறை செயலாளர் ஜெசிந்தா லசாரஸ்- மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கமிஷனராகவும்
தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தர ராஜ்-வணிகவரித்துறை இணை கமிஷனராகவும்
தமிழக சிவில் சப்ளை கார்பரேசன் இணை மேலாண் இயக்குநர் சங்கீதா- வணிக வரித்துறை நிர்வாக கூடுதல் கமிஷனராகவும்,
திருச்சி கலெக்டர் சிவராசு-கோவை, வணிகவரித்துறை இணை கமிஷனராகவும்
மிகவும் பிற்படுத்தப்பட்டோர்த்துறை கமிஷனர் மதிவாணன்-மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கமிஷனராகவும்
மரியம் பல்லவி பல்தேவ்- தொழிற்சாலைகள் துறை கூடுதல் செயலாளராகவும்
மின்னணு நிர்வாகத்துறை இயக்குநர் விஜயேந்திர பாண்டியன்- கருவூலம் மற்றும் அக்கவுண்ட் துறை கமிஷனராகவும்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் லாவ்லீனா- உணவுபாதுகாப்பு துறை கமிஷனராகவும்
ராமநாதபுரம் முன்னாள் கலெக்டர் சந்திரகலா- தொழில் முதலீடு கழக இயக்குநராகவும்
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத்துறை இணை செயலர் ஜான் லூயிஸ்- வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை இணை கமிஷனராகவும்
அருங்காட்சியக துறை இயக்குநர் ராமன்- வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரக அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை இயக்குநராகவும்
தட்கோ மேலாண் இயக்குநர் விவேகானந்தன்- மாநில தேர்தல் ஆணைய செயலாளராகவும்
சென்னை முன்னாள் கலெக்டர் விஜயராணி- சேலம் பட்டுநூல் வளர்ப்பு கழக இயக்குநராகவும்
பால் உற்பத்தி மற்றும் பால் வளர்ச்சி கழக கமிஷனர் பிரகாஷ்- வரலாறு மற்றும் காப்பகங்கள் கமிஷனராகவும்
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை சிறப்பு செயலாளர் பிங்கி ஜோயல்- பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை கமிஷனராகவும்
பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை கமிஷனர் கருணாகரன்- ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை சிறப்பு செயலாளராகவும்
கருவூலத்துறை கமிஷனர் வெங்கடேஷ்- போக்குவரத்து துறை சிறப்பு செயலாளராகவும்
வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை இணை கமிஷனர் சீதா லெட்சுமி- சமூக நலன் மற்றும் பெண்கள் முன்னேற்றத்துறை இணை செயலாளராகவும்
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை இயக்குநர் பிரவீன் நாயர்- மின்னணு நிர்வாகத்துறை இயக்குநராகவும்
தமிழக பாட புத்தகம் மற்றும் கல்வி சேவை கழக மேலாண் இயக்குநர் மணிகண்டன்- பள்ளிகல்வித்துறை இணை செயலாளராகவும்
வரலாறு மற்றும் காப்பகங்கள் துறை முதன்மை கமிஷனர் ஹர்சகாய் மீனா - திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை சிறப்பு செலயாளராகவும்
சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை துணை கமிஷனர் நரனவாரே மணிஷ் ஷங்கர்ராவ்- ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கூடுதல் இயக்குநராகவும்
தமிழக குடிநர் சப்ளை மற்றும் கழிவுநீர்வாரிய இணை மேலாண் இயக்குநர் பிரதீப்குமார்- திருச்சி கலெக்டராகவும்
சேலம், பட்டுநூல் வளர்ச்சித்துறை இயக்குநர் சாந்தி- தர்மபுரி கலெக்டராகவும்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ்- ராமநாதபுரம் கலெக்டராகவும்
வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணைய கமிஷனர் சித்திக்- சென்னை மெட்ரோ ரயில் கழக முதன்மை செயலாளர் மற்றும் மேலாண் இயக்குநராகவும்
சென்னை மெட்ரோபோலிட்டன் குடிநீர் சப்ளை மற்றும் கழிவுநீர் வாரிய முன்னாள் நிர்வாக இயக்குநர் ஆகாஷ்- தென்காசி கலெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தருமபுரி மாவட்டம் ஆட்சியராக பணியாற்றிய திவ்யதர்ஷினி இடமாற்றம்.
புதிதாக தர்மபுரி மாவட்ட ஆட்சியராக பட்டு வளர்ப்பு இயக்குநராக சேலத்தில் பணியாற்றி வந்த, கே.சாந்தி அவர்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியராக நியமனம்.
* பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புடைய ரெட்ஹில்ஸ் ராஜசேகர்(33) என்பவர் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக திடீர் மரணம்.
உயிரிழந்த ராஜசேகரின் உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
* தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க துவங்கியது; ஒரே நாளில் 249 பேர் பாதிப்பு.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மெல்ல உயர துவங்கி உள்ளது.
மாநிலத்தில் இன்று 14,065 பேருக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், சென்னையில் 124; செங்கல்பட்டில் 40; கோவை 20 ; காஞ்சிபுரம் 12; திருவள்ளூர் 11; என மாநிலம் முழுவதும் 249 பேருக்கு தொற்று உறுதியானது.
தமிழகத்தில் இதுவரை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,57,382 ஆக அதிகரித்துள்ளது. இன்று 148 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,18,025 ஆக உயர்ந்துள்ளது.
No comments:
Post a Comment