அக்னிப்புரட்சி இன்றைய (17.06.2022) முக்கிய செய்திகள்.
* சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை குறைப்பு
இன்று (ஜூன் 17) சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் விலையில் 10 காசுகள் குறைக்கப்பட்டு ரூ. 102.63க்கும்,
ஒரு லிட்டர் டீசல் விலையில் 9 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.94.24 க்கும் விற்கப்படுகிறது.
* தமிழ்நாடு முழுவதும் எம்.ஜி.எம். குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக வருமானவரித்துறை சோதனை.
சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
* நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.
* தேனி மாவட்டம் கூடலூர் மாநில நெடுஞ்சாலையில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு - 25 பேர் காயம்
* சென்னை, மணலியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணமிழந்த பெருமாள் என்பவர் தூக்கிட்டு தற்கொலை
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிக பணத்தை இழந்த பெருமாள், கடன் சுமையால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை
சென்னை, மணலி புதுநகர் பகுதியில் ஆன்லைன் விளையாட்டில் பணமிழந்த பவானி என்ற பெண் சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது
* சிதம்பரம் காய்கனி சந்தையை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காய்கனி நல சங்கத்தினர் இன்று முழு கடையடைப்பு போராட்டம்
* ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்திற்கு ஆள் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுக்க இளைஞர்கள் போராட்டம்.
தீவிர போராட்டங்களால் அக்னிபாத் திட்டத்தின் வயது வரம்பை 21-லிருந்து 23 ஆக உயர்த்தியது மத்திய அரசு.
* கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 12,847 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; தொற்றில் இருந்து 7,985 பேர் குணமடைந்து வீடு திரும்பினர், 14 பேர் உயிரிழப்பு.
* சென்னை குன்றத்தூர் அருகே, பெற்றோர் இரவு முழுவதும் வாய்த்தகராறில் ஈடுபட்டதால் மனமுடைந்த 21 வயது மாணவி பிரீத்தி ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயற்சி!
மாணவி ஆபத்தான நிலையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதி!
* அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தர பிரதேசம், பீகார் மாநிலங்களில் வலுக்கும் போராட்டம்
உத்தர பிரதேசத்தில் உள்ள பல்லியா ரயில் நிலையத்தில், போராட்டக்காரர்கள் ரயிலை சேதப்படுத்தியதால் பரபரப்பு.
பீகார், மொகியுதி நகர் ரயில் நிலையத்தில் விரைவு ரயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைப்பு.
பீகார், தும்ரான் ரயில் நிலையத்தில் ரயில் பாதைகளை மறித்து, டயர்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தியதால் பதற்றம்.
* ஷேர்சாட் நிறுவனத்தில் ரூ.600 கோடி முதலீடு செய்யும் கூகுள்
ஷேர் சாட் மற்றும் மோஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மொஹெல்லா டெக் நிறுவனத்தின் மீது கூகுள் ரூ.600 கோடி முதலீடு செய்ய முன்வந்துள்ளது.
இந்நிறுவனத்தின் மதிப்பு தற்போது ரூ. 39 ஆயிரம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், கூகுள் முதலீடு செய்வது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக மோஜ் செயலியை எம்எக்ஸ் டகாடக் நிறுவனத்துடன் இணைந்திருந்தது. இதன் மூலம் முன்னணி செயலியாக வளர்ந்து வருகிறது.
* கர்நாடகாவில் 21 அரசு உயர் அதிகாரிகளின் அலுவலகம், வீடு உள்ளிட்ட 80 இடங்களில் லஞ்சஒழிப்புத்துறை சோதனை!
* சாலைகளை ஆக்கிரமித்துள்ள வாகனங்களை படமெடுத்து அனுப்பினால் பரிசு
டில்லியில் நேற்று (ஜூன் 16) நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசினார்.
அப்போது அவர், நான் ஒரு புதிய சட்டம் கொண்டு வரப்போகிறேன்.
சாலைகளை, தெருக்களை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை படமெடுத்து அனுப்பினால்,
அந்த குற்றத்துக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கிறபோது, படம் எடுத்து அனுப்பியவருக்கு ரூ.500 பரிசாக வழங்கப்படும் என்றார்.
* சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, சவரன் ரூ.38,200-க்கு விற்பனை.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து , சவரன் ரூ.38,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,775-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ரூ.1 அதிகரித்து ரூ.67-க்கு விற்கப்படுகிறது.
* நளினி, ரவிச்சந்திரனை விடுவிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு.
ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல், விடுதலை செய்யக் கோரி ராஜீவ் கொலை வழக்கில் கைதான ஆயுள் தண்டனை கைதி நளினி தாக்கல் செய்த மனு தள்ளுபடி-சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
உச்ச நீதிமன்றத்தை நாடுமாறு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்.
* வரும் 26-ஆம் தேதி திறக்கப்படுகிறது முக்கொம்பு புதிய மேலணை.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு வெள்ளத்தில் முக்கொம்பு பழைய மேலணை இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது
.
* காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் உள்ளார்.
அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது-காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை.
* ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணி வழங்க 'நியமனத்தேர்வு' என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும்- தமிழ்நாடு அரசுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
* சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது என்ற ஆணைக்கு இடைக்கால தடை கோரிய மீனவர்களின் மனு -மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.
* அக்னிபத் - இளைஞர்கள் நிராகரிப்பு, வேளாண் சட்டம் - விவசாயிகள் நிராகரிப்பு, பணமதிப்பிழப்பு - பொருளாதார அறிஞர்கள் நிராகரிப்பு, ஜிஎஸ்டி - வர்த்தகர்கள் நிராகரிப்பு-காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்வீட்.
பாஜகவிற்கு நண்பர்களின் குரல்களை தவிர, வேறு எதுவும் கேட்பதில்லை - ராகுல் காந்தி.
* பீகார், உ.பி., செல்லும் ரயில் சேவைகள் ரத்து!
தென்னக ரயில் கோட்டத்தில் இருந்து பீகார், கிழக்கு உத்தர பிரதேசம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் ரயில்கள் ரத்து
அக்னிபத் போராட்டங்கள் வலுவடைந்து வரும் நிலையில் தென்னக ரயில்வே அறிவிப்பு.
* 21ல் எதிர்க்கட்சிகள் ஆலோசனை!
குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஜூன் 21ம் தேதி மீண்டும் ஆலோசனை நடத்த முடிவு
எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளரை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்த முடிவு.
* மேகதாது குறித்து ஜூன் 23ம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிப்போம் என அதன் தலைவர் ஹல்தர் பேட்டி
மேகதாது உள்ளிட்ட அணை விவகாரங்கள் குறித்து விவாதிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு முழு அதிகாரம் உள்ளது - ஹல்தர்
* ஒருநாள் கிரிக்கெட் - அதிக ரன்களை குவித்து இங்கிலாந்து சாதனை.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிகபட்ச ரன்களை குவித்து இங்கிலாந்து அணி புதிய சாதனை.
நெதர்லாந்து அணிக்கு எதிராக நடந்தப் போட்டியில் 50 ஓவர்களில் 498 ரன்களை குவித்து தனது முந்தைய சாதனையை முறியடித்தது இங்கிலாந்து அணி.
2018ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 481 ரன்களை குவித்து சாதனை படைத்தது இங்கிலாந்து.
* ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து உலக சாதனை!
நெதர்லாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 498 ரன்கள் குவித்து உலக சாதனை
ஒருநாள் போட்டி வரலாற்றிலேயே ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ரன்களை எடுத்து இங்கிலாந்து உலக சாதனை
இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 498 ரன்கள் எடுத்துள்ளது
அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் - 162, டேவிட் மலன் - 125, பிலிப் சால்ட் - 122, லிவிங்ஸ்டன் - 66 ரன்களை எடுத்தனர்
கடந்த 2018ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 481 ரன்கள் அடித்த தனது முந்தைய சாதனையை தானே முறியடித்தது இங்கிலாந்து அணி.
* அக்னிபாத் போராட்டத்தால் 12 ரயில் சேதம், 340 ரயில் சேவை பாதிப்பு .
அக்னிபாத் போராட்டத்தால் மொத்தம் 340 ரயில்களின் சேவைகள் பாதிப்பு.
புதன்கிழமை முதல் இன்று வரை 12 ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன - ரயில்வே.
* அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலங்கானா மாநிலம் செகந்திரபாத் ரயில் நிலையத்தில் ரயிலுக்கு தீ வைப்பு!
No comments:
Post a Comment