இன்று (17.06.2022) பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அரியலூர் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் தொண்டர்களோடு தொண்டனாக கலந்து கொண்டார். - Agnipuratchi

இன்று (17.06.2022) பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அரியலூர் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் தொண்டர்களோடு தொண்டனாக கலந்து கொண்டார்.

Share This

இன்று (17.06.2022) பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அரியலூர் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் தொண்டர்களோடு தொண்டனாக கலந்து கொண்டார்.

முதல் நிகழ்ச்சியாக
பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் தேவதாஸ் படையாண்டவர் மற்றும் கீரப்பாளையம் ஒன்றிய பெருந்தலைவர் கனிமொழி் தேவதாஸ்படையாண்டவர் அவர்களின் மகன் மாமல்லன் சுஹானி இணையரின் திருமண விழா நடத்திவைத்து மணமக்களை வாழ்த்தினார். இதனைத் தொடர்ந்து

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம் அளக்குடி பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் கடல்நீர் உட்புகுவதை தடுப்பதற்காக கடலில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் தடுப்பணை கட்டவேண்டி அதிகாரிகளுடன் ஆலோசனை மற்றும் ஆய்வு செய்தபின், அப்பகுதி பொது மக்களிடம் கலந்துரையாடி, உடனடியாக அங்கே தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கி அப்பகுதியின் நிலத்தடிநீர், விவசாய நிலம், விவசாயத்தை காப்பற்ற தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தார்.

* அரியலூர் மாவட்டம், காடுவெட்டியில், வன்னியர் சங்க தலைவர் மாவீரன் குரு அவர்களின் மணிமண்டபத்தில் உள்ள அவரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும் வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் தொடக்கால நிர்வாகிகளில் ஒருவரும், கட்சிக்காக தன் குடும்பத்தையே அர்பணித்துக்கொண்டவருமான மறைந்த வேங்கை புலியன் அவர்களின் இல்லத்துக்கு சென்ற நான், அங்கு அவரது திருவுருவப்படத்தை திறந்துவைத்ததுடன், குடும்பத்தினர் அனைவருக்கும்  ஆறுதல் கூறினேன். ஏற்கனவே மறைந்த அவரது புதல்வர் இளங்கிள்ளியின் நினைவுத்தூணுக்கு மலர் மரியாதை செலுத்தினேன்.

வேங்கை புலியன் அவர்களின் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவர் அய்யா அவர்களுக்கும் வேங்கை புலியனுக்கும் இடையிலான காலத்தை கடந்த உறவை விளக்கும் புகைப்படக்காட்சியையும் பார்வையிட்டார் உடன் கடலூர், அரியலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages