அக்னிப்புரட்சி இன்றைய (24.06.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (24.06.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (24.06.2022) முக்கிய செய்திகள்.

* +2 தவறியவர்கள் மீண்டும் மறுதேர்வு எழுத அட்டவணை வெளியீடு.

* தனது படத்திற்கு இளையராஜா இசை : ஆஸ்கர் கிடைத்த மகிழ்ச்சியாய் வெங்கட்பிரபு நெகிழ்ச்சி

மாநாடு படத்தின் வெற்றிக்கு பின் வெங்கட்பிரபு மன்மதலீலை படத்தை எடுத்தார். அந்த படமும் வரவேற்பை பெற்றது. அடுத்து நாகசைதன்யாவை வைத்து தெலுங்கு, தமிழ் இரு மொழிகளில் உருவாகும் படத்தை இயக்குகிறார். நாகசைதன்யாவின் 22வது படமாக உருவாகும் இந்த படம் விரைவில் உருவாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைக்க போவதாக தகவல் வந்தது. தற்போது அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம் முதன்முறையாக வெங்கட்பிரபு படத்திற்கு இளையராஜாவும், யுவனும் இணைந்து இசையமைக்க உள்ளனர்.

இதுபற்றி வெங்கட்பிரபு கூறுகையில், ‛‛கனவு நனவாகி உள்ளது. முதன்முறையாக எனது பெரியப்பா இளையராஜா உடன் இணைந்து, தம்பி யுவன் உடன் பணியாற்ற உள்ளேன்'' என்றார்.

வெங்கட்பிரபுவின் படத்திற்கு இசையமைக்க போவதற்கு தெலுங்கில் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளயிட்டுள்ளார் இளையராஜா.

இதற்கு வெங்கட்பிரபு, ‛‛இந்த ஆஸ்கருக்கு நன்றி ராஜா அப்பா. இது எனது வாழ்நாள் சாதனை. லவ் யூ ராஜா பா'' என தெரிவித்துள்ளார்.

* கனரக வாகனங்கள் தில்லிக்குள் நுழைய தடை

அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி (2023-ஆம் ஆண்டு) வரை கனரக வாகனங்கள் தில்லி பகுதிக்குள் நுழைய அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. குளிர்காலத்தில் ஏற்படும் காற்று மாசுவை தடுக்கவே இந்த தடை என தில்லி அரசு விளக்கம்.

* கடலூர்; எம்.புதூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு.

ஏற்கனவே 3 பேர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு.

வசந்தா(45) என்ற பெண் சிகிச்சை பலனின்றி கடலூர் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு.

* மாற்றுத்திறனாளி உலமாக்கள் ஓய்வூதியம் பெறும் வயதை குறைத்து அரசாணை வெளியீடு.

ஓய்வூதியம் பெறுவதற்கான வயது வரம்பு 50-ல் இருந்து 40-ஆக குறைப்பு - அரசாணை.

* உரிய பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகளை நிறுத்த வேண்டும் - ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவு.

பேருந்து நிறுத்தத்தை விட்டு பேருந்தை தள்ளி நிறுத்துவதால், பயணிகள் சிரமம்.

பயணிகள் கீழே விழுந்து காயம் ஏற்படும் சூழ்நிலையும், சில நேரங்களில் மரண விபத்தும் ஏற்பட ஏதுவாகிறது - போக்குவரத்துத்துறை.

அனைத்து ஓட்டுநர், நடத்துநர்களும் உரிய பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி, இறக்கிவிட உத்தரவு.

பேருந்தை சாலையின் நடுவில் பிற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நிறுத்தக் கூடாது - போக்குவரத்துத்துறை.

* சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை -தேவஸ்தானம்.

மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வராத பட்சத்தில் முன்பதிவு செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் தரிசன அனுமதி வழங்கப்படும்- சபரிமலை ஐயப்பன் கோயில் தேவஸ்தானம்.

கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை- தேவஸ்தானம்.

* சட்ட விரோதமாக பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க முயற்சி நடக்கிறது - தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு.

ஜூலை 11-ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் - ஓ.பி.எஸ்.

அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டதற்கு நான் ஒப்புதல் வழங்கவில்லை.

சட்டப்படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தான் பொதுக்குழுவை கூட்டமுடியும்.

இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஆன்லைன் மூலம் ஓ.பி.எஸ் சார்பில், மனோஜ் பாண்டியன் மனுத்தாக்கல்.

* 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தொடரை ஒட்டி அரசுப் பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டி - ₹1 கோடி நிதி விடுவித்து அரசாணை வெளியீடு.

வட்ட, மாவட்ட, மாநில அளவில் செஸ் போட்டிகளை நடத்தி அதில் வெற்றி பெறும் மாணவர்களை, சர்வதேச வீரர்களுடன் கலந்துரையாட வைக்க நடவடிக்கை.

* அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகிவிட்டது - சி.வி.சண்முகம்.

ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான சட்ட திருத்தத்தை நேற்று பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறாததால், அந்த பதவி தானாகவே காலாவதி ஆகிவிட்டது - சி.வி.சண்முகம்

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் நேற்றோடு காலாவதி ஆகிவிட்டன - சி.வி.சண்முகம்.

ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவின் பொருளாளர், எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தலைமை நிலையச் செயலாளர் மட்டுமே - சி.வி.சண்முகம்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகிவிட்டதால் அதிமுக பொதுக்குழு புதிய தலைமையை தேர்வு செய்யும் - சி.வி.சண்முகம்.

ஓ.பன்னீர் செல்வத்தை முன்னாள் ஒருங்கிணைப்பாளர், வைத்திலிங்கத்தை முன்னாள் துணை ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி சி.வி.சண்முகம் பேட்டி

* தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் முன்னிலையில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

* அதிமுக பொதுக்குழு தொடர்பாக தேர்தல் ஆணையத்தை நாடவில்லை - ஓபிஎஸ் தரப்பு வைத்திலிங்கம் தகவல்.

* கொரோனா அதிகரித்தாலும் தமிழகத்தில் தற்போதைக்கு புதிய கட்டுப்பாடுகள் இல்லை - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

கொரோனாவால் உயிர் பாதிப்பு குறைவாகவே உள்ளது; மக்கள் எச்சரிக்கையாக இருந்தாலே போதும்.

குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பும்போது கொரோனா அறிகுறி இருக்கிறதா? என கண்காணிக்க வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

* உயர்நீதிமன்ற உத்தரவை மீறி, அவைத் தலைவர் நியமன தீர்மானத்தை எப்படி கொண்டு வந்தார்கள்?

அனைத்து பதவிகளும் ரத்து என்றால் பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிகளும் ரத்து தானே?- சி.வி.சண்முகத்துக்கு வைத்திலிங்கம் கேள்வி

* விழுப்புரம், அதிமுக அலுவலகத்தில் வரையப்பட்டிருந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் புகைப்படம் மற்றும் பெயர் அழிப்பு.

சுவர் விளம்பரங்களிலும் எழுதப்பட்டிருந்த ஓ.பி.எஸ் பெயர் அழிப்பு.

* ஆவின் கடைகளில் ஆவின் பொருட்கள் மட்டுமே விற்க வேண்டும்.

மற்ற பொருட்கள் விற்பனை செய்தால் கடையின் உரிமை ரத்து செய்யப்படும் - பால்வளத்துறை அமைச்சர் எச்சரிக்கை.

* மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் கட்டாயம் இடஒதுக்கீடு பின்பற்ற வேண்டும்-பள்ளிக்கல்வித்துறை.

பொதுப்பிரிவில் 31 சதவீதம், எஸ்டி 1 சதவீதம், எஸ்சி 18 சதவீதம், எம்பிசி 20 சதவீதம், பிசிஎம் 3.5 சதவீதம், பிசி 26.5 சதவீதம் இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும்.

மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே பொதுப்பிரிவினருக்கு 31 சதவீதம் இடஒதுக்கீட்டுக்கான பட்டியல் தயாரிக்க வேண்டும்.

அனைத்துப் பிரிவினருக்கும் ஏற்ற வகையில் பாகுபாடின்றி பட்டியல் தயாரிக்க வேண்டும்- பள்ளிக்கல்வித்துறை.

இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடக்கிறதா என்பதை முதன்மைக்கல்வி அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

* பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் வகுக்க உத்தரவு.

டாஸ்மாக் பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்த திட்டம் வகுக்க உயர்நீதிமன்றம் ஆணை.

சுற்றுச்சூழல் பாதிப்பை சரிசெய்ய வேண்டிய கடமை மாநில அரசுக்கு உள்ளது.

திட்டத்தை வகுத்து ஜூலை 15க்குள் சமர்ப்பிக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

* மாமுல் வாங்கும் போலீசாருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்- தமிழக உள்துறை செயலாளர்,டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

மாமூல் வாங்கும் போலீஸுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மட்டுமல்லாமல், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் -சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

சென்னை பெரியார் நகரில் மதுபான கடை அருகே பெட்டிக்கடை நடத்தியவரிடம் வாரந்தோறும் 100 லஞ்சம் வாங்கியதாக சிறப்பு உதவி ஆய்வாளர் மீது புகார்.

மாமுல் வாங்கியதாக ஊதிய உயர்வு பலன்களை நிறுத்திய உத்தரவை எதிர்த்து உதவி ஆய்வாளர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி.

* பொதுக்குழுவில் திட்டமிட்டு ஓ பன்னீர்செல்வத்தை அவமதித்தனர்

ஓ பன்னீர்செல்வம் பேசியபோது பாதியில் மைக்கை ஆப் செய்தனர்

ஒற்றை தலைமை என ஏற்கனவே கூறியதை பொதுக்குழுவில் ஒப்பித்தனர் -ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் பேட்டி

பொதுக்குழுவில் எங்களை கண்ணியமாக நடத்தினார்களா என்பதை நாடே அறியும்

அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் கட்சிகள் அல்ல. அது தொண்டர்களின் கட்சி

நிர்வாகிகள் பழனிச்சாமி பக்கமும், தொண்டர்கள் ஓ பன்னீர்செல்வம் பக்கமும் உள்ளனர் - ஜேசிடி பிரபாகர்

* பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் 57-ஆவது திருமண நாளையொட்டி தனது இல்லத்தில் மரக்கன்று நட்டார்!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா  - கல்வித்தாய் சரசுவதி அம்மையார்  இணையர் அவர்களின் 57-ஆவது திருமண நாளையொட்டி  தைலாபுரம் தோட்ட இல்லத்தில் இன்று மரக்கன்று நட்டனர். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், பேரக்குழந்தைகள், கொள்ளுப்பேரக் குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் உடன் உள்ளனர்.

* குழந்தைகளை பாதிக்கும் குரங்கம்மை நோய்.

உலகம் முழுவதும் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், சர்வதேச அளவில் அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு;

சமூக பரவலாக மாறினால் குழந்தைகளை பாதிக்கக்கூடும் என எச்சரிக்கை.

* உடற்கல்வி, யோகா படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்.

உடற்கல்வி, விளையாட்டு, யோகா உள்ளிட்ட 17 வகையான படிப்புகளில் சேர விரும்புவோர் வரும் 26ம் தேதி முதல் ஜூலை 19ம் தேதி வரை www.tnpesu.edu.in என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

- தமிழ்நாடு உடற்கல்வியியல் & விளையாட்டு பல்கலைக்கழகம் அறிவிப்பு.

* தமிழகத்தில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 27ம் தேதி வெளியிடப்படும்-தேர்வுத்துறை அறிவிப்பு.

ஜூலை 7ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் முன்கூட்டியே வெளியீடு.

dge.tn.nic.in மற்றும் dge.tn.gov.in என்ற இணையதளங்களில் காலை 10 மணிக்கு முடிவுகள் வெளியாகும்.

* நாட்டின் ரா உளவு அமைப்பின் தலைவர் சமந்த் கோயல்லின் பதவி காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

* காற்று மாசு காரணமாக இந்தியர்களின் சராசரி ஆயுள் 5 ஆண்டுகள் குறையும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

* தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பில் ( DEE ) சேர scert.tnschools.gov.in இணையதளத்தில் ஜூலை 4-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
-பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

* தொழிற்பயிற்சி நிலையங்களில் ITI சேர இன்று முதல் வரும் ஜூலை 20 வரை skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் தகவல்கள், சந்தேகங்களுக்கு 9499055612 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.

* புதிய இந்தியாவில்' நண்பர்கள் சொல்வது மட்டுமே கேட்கப்படும் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

* யூடியூபர் கார்த்தி கோபிநாத்திற்கு எதிரான வழக்கு விசாரணைக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

* இந்திய அரசு வேண்டுகோள் விடுத்தால் மலேசியாவில் அனைத்து துறைகளிலும் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என மலேசிய மனிதவள அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

* குஜராத் கலவரம்- மோடி குற்றமற்றவர் என்பதை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது.

குஜராத் கலவரத்துக்கு மோடி மற்றும் போலீஸ் அதிகாரிகள் உள்பட 64 பேர் தான் காரணம் என அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது.

குஜராத் கலவர வழக்கில் இருந்து பிரதமர் மோடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை

குஜராத் மாநிலம் கோக்ரா என்ற இடத்தில் கடந்த 2002-ம் ஆண்டில் கரசேவர்கள் வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் 59 பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து குஜராத் மாநிலம் முழுவதும் மதக்கலவரம் மூண்டது. வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. அகமதாபாத் குல்பர்க் சொசைட்டி பகுதியில் நடந்த வன்முறையில் 68 பேர் இறந்தனர். கோக்ரா ரெயில் எரிப்பு சம்பவத்திற்கு பிறகு நடந்த மோசமான வன்முறை இதுதான்.

இதில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. எக்சான் ஜாப்ரி கொல்லப்பட்டார். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் நடந்தபோது குஜராத் மாநிலத்தில் மோடி முதல்-மந்திரியாக இருந்தார்.

இந்த கலவரத்துக்கு மோடி மற்றும் போலீஸ் அதிகாரிகள் உள்பட 64 பேர் தான் காரணம் என அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.

குஜராத் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழுவும் அமைக்கப்பட்டது.

இந்த குழு விசாரணை நடத்தி 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிக்கை தாக்கல் செய்தது. அதில் குஜராத் கலவரத்தில் மோடி உள்ளிட்ட 64 பேருக்கு தொடர்பு இல்லை என்றும் இதற்கான எந்தவிதமான முகாந்திரமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து கலவரத்தின்போது கொல்லப்பட்ட முன்னாள் எம்.பி.யின் மனைவி ஜக்கியா ஜாப்ரி குஜராத் ஜகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஜகோர்ட்டு 2017-ம் ஆண்டுஅவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து ஜக்கியா ஜாப்ரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவில், கலவரம் தொடர்பாக புதிய விசாரணை குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு மீதான விசாரணையை நீதிபதிகள் கான் வில்சர், தினேஷ் மகேஸ்வரி, மற்றும் ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு நடத்தியது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் குஜராத் கலவர வழக்கில் இருந்து பிரதமர் மோடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை. எனவே மனுவை தள்ளுபடி செய்கிறோம்.

இந்த வழக்கில் மேல் விசாரணை தேவையில்லை. மோடி குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை நிராகரிக்கிறோம். விசாரணை குழு அறிக்கையை ஏற்று மோடி உள்ளிட்ட 64 பேரை விடுவித்ததை உறுதி செய்த ஜகோர்ட்டு உத்தரவு சரி தான் என்று தீர்ப்பு கூறினார்கள்.

* பத்திரிக்கைச் செய்தி: தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

* சென்னை, கே.கே.நகரில் மரம் சாய்ந்து விழுந்து வங்கி மேலாளர் வாணி உயிரிழப்பு

காரில் சென்று கொண்டிருந்த போது மரம் சாய்ந்து விழுந்து விபத்து

சென்னை போரூரில் வசித்து வரும் வாணி, கே.கே.நகர் பகுதியில் காரில் சென்றபோது விபத்து

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages