அக்னிப்புரட்சி இன்றைய (29.06.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (29.06.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (29.06.2022) முக்கிய செய்திகள்.

* அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 = 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி

226 ரன்கள் இலக்குடன் விளையாடிய அயர்லாந்து 20 ஓவர்களில் 221 ரன்கள் எடுத்து தோல்வி

2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா

* கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூர் புறவழிச்சாலையில் ரவுடி புண்ணியமூர்த்தி (35) மர்ம கும்பலால் வெட்டிக் கொலை

ரவுடி கொலை தொடர்பாக கும்பகோணம் டி.எஸ்.பி. அசோகன் தலைமையிலான போலீசார் விசாரணை

* மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, நாளை மாலை 5 மணிக்குள் சட்டபேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி உத்தரவு.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கான பேரவை சிறப்பு கூட்டம் நாளை காலை 11 மணிக்கு தொடக்கம்.

* சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) விலை கிராமுக்கு ரூ.32 குறைந்து, ரூ.4,733-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ரூ.70 காசுகள் குறைந்து, ஒரு கிராம் ரூ.65.30-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.65,300-க்கும் விற்கபட்டு  வருகிறது.

* 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஜூலை மாதம் 4 மற்றும் 10ம் தேதிகளில் வெளியிட சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.

பெரும்பாலான மாநிலங்களில் 12ம் வகுப்பு வாரிய தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு உயர்கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளன.

ஆனால் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் நிலவி வந்தது.

இந்நிலையில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் ஜூலை 4ம் தேதி வெளியாகும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து 12ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் ஜூலை 10ம் தேதி வெளியாகும் என்று டெல்லி வட்டார தகவல்கள் கூறுகின்றன.

* ரூ 110 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறப்பு.

ஆட்சியர் அலுவலகத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஆட்சியர் அலுவலகத்தில் 200 பேர் அமரும் வகையில் பெரிய கூட்டரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

300 இருக்கைகள் கொண்ட குறை தீர்வுக் கூட்ட அரங்கம் அமைப்பு.

3 சிறிய கூட்டரங்கங்கள், நீரூற்றுடன் கூடிய பூங்கா, மழைநீர் வடிகால் வசதிகளும் உள்ளன.

* ராஜஸ்தானில் நுபுர் சர்மா ஆதரவாளர் படுகொலை சம்பவம் - என்.ஐ.ஏ. விசாரணைக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு.

சம்பவத்தின் பின்னணியில் ஏதேனும் அமைப்புகள் மற்றும் சர்வதேச தொடர்புகள் உள்ளதா என முழுமையாக விசாரிக்க உத்தரவு.

* முழு நேரமும் முகக்கவசம் அணிய வேண்டும் -தமிழக அரசு.

அலுவலகத்தில் அனைவரும் முழு நேரமும் முறையாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் -தமிழக அரசு உத்தரவு.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதபடுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை.

* ஈரோடு கருமுட்டை விற்பனை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலைக்கு முயற்சி

அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

* வேலூரில் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.53.13 லட்சம் செலவில் புதிய பேருந்து நிலையம்.

9.25 ஏக்கர் பரப்பளவில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

* விவசாயிகளுக்கு தேவையான அளவு உரம் கையிருப்பில் உள்ளது- அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.

தமிழகத்தில் குறுவை சாகுபடிக்கு தேவையான யூரியா, உரம், பொட்டாஷ், டிஏபி, 54 ஆயிரத்து 300 மெட்ரிக் டன் கையிருப்பில் உள்ளது.

44,011 மெட்ரிக் டன் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும் கடைகள் மூலமாகவும் விற்பனை செய்யபட்டுள்ளது.

தற்போதைக்கு 1,14,240 டன் யூரியா, பொட்டாஷ், டிஏபி ஆகியவை கையிருப்பில் உள்ளது- வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்.

* சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 4 ல் வெளியீடு..? தெரிந்துக்கொள்ள வேண்டியவை..

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஜூலை 4 ஆம் தேதி வெளியாகும் என்றும் மத்திய கல்வி அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஜூலை 4 ஆம் தேதி வெளியாகும் என்றும் மத்திய கல்வி அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.2021- 22 ஆம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 26 தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதே போல் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரக் 26 ஆம் தேதி தொடங்கி ஜூன் 15 ஆம் தேதி வரை நடைபெற்றது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்கள் குறைந்தபட்சம் 30% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்று இடை நிலை கல்வி வாரியம் ஏற்கனவே அறிவித்திருந்தது. 

நாடு முழுவதும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் எழுதினர். அதில் 10 ஆம் வகுப்பு தேர்வினை 21 லட்சம் பேரும், 12 ஆம் வகுப்பு தேர்வினை 14 லட்சம் பேரும் எழுதினர். இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் மாணவர்கள் நலன் கருதி,  சிபிஎஸ்இ  12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிடும் வகையில் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஜூலை 4 ஆம் தேதி வெளியாகும் என்றும் மத்திய கல்வி அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 10 ஆம் வகுப்பிற்கு ஜூலை 4 ஆம் தேதியும் 12 ஆம் வகுப்பிற்கு ஜூலை 12 ஆம் தேதியும் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மாணவர்கள் தங்கள் முடிவுகளை Digilocker செயலி மற்றும் digilocker.gov.in  என்னும் இணையதளம் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். இது தவிர, மாணவர்கள் தங்கள் முடிவுகளை cbse.gov.in மற்றும் cbresults.nic.in ஆகிய அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் மாணவர்கள் தங்களது பதிவு எண் , ரோல் எண்ணை உள்ளீடு செய்து தெரிந்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

* பொறியியல் படிப்புக்கு ஒரு லட்சம் பேர் விண்ணப்பம்.. கலந்தாய்வு குறித்து முக்கிய தகவல்.. முழு விவரம்

தமிழகத்தில் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கு கடந்த 9 நாட்களில் சுமார் ஒரு லட்சம் பேர் விண்ணப்பத்துள்ளனர். 

தமிழக பள்ளிக்கல்வித் பாடத்திட்டத்தின் கீழ் கடந்த ஜுன் 20 ஆம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இந்தாண்டு 12 ஆம் வகுப்பு தேர்வில் 93.76  % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து தேர்வு முடிவு வெளியான அன்று இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு தொடங்கியது.

பி.இ.,பி.டெக்., உள்ளிட்ட படிப்புகளுக்கான விண்ணப்பத்தை மாணவர்கள் http:/www.tneaonline.org என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம். அதே போல், மாணவர்கள் சொந்தமாகவோ அல்லது பள்ளிகள், அரசின் இலவச மையங்கள் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். தமிழகம் முழுவதும் 110 இலவச மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன

ஜூலை 19 ஆம் தேதி வரை மாணவர்கள் அசல் சான்றிதழ் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம். தொடர்ந்து ஜூலை 22 ஆம் தேதி சம வாய்ப்பு எண்ணும், ஜுலை 20 முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை சேவை மையம் வாயிலாக சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆகஸ்ட் 8 ஆம் தேதி தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, பின்னர் கலந்தாய்வு தொடங்கும்.  ஆகஸ்ட் 9 முதல் 14 ஆம் தேதி வரை மாணவர்கள் சேவை மையம் வாயிலாக குறைகளை சரிசெய்து கொள்ளலாம்.

