அக்னிப்புரட்சி இன்றைய (22.06.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (22.06.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (22.06.2022) முக்கிய செய்திகள்.

* 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இன்று முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். 

இன்று முதல் வரும் 29ம் தேதி வரை பள்ளிகள் வாயிலாக மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் - தேர்வுகள் இயக்ககம்.

* சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!

அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கு போலீசுடன் ஆயுதப்படை போலீஸ் 30 பேர் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்!

* தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தர்மம் மறுபடியும் வெல்லும் - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ட்வீட்

மாபெரும் மக்கள் இயக்கமான அதிமுகவில் தற்போது அராஜகம் மற்றும் சர்வாதிகாரப் போக்கு நிலவுகிறது.

தென்சென்னை மாவட்ட இணை செயலாளர் கேசவன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அறிந்து வேதனை அடைந்தேன்

விபரீதமான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் - தொண்டர்களுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்

* அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
tngasa.in, tngasa.org ஆகிய இணையதள முகவரிகளில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

27ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் விண்ணப்பத் தேதி முன்கூட்டியே தொடக்கம்.

* பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவுக்கு Z+ பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது மத்திய அரசு.

* அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி தரக்கூடாது என ஆவடி காவல் ஆணையரகத்தில் ஓபிஎஸ் நேற்று அளித்த கோரிக்கை மனுவை நிராகரித்தது போலீஸ் !

* மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நண்பர் விஜயகாந்த் விரைந்து குணமடைய வாழ்த்துகிறேன் - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

* நாளை பொதுக்குழு நடக்கவுள்ள நிலையில்,  அதிமுக ஒருங்கிணைப்பாளரும், பொருளாளருமான ஓபிஎஸ்சிடம் கட்சியின் வரவு செலவு அறிக்கை ஒப்படைப்பு

பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ்தான் கணக்கு வழக்கு விவரத்தை வாசித்துக் காட்ட வேண்டும் என்பதால் கணக்கு ஒப்படைப்பு

அதிமுகவின் வரவு செலவு அறிக்கையை ஒருங்கிணைப்பாளரும், பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வத்திடம் அளிக்கப்பட்டுள்ளது

ஒவ்வொரு பொதுக்குழுவிலும் கட்சியின் ஆண்டு வரவு செலவு கணக்கை பொருளாளர் வாசிப்பார்

அதன் அடிப்படையில் வரவு செலவு கணக்கு குறித்த தகவல்கள் ஓபிஎஸ் இடம் ஒப்படைப்பு

* இலங்கைக்கு 2ம் கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து கப்பலில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 14,700 டன் அரிசி, 250 டன் பால் பவுடர், 60 டன் மருந்து உள்ளிட்ட பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைப்பு.

* ஒடிசா: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு, ரைரங்பூரில் உள்ள சிவன் கோவிலில் பிரார்த்தனை செய்வதற்கு முன் தரையை துடைத்தார்.

* ஆப்கானிஸ்தானில் இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 250 பேர் உயிரிழந்தனர்.

கிழக்கு ஆப்கானிஸ்தான், அதனை ஒட்டிய பாகிஸ்தானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக் கோளில் 6.1 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தென் கிழக்கே உள்ள கோஸ்ட் நகரில் இருந்து 44 கிமீ தொலைவில் 51 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலும் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் உள்ளிட்ட சில பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்ததில் இடிபாடுகளில் சிக்கி இதுவரை 250 பேர் உயிரிழந்துள்ளதாக தலிபான் நிர்வாகத்தின் இயற்கை பேரிடர் அமைச்சகத்தின் தலைவர் முகமது நாசிம் ஹக்கானி அதிகாரப்பூர்வ தகவலை அறிவித்துள்ளார்.

இந்த நிலநடுக்கத்தால் பக்டிகா மாகாணத்தில் மட்டும் 100 பேர் இறந்த நிலையில், 250 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோஸ்ட், நங்கர்ஹார் மாகாணங்களிலும் நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் இடிந்ததில் பலர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கத்தால் பாகிஸ்தானிலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் காயம் அடைந்துள்ள நிலையில், நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

* பொதுக்குழுவுக்கு வாருங்கள்; பிரச்னைகளை பொதுக்குழுவில் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் - ஓ.பி.எஸ்.க்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அளவுக்கு அசாதாரண சூழல் இல்லை; திட்டமிட்டபடி பொதுக்குழு - செயற்குழு நடக்கும்.

ஒருங்கிணைப்பாளர்கள் என்ற முறையில் இருவரும் இணைந்து பொதுக்குழுவுக்கு அழைத்தது போல, பொதுக்குழுவில் பங்கேற்போம் - எடப்பாடி பழனிசாமி

இக்கடிதத்தில் ஒற்றைத்தலைமை குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை

* பொதுச்செயலாளர் பதவி இனி இல்லை என கடந்த ஆண்டு கூறிவிட்டு தற்போது ஒற்றை தலைமை குறித்து தீர்மானம் நிறைவேற்றவுள்ளனர்

பொதுக்குழு வழக்கமான முறையில் நடத்த ஆட்சேபனை இல்லை  – பொதுக்குழு உறுப்பினர் சண்முகம்

* மாலத்தீவில் இருந்து திரும்பிய விராட் கோலிக்கு கோவிட் -19 தொற்று உறுதி ஆனது.

* 23 வரைவு தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளித்தார் ஓபிஎஸ்

அதிமுக தீர்மானக்குழு தயாரித்து அனுப்பிய 23 வரைவு தீர்மானங்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல்

* புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் நினைவு மணிமண்டபம் அமைக்கப்படும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

* தமிழகத்தில் முதற்கட்டமாக 50 உழவர் சந்தைகளில் மின்னணு தகவல் பலகைகள்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று சேப்பாக்கம், தோட்டக்கலை துறை இயக்குநரகத்தில் உழவர் சந்தை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

ஒவ்வொரு சனிகிழமையிலும் தோட்டக்கலை மற்றும் வேளாண் விற்பனை அதிகாரிகள் கூட்டாக சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று காய்கறிகள் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயிகளின் நலனுக்காக, உழவர் சந்தைகளில் மாதமிருமுறை விழிப்புணர்வுக் கூட்டம் மற்றும் பயிற்சி நடத்தப்படும்.

உழவர் சந்தைகளை மாலையில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான சாத்திய கூறுகளும் ஆய்வு செய்யப்படும்.

தமிழகத்தில் முதற்கட்டமாக 50 உழவர் சந்தைகளில் மின்னணு தகவல் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளது.

படிப்படியாக இந்த வசதி அனைத்து உழவர் சந்தைகளிலும் விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

* குமுதம் வார இதழ் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ப்ரியா கல்யாணராமன் என்ற ராமச்சந்திரன் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன் என்று முதல்வர் கூறியுள்ளார்.

குமுதம் இதழை காலத்திற்கேற்ப நவீனப்படுத்தியதில் ப்ரியா கல்யாணராமனுக்கு முக்கிய பங்கு உள்ளது என்று கூறியுள்ளார். 

ப்ரியா கல்யாணராமனை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை முதலமைச்சர் தெரிவித்தார்.

* அதிமுக பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ள வாகனகரம் மண்டபத்திற்கு ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பேரணியாக வந்ததால் பரபரப்பு.

உள்ளே செல்ல அவர்களுக்கு போலீசார் அனுமதி மறுப்பு; அழைப்பு இருப்பவர்கள் நாளை பொதுக்குழு கூட்டத்திற்கு வர அறிவுறுத்தல்.

* ராஜினாமா-தாக்கரே ஆவேசம்:
நான் எனது ராஜினாமா கடிதத்தை எனது எம்.எல்.ஏ.க்களிடம் கொடுக்க தயாராக உள்ளேன் - தாக்கரே

எனது கட்சி தொண்டர்கள் கூறினால் சிவசேனா கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகவும் நான் தயாராக உள்ளேன்.

நீங்கள் (எம்.எல்.ஏ.க்கள்) கூறினால் நான் முதல்வர் பதவியில் இருந்து விலக தயார். இது எண்ணிக்கை சம்பந்தமானதல்ல. ஆனால், எத்தனைபேர் எனக்கு எதிராக உள்ளனர் என்பது பொறுத்தது.

ஒரு எம்.எல்.ஏ. எனக்கு எதிராக இருந்தாலும் அது எனக்கு மிகவும் அவமானகரமானது.

முதல்வர் பதவி வரும்... போகும்.. ஆனால், மக்களின் அன்பு தான் உண்மையான சொத்து.- தாக்கரே ஆவேசம்

* சென்னை, வானகரத்தில் அதிமுக பொதுக்குழு வரவேற்பு பேனர்கள் கிழிப்பு நாளை பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில் பேனர்கள் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு

* மீண்டும் உயரும் கொரோனா
தமிழ்நாட்டில் கடந்த 24மணி நேரத்தில் 771பேருக்கு புதிதாக கொரோனா தொற்று; உயிரிழப்புகள் இல்லை

* அதிமுக பொதுக்குழுவிற்கு நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு

சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனு தள்ளுபடி

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்னும் தீர்ப்பு வரவில்லை

இது ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றிய அதிமுக மாணவர் அணி முன்னாள் பொருளாளரான சி.பாலகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு மீது உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு.

* ஓ.பி.எஸ் ஆதரவாளராக இருந்த வந்த முன்னாள் எம்.பி இளவரசன் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து ஆதரவு தெரிவிக்க வருகை

* அதிமுக பொதுக்குழு நடத்த தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு.

*:அதிமுக பொதுக்குழு நடத்த அனுமதி
நாளை சென்னையில் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என உத்தரவு

பொதுக்குழுவில் கட்சியின் சட்ட விதிகளை திருத்தவும் தடையில்லை; பொதுக்குழு விதிகளை திருத்துமாறு கோரும் வழக்குகளில் நீதிமன்றம் தலையிட முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages