அக்னிப்புரட்சி இன்றைய (28.06.2022) முக்கிய செய்திகள்.
* மும்பையில் 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து:
மகாராஷ்டிரா: மும்பையின் குர்லாவில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து இதுவரை 8 பேர் உயிருடன் மீட்பு.
அடுக்குமாடி கட்டடத்தின் இடிபாடுகளில் சுமார் 20 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்பதால் மீட்புப்பணி தீவிரம்.
* அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 46 அகதிகள் சடலமாக மீட்பு;16 பேர் கவலைக்கிடம்.
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 46 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெக்சாஸ் மாநிலத்தில் சான் ஆன்டோனியோ பகுதியில் ரயில் பாதைக்கு அருகே கண்டெய்னர் லாரி ஒன்றில் சடலங்கள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
அங்கு விரைந்து வந்த போலீசார் லாரியை சோதனை செய்தனர்.
அதில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் சடலமாக கிடப்பது தெரியவந்துள்ளது.
16 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விசாரணையில் அவர்கள் அனைவரும் குடிபெயர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
சிகிச்சை பெறுபவர்களிடம் விசாரணை நடத்திய பின்பே முழுமையான விவரம் தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ் மனு:
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக 5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது.
தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தை கூட்ட தலைமை நிலைய செயலாளருக்கு அதிகாரம் இல்லை.
என் அனுமதியின்றி நடைபெற்றவை சட்ட விதிகளின்படி தவறானவை.
* திட்டமிட்டபடி ஜூலை 17ல் நீட் தேர்வு நடைபெறும் - தேசிய தேர்வு முகமை.
அதே தேதியில் பல்வேறு தேர்வுகள் நடைபெறுவதால் தேதியை மாற்றக்கோரி கோரிக்கைகள் எழுந்த நிலையில் தேர்வு நடைபெறும் என அறிவிப்பு.
ஜூலை 15-ம் தேதி தொடங்கும் CUET - UG தேர்வும் திட்டமிட்டபடி நடைபெறும்.
ஜூலை 21-ல் தொடங்கும் JEE Main தேர்வும் திட்டமிட்டபடி நடைபெறும் - தேசிய தேர்வு முகமை.
* ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவிற்கு தடை கோருவதுடன், கட்சிப் பதவிகளில் மாற்றம் கொண்டுவர தற்காலிக தடை விதிக்க வேண்டும் என ஓ.பி.எஸ் தரப்பு முறையிட முடிவு.
நீதிமன்றத்தில் மனு தள்ளுபடி செய்யப்பட்டால், தேர்தல் ஆணையத்தை நாடவும் ஓபிஎஸ் தரப்பில் முடிவு.
* பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 9 பேர் ஈ.பி.எஸ் இல்லம் வருகை.
பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஓ.பி.எஸ் ஆதராவாளராக உள்ள நிலையில், பொதுக்குழு உறுப்பினர்கள் ஈ.பி.எஸ்-க்கு ஆதரவு.
* முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு கொடுத்த அறிக்கையில் பரிந்துரை.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தை இழந்து 17 பேர் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் விளையாட்டுகளால் திறன்கள் மேம்படுவதாக சொல்லப்படுவது தவறானது.
ஏற்கனவே கொண்டு வரப்பட்ட சட்டத்தை கைவிட்டு, புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும்.
இந்த விளையாட்டுக்களால் பொதுமக்களின் உடல் நலம் பாதிக்கப்படுகிறது: இயல்பு நிலையில் வாழ்வதற்கு எதிராக ஆன்லைன் விளையாட்டுகள் இருக்கின்றன.
ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துவது இயலாத ஒன்று என்பதால் அதை முழுவதுமாக தடை செய்ய வேண்டும் - அறிக்கை.
* கர்நாடகா, குடகு மாவட்டத்தில் லேசான நில அதிர்வு - ரிக்டர் அளவில் 3.5ஆக பதிவு.
தட்சிண கன்னடா மாவட்டத்திலும் நில அதிர்வு - ரிக்டர் அளவில் 2.3 ஆக பதிவு,
கர்நாடகாவில் ஒரே வாரத்தில் 2 வது முறையாக நில அதிர்வால் மக்கள் அச்சம்.
* சென்னையில் நடைபெறும் விளையாட்டு வீரர்களுக்கான மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை:
விளையாட்டுத் துறைக்கு திமுக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின் அனைத்து துறைகளிலும் பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறோம்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெறுவது நமக்கு பெருமை.
செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளதால் உலகமே தமிழகத்தை உற்றுநோக்க உள்ளது.
உரிய நேரத்தில் எடுத்த முயற்சியால் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த தமிழகத்திற்கு வாய்ப்பு கிடைத்தது - முதல்வர் ஸ்டாலின்.
* பிளாஸ்டிக் உற்பத்தி, விற்பனைக்கு ஜூலை 1 முதல் தடை.
நாடுமுழுவதும் ஜூலை 1 முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்கு தடை-மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவிப்பு.
* தூங்கும் அறநிலையத்துறை – சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி.
இந்து கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கைககள் எடுக்காமல் தூங்கி கொண்டிருக்கின்றனர் - சென்னை உயர்நீதிமன்றம்.
பொன்னேரி காளத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 18.72 ஏக்கர் நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சீனிவாசன் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.
வழக்கு விசாரணை தலைமை நீதிபதி முனிஸ்வரர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என். மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அறநிலையத்துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், பொன்னேரி காளத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 18 ஆக்கிரமிப்புகளில் 14 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.
மீதமுள்ளவற்றை அகற்ற அவகாசம் வழங்க வேண்டும்; தமிழ்நாட்டில் உள்ள கோவிலுக்கு சொந்தமான 1100 ஏக்கர் நிலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
வரலாற்று சிறப்பு மிக்க பல்வேறு கோவில்கள் இன்னும் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளதற்கும் இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் செயல்படாத நிலையே காரணம் என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
50 ஆண்டுகாலமாக உள்ள அக்கிரமிப்பு இடங்களை அகற்றாமல், இப்பொழுது வந்து கடந்த ஓராண்டாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறுவது ஏற்று கொள்ள முடியாது.
கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டிய இந்து அறநிலையத் துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கி கொண்டு இருக்கிறது.
ஆக்கிரமிப்புகளை அரம்பத்திலேயே தடுத்த நிறுத்த வேண்டிய இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் வெறும் சம்பளத்தை மட்டும் வாங்கி கொண்டு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று கூறிய நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணை மூன்று வாரங்கள் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
* தமிழகத்தில் 8,462 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை 3 ஆண்டுகளுக்கு நீடித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
8,462 தற்காலிக பணியிடங்களுக்கு 1-1-2022 முதல் 31-12-2024 வரை 3 ஆண்டுகளுக்கு அல்லது தற்காலிக பணியிடங்களுக்கான தேவை குறித்து நிதித்துறையின் மறு ஆய்வில் முடிவெடுக்கும் வரை இதில் எது முந்தையதோ அதுவரை தொடர் நீட்டிப்பு செய்து உத்தரவு.
* விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ், தமிழக அரசு அரசாணை வெளியீடு.
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60-ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு, புதிய வெயிட்டேஜிக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58-ஆக இருந்த போது அரசு ஊழியர் ஒருவர் 54-வயது மற்றும் அதற்கு கீழ் வயதிற்குள்ளாக விருப்ப ஓய்வு பெற்றிருந்தால் அவர்களுக்கு கூடுதலாக ஐந்து ஆண்டு பணியாற்றியதாக வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் அவருக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது.
தற்போது ஓய்வு பெறும் வயது 60-ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் 54-க்கு பதிலாக 55-வயது மற்றும் அதற்கு கீழ் பணியாற்றி விருப்ப ஓய்வு கொடுத்தால், அதேபோல ஓய்வு பெறும் வயது ஐம்பத்தி ஆறு என்றால் அவருக்கு நான்காண்டுகள் வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டு 60-ஆண்டுகள் அவர் பணியாற்றியதாக கருதப்பட்டு மாத ஓய்வூதியம் கணக்கிடப்படும்.
ஐம்பத்தி ஏழு வயதாகி ஓய்வு பெற்றால் மூன்று ஆண்டுகள் வெயிட்டேஜ் கொடுக்கப்படும்.
ஐம்பத்தி ஒன்பது வயதில் விருப்பு ஓய்வு கொடுத்தால் அவர் 60-வயது பணியாற்றியதாக கருதப்பட்டு மாத ஓய்வூதியம் கணக்கிடப்படும்.
விருப்ப ஓய்வு பெற்ற மாதத்திலிருந்து அவர்களுக்கு சம்பளம் நிறுத்தப்பட்டு ஓய்வு ஊதியம் மட்டுமே வழங்கப்படுவதால், இதுபோன்ற புதிய வெயிட்டேஜிக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
2004-க்கு பிறகு சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு மாத ஓய்வூதியம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
* கொரோனா பரவல்: மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை கடிதம்.
வரும் மாதங்களில் பல்வேறு மாநிலங்களில் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகள் நடைபெற உள்ளன.
கொரோனா பரவல் அதிகரிக்காமல் இருக்க நடவடிக்கை தேவை - அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம்
* அரியலூர் அருகே விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதாகத் தகவல் பரவியதால் 4 கிராம மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தின் இணைப்பு பகுதியான முல்லையூர், வங்காரம், தளவாய், குழுமூர் போன்ற கிராமங்கள் உள்ளன.
இக்கிராமத்தில் காலை 11 மணி அளவில் ஒரு ஹெலிகாப்டர் சென்ற சத்தம் கேட்டதாகவும் அதன் பின்னர் திடீரென சுற்றியுள்ள ஒரு பத்து கிலோமீட்டர் தூர அளவில் கேட்கும் அளவில் சத்தம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
அந்த ஹெலிகாப்டர் தான் வெடித்துச் சிதறி இருக்கும் எனப் பகுதியில் செய்தி பரவியதாகவும், அதனால் அந்த கிராம மக்கள் அந்த பகுதியில் ஏதேனும் விபத்து ஏற்பட்டுள்ளதா எனத் தேடிப் பார்த்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்த சம்பவம் பெரிதாகப் பேசப்பட்டதால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 3 ஆம்புலன்ஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அங்கு எவ்வித தகவலும் இல்லாததால் அந்த ஆம்புலன்ஸ்கள் சிறிது நேரத்தில் திரும்பி சென்றதாகச் சொல்லப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவிக்கையில் குழுமூர் பகுதியில் சத்தம் கேட்டதாகக் கூறப்படுவதுபோல் எந்த நிகழ்வும் நடைபெற வில்லை என அவர் கூறியுள்ளார்.
* ஜியோ நிறுவன தலைவராக முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார்.
ரிலையன்ஸ் ஜியோ இயக்குனர் பதவியில் இருந்து முகேஷ் அம்பானி ராஜினாமா செய்துள்ளார்.
* இரு சக்கரவாகனத்தையும் சேர்த்து சாலை அமைத்த ஒப்பந்ததாரர்:
வேலூர் மாநகராட்சியில் இரவோடு இரவாக காங்கிரீட் சாலை அமைக்கும் பணிக்காக கலவையை கொட்டிச் சென்ற ஒப்பந்ததாரர்.
வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கரவாகனத்தையும் சேர்த்து சாலை போட்டுச்சென்றதாக புகார்.
* அரபிக்கடலில் ஹெலிகாப்டர் விபத்து; 4 பேர் பலி.
அரபிகடலில் ஓஎன்ஜிசி பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டபோது விபத்து.
இதில் 6 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 4 பேர் உயிரிழந்தனர்.
* கஞ்சா விற்பனை வழக்கில் ரூ. 5.50 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்.
கஞ்சா விற்பனையில் ஈடுபட்டால் அவர்களின் சொத்துக்கள் மட்டுமின்றி உறவினர்களின் சொத்துக்களும் முடக்கம் செய்யப்படும்-தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் எச்சரிக்கை.
* பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஈ.பி.எஸ் தரப்பு மேல்முறையீடு
பொதுக்குழு செயற்குழு விவகாரங்களில் தலையிட நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை என மனுவில் தெரிவிப்பு
* ராஜஸ்தான்: நூபுர் சர்மாவை ஆதரித்தவர் கொடூரமாக வெட்டிக்கொலை - அதிர்ச்சி
நபிகள் நாயகத்துக்கு எதிராக கருத்து தெரிவித்த பாஜக முன்னாள் செய்தித் தொடா்பாளா் நூபுா் சா்மாவை ஆதரித்தவர் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாத இறுதியில் ஞானவாபி மசூதி விவகாரம் தொடா்பான தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் நூபுா் சா்மா கலந்துகொண்டாா். அப்போது சிவ லிங்கம் குறித்து இஸ்லாமிய பேச்சாளர் ஒரு கருத்து கூறினார். அதற்கு நுபுர் ஷர்மா, இஸ்லாமிய இறைத் தூதா் நபிகள் நாயகம் குறித்து பதில் கருத்து தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் நூபுர் சர்மாவைக் கைது செய்யக்கோரி இஸ்லாமியர்கள் வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கலவரத்தில் அரசு வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
இந்நிலையில், இன்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நூபுர் சர்மாவின் புகைப்படத்தை முகநூல் முகப்புப் படமாக வைத்தவர் இரண்டு இஸ்லாமியர்களால் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டார். கொலை செய்வதற்கு முன்பும் பின்பும் அதை வீடியோவாக எடுத்து கொலையாளிகள் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இச்செயலைக் கண்டித்து அப்பகுதியில் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் - டெய்லர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட கௌஸ் முகம்மது, ரியாஸ் ஆகிய இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
டெய்லரை கொலை செய்தவர்களுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பா? என என்ஐஏ விசாரணை
உதய்ப்பூரில் பதற்றம் நிலவி வருவதால் 7 போலீஸ் நிலையங்களின் எல்லைகளில் ஊரடங்கு அமல்
இணையதள சேவை முடக்கப்பட்ட நிலையில் தற்போது ஊரடங்கு அமல்படுத்திய மாநில அரசு
* கோடநாடு வழக்கின் முதல் குற்றவாளி கனகராஜின் மரண வழக்கை வாபஸ் பெறச் சொல்லி அவரது மனைவியை மிட்டிய வழக்கில் கனகராஜின் சகோதரர் பழனிவேல் கைது.
* மகாராஷ்டிரா - ஜூன் 30ம் தேதி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அம்மாநில ஆளுநர் உத்தரவு
* கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
வெப்ப பரிசோதனை, மாஸ்க் அணிதல் உள்ளிட்டவை பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
சந்தைகள், வணிக வளாகங்கள், பொது இடங்களில் 26% கொரோனா பாதிப்பு பதிவாகிறது.
பணியிடங்களில் 18%, கல்வி நிறுவனங்கள், விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் 16% தொற்று பதிவாகிறது - அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு மருத்துவத்துறை செயலாளர் செந்தில்குமார் கடிதம்.
* நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்
சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழப்பு
No comments:
Post a Comment