கலந்தாய்வை பொறுத்தவரையில் ஆக.,16 முதல் ஆக.18 ஆம் தேதி வரை  மாற்றுதிறனாளி, முன்னாள் ராணுவ வீரர்கள், விளையாட்டு ஆகிய 3 பிரிவினருக்கு  நடைபெறுகிறது. தொடர்ந்து ஆக.22 முதல் 14 ஆம் தேதி வரை பொதுகல்வி, தொழில்முறை கல்வி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு ஆகிய 3 பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறும். துணை கலந்தாய்வு அக்டோபர் மாதம் 15,16 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் பொறியியல் படிப்பில் சேருவதற்கு கடந்த ஒன்பது நாட்களில் 1,01,916  பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் இதுவரை 31 ஆயிரத்து 319 மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். மேலும் 59 ஆயிரத்து 372 மாணவர்கள் இதுவரை கட்டணம் செலுத்தியுள்ளனர் என பொறியியல் மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது.

*  ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணி நியமனம் செய்ய வேண்டும்

தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல்

ஊழலுக்கு வழிவகை செய்யும் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தை கைவிட வேண்டும் - விஜயகாந்த்

* விடைபெறுகிறார் இயான் மோர்கன்
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் அறிவிப்பு

முதன்முறையாக 50 ஓவர் உலகக்கோப்பையை இங்கிலாந்துக்கு பெற்று தந்த கேப்டன் மோர்கன்

* வெளியானது குரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகள்:

மார்ச் 4,5,6 ம் தேதிகளில் நடைபெற்ற குரூப் -1 எழுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு.

137 பேர் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

ஜூலை 13,14,15ம் தேதிகளில் நேர்முகத் தேர்வு நடைபெறும் - அரசு பணியாளர் தேர்வாணையம்.

* அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவு

முதல்முறையாக ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ₹79 என்ற உச்சத்தை தொட்டுள்ளது

* ஜூலை 1ம் தேதியில் இருந்து இந்தியாவில் வங்கி மற்றும் பணம் சார்ந்த 5 முக்கிய விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன:

கிரெடிட் கார்ட் பில்லிங் சைக்கிள் மாற்றப்பட உள்ளது. அதன்படி முதல் மாதத்தில் 11ம் தேதியில் இருந்து அடுத்த மாதம் 10ம் தேதி வரை பில்லிங் கணக்கிடப்படும்.

வாடிக்கையாளர் கிரெடிட் கார்டை க்ளோஸ் செய்ய சொல்லி 7 நாட்களில் அதை வங்கிகள் க்ளோஸ் செய்ய வேண்டும். இல்லையென்றால் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 500 ரூபாய் அபராதம் கொடுக்க வேண்டும்.

வங்கிகள் கட்டாயமாக யாருக்கும் கிரெடிட் கார்ட் அனுப்ப முடியாது.

பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைப்பதற்கான அவகாசம் முன்பே முடிந்துவிட்டது.

மார்ச் 23ம் தேதியே அவகாசம் முடிந்துவிட்டது. ஜூன் 30ம் தேதிக்கு முன் இந்த இணைப்பை மேற்கொண்டால் 500 ரூபாய் அபராதம்.

அதுவே ஜூலை 1ம் தேதிக்கு பின் மேற்கொண்டால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

டிடிஎஸ் வரிகள் இனி டிஜிட்டல் பணத்திற்கும் விதிக்கப்படும்.

அதாவது க்ரிப்டோகரன்சி உட்பட க்ரிப்டோ வருமானத்திற்கு, க்ரிப்டோ மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைக்கு 1 சதவிகிதம் டிடிஎஸ் பிடிக்கப்படும்.

டிஜிட்டல் ரீதியாக மேற்கொள்ளப்படும் விர்ச்சுவல் பரிவர்த்தனை எனப்படும் virtual digital asset (VDA)க்கு மட்டும் இந்த டிடிஎஸ் பொருந்தும்.

வருமான வரியிலும் ஜூலை 1 முதல் மாற்றம் வருகிறது. பல்வேறு நிறுவனங்களிடமிருந்து இலவசப் பொருட்களைப் பெறும் மருத்துவர்கள், பிரபலங்கள் மற்றும் பிற நபர்கள் ஜூலை 1 முதல் அவற்றைப் பெறுவதற்கு வரி செலுத்த வேண்டும்.

பிரபலங்களுக்கு இலவச கார் வந்தால் அதற்கு அவர்கள்தான் வரி செலுத்த வேண்டும். இதேபோல் பிரபலங்கள், மருத்துவர்கள் பெறும் complementry பொருட்களுக்கு வரி செலுத்த வேண்டும்.

டிமாட் கணக்குகளுக்கு கேஒய்சி மேற்கொள்ள ஜூலை 30ம் தேதி வரை மட்டுமே டைம்.

அதற்குள் செய்யவில்லை என்றால் உங்கள் கணக்கு முடக்கப்படும்.

அதாவது பெயர், விலாசம், பான், போன் எண், வருமான விவகாரம், இ மெயில் ஐடி போன்ற விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும்.

இல்லையென்றால் உங்கள் டி மாட் கணக்கு மொத்தமாக மூடப்படும்.

* துணை குடியரசு தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு

* கல்வியாண்டு பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டு முடியும் வரை பணி நீட்டித்து அரசாணை.

ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 2,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி ஓய்வு பெறும் நிலையில் மாணவர்களின் நலன் கருதி அறிவிப்பு.

* வானில் ஏவுகணைகளை அழித்துத் தாக்கும் “அபியாஸ்” விமான சோதனை வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது.

பாலசோர், வானில் ஏவுகணைகளை அழித்துத் தாக்கும் "அபியாஸ்" விமான சோதனை வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ, அதன் வானூர்தி வளர்ச்சி ஸ்தாபனத்தால் 'அபியாஸ்' வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. இதன் சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. ஒடிசா கடற்கரையில் உள்ள சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை ரேஞ்சிலிருந்து (ஐடிஆர்) உள்நாட்டில் உருவாக்கப்பட்ட, அதிவேக வான்வழி இலக்கு(ஹீட்) வாகனமான அபியாஸ், வானில் பறக்கவிட்டு சோதனை செய்யப்பட்டது. ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கழகத்தால் உருவாக்கப்பட்ட இந்த அபியாஸ் காண்பதற்கு சிறிய ரக விமானம்போல இருக்கிறது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அபியாஸ், எதிரிகளின் வான் இலக்கை துல்லியமாக தாக்கும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைந்த உயரத்தில் இந்த விமானத்தின் செயல்திறன், நிலைத்தன்மை மற்றும் அதிக சூழ்ச்சித்திறன் உட்பட, பல விஷயங்கள் சோதனை செய்யப்பட்டன. Also Read - கொலைக்கு சில நாட்களுக்கு முன்பு போலீசிடம் பாதுகாப்பு கோரிய உதய்பூர் தையல்காரர் - விசாரணையில் திடுக்கிடும் தகவல்! அபியாஸின் விமான சோதனை வெற்றிகரமாக நடந்ததற்காக டிஆர்டிஓ மற்றும் ஆயுதப்படைகளுக்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

* சீருடைப் பணியாளர் தேர்வு - நாளை அறிவிப்பு:

3,552 பணியிடங்களுக்கு நேரடித் தேர்வுக்கான அறிவிப்பை நாளை வெளியிடுகிறது சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்.

ஜூலை 7 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முடியும்.

* இனி இதற்கெல்லாம் வரி உண்டு.. ஜிஎஸ்டி கவுன்சில் எடுத்த முக்கிய முடிவுகள்!

இன்று முடிவடைந்த ஜிஎஸ்டி கவுன்சிலின் 47ஆவது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சண்டிகரில் நடைபெற்ற இரண்டு நாள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று முடிவுக்கு வந்தது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. கூட்டத்துக்கு பின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் பேசியபோது ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுகள் பற்றி விவரித்தார். கீழ்காணும் வரி விகிதங்கள் ஜிஎஸ்டி கவுன்சிலால் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

வரி உயர்வு:

எழுதுவதற்கான மை (writing ink), பிரிண்டிங் மை (printing ink), வரைவதற்கான மை (drawing ink) ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி 12 விழுக்காட்டில் இருந்து 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

LED லைட், லைட், ஃபிக்சர், உலோகத்தில் பிரிண்ட் செய்யப்பட்ட சர்கியூட் போர்டுகளுக்கு ஜிஎஸ்டி 12 விழுக்காட்டில் இருந்து 18% ஆக உயர்வு.

சோலார் வாட்டர் ஹீட்டர் மீதான ஜிஎஸ்டி 5 விழுக்காட்டில் இருந்து 12% ஆக உயர்வு.

தோல்பொருட்கள் (leather goods), காலணிகள் தொடர்பான வேலைப்பாடுகளுக்கான ஜிஎஸ்டி 5 விழுக்காட்டில் இருந்து 12% ஆக உயர்வு.

டெட்ரா பாக் (Tetra Pak) மீதான ஜிஎஸ்டி 12 விழுக்காட்டில் இருந்து 18% ஆக உயர்வு.

வெட்டப்பட்ட மற்றும் பொலிவூட்டப்பட்ட வைரங்கள் மீதான ஜிஎஸ்டி 0.25 விழுக்காட்டில் இருந்து 1.5% ஆக உயர்வு.

பேக்கேஜ் செய்யப்பட்ட பிராண்டட் தயிர், மோர், லஸ்ஸி போன்ற பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வங்கிகள் வழங்கும் செக் புத்தகத்துக்கு (Cheque Book) வசூலிக்கப்படும் தொகைக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்படும்.

கத்தி, பேப்பர் கத்தி, பென்சில் ஷார்ப்னர், ஸ்பூன், ஃபோர்க், ஸ்கிம்மர், கேக் சர்வர் ஆகியவற்றுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்படும்.

மோட்டார் பம்ப், சைக்கிள் பம்ப், கிரைண்டர், மில்களில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் ஆகியவற்றுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்படும்.

வரி குறைப்பு:

ostomy, orthopedic கருவிகள் மீதான ஜிஎஸ்டி 12 விழுக்காட்டில் இருந்து 5% ஆக குறைப்பு.

ரோப்வே (Ropeways) வழி பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து மீதான ஜிஎஸ்டி 18 விழுக்காட்டில் இருந்து 5% ஆக குறைப்பு.

டீசல் செலவு உள்பட லாரி, சரக்கு போக்குவரத்து வாகனத்துக்கான வாடகைக்கு ஜிஎஸ்டி 18 விழுக்காட்டில் இருந்து 12% ஆக குறைப்பு.

மற்றவை:

பேட்டரி பேக் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி 5% ஆக இருக்கும் என ஜிஎஸ்டி கவுன்சில் தெளிவுபடுத்தியுள்ளது.

ஒரு நாளைக்கு 1000 ரூபாய் வரை வாடகை வசூலிக்கும் ஹோட்டல் அறைகளுக்கு 12% ஜிஎஸ்டி விதிக்கப்பட வேண்டும் என ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. மேலும், ஒரு நாளைக்கு 5000 ரூபாய் வரை வாடகை வசூலிக்கும் மருத்துவமனை அறைகளுக்கு 5% ஜிஎஸ்டி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி சேனல்களில் பங்கேற்கும் விருந்தினர் தொகுப்பாளர்களின் (Guest Anchors) சேவைக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட வேண்டும் என ஜிஎஸ்டி கவுன்சில் தெளிவுபடுத்தியுள்ளது.

தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் அழைப்பை ஏற்று அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஆகஸ்ட் முதல் வாரம் மதுரையில் நடைபெறும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

* மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் பிறப்பித்த உத்தரவிற்கு தடையில்லை - உச்சநீதிமன்றம் உத்தரவு.

* நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

மகாராஷ்டிர முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே...

முதல்வர் பதவியுடன் சட்டபேரவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்ரே

* அதிமுக ஒருங்கிணைப்பாளர்
ஓ பன்னீர்செல்வம்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages