அக்னிப்புரட்சி இன்றைய (30.06.2022) முக்கிய செய்திகள்.
* ஆதார், பான் எண்களை இணைப்பதற்கு இன்றே கடைசி நாள்:
ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்காவிட்டால், நாளை (ஜூலை 1) முதல் இருமடங்கு அபராதம் வருமான வரித்துறை எச்சரிக்கை.
* உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் அதிமுக போட்டி இல்லை:
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 510 பதவிகளுக்கு ஜூலை 9 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றைத் தலைமை விவகாரத்தில் வேட்பாளர்களுக்கு சின்னம் பெற உதவியாக இருக்கும் FORM A மற்றும் FORM B வழங்கப்படவில்லை.
இதனால் சுயேட்சை சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்ற சூழல் எழுந்ததால் காஞ்சிபுரம், தஞ்சாவூர் மாநகராட்சிகள், தேனி, மயிலாடுதுறை நகராட்சிகள், புதுக்கோட்டை மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் ஒன்றில் கூட அதிமுக போட்டியிடவில்லை.
இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடைந்தவுடன் சின்னம் ஒதுக்கும் பணியை தேர்தல் ஆணையம் தொடங்க உள்ளது.
மாநகராட்சி, நகராட்சி, மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் போட்டியிடாமல் அதிமுக புறக்கணிப்பு.
* புதிய ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர்:
ராணிப்பேட்டையில் புதிதாக கட்டிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ரூ.118.40 கோடி மதிப்பீட்டில் பல வசதிகளுடன் 5 தளங்களை கொண்டு ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.
* தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணியை உடனடியாக நிறுத்த பல்வேறு மாவட்டங்களில் உத்தரவு.
தகுதி இல்லாதவர்கள் நியமனம் செய்யப்படுவதாக புகார் எழுந்த நிலையில் நடவடிக்கை.
ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தோர், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை அளிக்க முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டிருந்தார்.
* ராணிப்பேட்டை அரசு ஆதரவற்ற குழந்தைகள் விடுதியில் ஆய்வு செய்தார் முதலமைச்சர்
ஆய்வின் போது பணியில் இல்லாத விடுதி கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
விடுதி கண்காணிப்பாளர் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு
* ஜூலை 11ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கும் கோரிக்கையை விசாரிக்க முடியாது -சென்னை உயர்நீதிமன்றம்.
நீதிபதி துரைசாமி தலைமையிலான அமர்வு முன்பு ஓபிஎஸ் ஆதரவாளர் சண்முகம் தரப்பில் முறையீடு ஒன்று முன்வைக்கப்பட்டது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் ஜூலை 11ல் நடைபெறும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரியதையும் அவசர வழக்காக விசாரிக்கக் கோரி மனுதாரர் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.
மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, ஜூலை 11ல் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டார்.
சண்முகம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வரும் திங்கட்கிழமை விசாரிப்பதாகவும் நீதிபதி துரைசாமி அமர்வு தெரிவித்துள்ளது.
* பெற்றவர்களை போல இந்த திமுக அரசும் செயல்படவேண்டும் என்று நினைக்கிறேன்.
மக்களுக்கு என்னவெல்லாம் தேவையோ அதையெல்லாம் பார்த்து பார்த்து செய்வேன்-ராணிப்பேட்டை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சியினர், சில உதிரி கட்சியினர், நான்தான் அடுத்த முதல்வர் என்று சொல்லிக்கொண்டு அநாதையாக அலைந்துக் கொண்டிருப்பவர்கள் பேசுகின்றனர்.
ஆனால், நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளை நான் சட்டமன்றத்திலேயே பட்டியல் போட்டிருக்கிறேன்-மு.க.ஸ்டாலின்.
நான் விளம்பர பிரியராக இருப்பதாக சிலர் சொல்கிறார்கள். எனக்கெதற்கு விளம்பரம் ? இனிமேலும் எனக்கு விளம்பரம் தேவையா ?
55 ஆண்டுகாலம் அரசியலில் இருக்கக் கூடிய எனக்கு எந்த விளம்பரமும் தேவையில்லை.
திமுக அரசின் திட்டங்கள் எதுவும் விளம்பரத்திற்காக செய்வதல்ல அது மக்களுக்காக செய்வது.
விளம்பரம் எனக்கு தேவையில்லை. ஏற்கனவே, எனக்கு கிடைத்திருக்கும் புகழையும் பெருமையையும் காப்பாற்றினால் போதும் என்று நினைப்பவன் நான்.
திராவிடமாடல் என்றால் காலமெல்லாம் எனது முகம்தான் மக்களின் மனதில் நினைவுக்கு வரும்- முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்.
திராவிட மாடல்' என்றால் என் முகமும், ‘ஒன்றியம்’ என்று சொன்னால் என குரலும் மக்கள் மனதில் நினைவுக்கு வரும் ; அது போதும் எனக்கு.
நான், என் முகம், என் குரல், என் பெயர் என்று சொன்னால், தனிப்பட்ட மு.க.ஸ்டாலின் என்று நினைக்க வேண்டாம்.
நீங்கள் அனைவரும் சேர்ந்த கூட்டுக் கலவைதான் இந்த ‘நான்’
- முதல்வர் மு.க.ஸ்டாலின்.
* சீருடைப் பணியாளர் தேர்வு அறிவிப்பு:
3,552 பணியிடங்களுக்கு நேரடித் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்.
ஜூலை 7 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முடியும்.
* அரசு பள்ளிகளில் தகுதியற்ற, தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது ஆபத்தானது - ஐகோர்ட் அதிரடி.
தமிழக அரசு பள்ளிகளில் தகுதியற்ற, தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது ஆபத்தானது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக, தற்காலிகமாக நிரப்பிக் கொள்ள பள்ளிக் கல்வித் துறை அண்மையில் உத்தரவிட்டது.
அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள இந்த 13,331 ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பு ஊதியத்தில் ஓராண்டுக்குள் நிரப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.7,500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10,000, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.12,000 என மிகக் குறைந்த ஊதியமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக ஆசிரியர் நியமன அறிவிப்பை ரத்து செய்யக் கோரி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், தமிழ்நாடு அரசு பள்ளிகளில் தகுதியற்ற, தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது ஆபத்தானது.
முறையான வழிகாட்டுதல்கள் இன்றி தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது.
தற்காலிக ஆசிரியர் நியமன முறையில் தகுதியற்றவர்களை தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியில் அமர்த்த நேரிடும்.
மனு குறித்து அரசு தரப்பில் விளக்கம் கேட்டு தெரிவிக்க வேண்டும். வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்படுகிறது, என்றார்.
* நாகர்கோவில் காசி லேப்டாப், மொபைலில் ஆபாச வீடியோக்கள், போட்டோக்கள் இருந்ததாக சிபிசிஐடி கூறியது அதிர்ச்சி அளிக்கிறது - உயர்நீதிமன்ற கிளை.
நாகர்கோவில் காசியின் லேப்டாப், மொபைலில் 400 ஆபாச வீடியோக்கள் இருந்ததாக சிபிசிஐடி கூறியது அதிர்ச்சியளிக்கிறது - உயர்நீதிமன்ற கிளை நீதிபதி.
நாகர்கோவில் காசியிடம் 1,900 நிர்வாணப்படங்கள் இருந்ததாக கூறியுள்ளனர்.
120 பெண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் சிலர் மட்டுமே சாட்சியம் அளிக்க முன்வந்துள்ளனர்.
இன்னும் பல சாட்சிகளை போலீஸ் விசாரிக்க வேண்டி உள்ளதால் காசியின் தந்தைக்கு ஜாமீன் வழங்க முடியாது- நீதிபதி.
* அதிமுக-வை செயல்படாத நிலைக்கு கொண்டு செல்வதற்கான அனைத்து பணிகளையும் செய்துவிட்டு, தற்போது இப்படி ஒரு கடிதத்தை எனக்கு அனுப்புவது ஏற்புடையது அல்ல-அதிமுக வேட்பாளர்களுக்கு Form A,Form B வழங்குவது தொடர்பாக ஓபிஎஸ் எழுதிய கடிதத்திற்கு இபிஎஸ் பதில்.
நாம் இருவரும் கூட்டாக அழைப்பு விடுத்த பொதுக்குழுவை கூட்ட விடாமல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தீர்கள்.
பொதுக்குழுவில் சட்டத்திருத்தங்கள் அங்கீகரிக்கப்படாததால் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் நீங்கள் எழுதிய கடிதம் செல்லத்தக்கதல்ல
கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை புறக்கணித்தது ஏன்?
ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் கிடையாது - எடப்பாடி பழனிசாமி.
ஓ.பன்னீர் செல்வம் எழுதிய கடிதத்திற்கு, பதில் கடிதம் எழுதிய எடப்பாடி பழனிச்சாமி.
* டாஸ்மாக் போல் வருமானம் வந்தால்தான் வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா?
வனப்பகுதிகளில் அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? -தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி.
அன்னிய மரங்களால் வனத்துக்கும், வனவிலங்குகளுக்கும் அச்சுறுத்தல்; எதிர்காலத்தில் சரணாலயங்கள் அழிந்து விட கூடும் - நீதிபதிகள் எச்சரிக்கை.
* மாணவிகளுக்கான நிதியுதவி திட்டம் - அவசாகம் நீட்டிப்பு.
உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1000 நிதியுதவு வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்க ஜூலை 10 வரை கால அவகாசம் நீட்டிப்பு.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
* தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார், குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா.
மத்திய அரசின் அத்துமீறல்களுக்கு எதிராக கடந்த காலங்களிலும் குரல் கொடுத்துள்ளேன்
வரும் காலத்திலும் அவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக எனது போராட்டம் தொடரும் - யஷ்வந்த் சின்ஹா
ஆளுநர்களின் செயல்பாடு அரசியல் அமைப்பு சட்டப்படி இருக்க வேண்டும், ஆனால் தற்போது அப்படி இல்லை.
அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு பிரிவும் உடைக்கப்படுகிறது- சென்னை அண்ணா அறிவாலயத்தில் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா பேச்சு.
மகாராஷ்டிராவில் புதிதாக பதவியேற்கும் அரசு நீண்ட நாள் நீடிக்காது என்பதால் பாஜகவைச் சேர்ந்தவர் முதலமைச்சராக பதவியேற்கவில்லை.
* 3 செயற்கைக்கோள்களுடன் PSLV-C53 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மைய 2வது ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
வீடியோ: https://twitter.com/IndiaNewsDigest/status/1542490266572955648?t=wj1Ila5usCdKsKvnBtWl2w&s=19
* மகாராஷ்டிரா மாநில முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வராக பாரதிய ஜனதாவின் தேவேந்திர பட்னவீஸும் பதவியேற்பு.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வு விவரங்களின் மையங்கள் வெளியீடு
புதுடெல்லி: நீட் தோ்வு மையங்கள் குறித்த விவரங்களை இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு, தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான நீட் தகுதி தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் ஜூலை 17ம் தேதி நேரடி முறையில் நடைபெற உள்ளது.
இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் 6ம் தொடங்கி மே 20ம் தேதியுடன் நிறைவு பெற்றது. மொத்தம் 18 லட்சத்து 72,339 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்து 42,286 பேர் பதிவு செய்துள்ளனர். திட்டமிட்டபடி நீட் தேர்வை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்நிலையில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ள நகரங்களின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அவற்றை http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் சென்று மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.
மேலும், தேர்வுக்கான நுழைவுச்சீட்டு விரைவில் வெளியிடப்படும். கூடுதல் தகவல்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதாவது சந்தேகம் இருப்பின் 011-4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது neet@nta.ac.in மின்னஞ்சல் வழியாக தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
* தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா:
தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 2,069 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
மாநிலம் முழுவதும் 11,094 பேர் கொரோனா பாதிப்பினால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 1,008 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி கேப்டனாக ஜோஸ் பட்லர் நியமனம்- இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை
தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,069 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் நாளை ஆலோசனை
தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்துவது குறித்தும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசிக்க உள்ளார்
ஜூலை 2 மற்றும் 3ம் தேதியில் மகாராஷ்டிரா சிறப்பு சட்டப்பேரவையை கூட்ட மாநிலத்தின் புதிய அரசு முடிவு - சபாநாயகர் தேர்வு நடத்தப்படலாம் என தகவல்.
* பள்ளிகளில் மாஸ்க் கட்டாயம் - பள்ளி கல்வித்துறை.
வெப்ப கருவி மூலம் மாணவர்களை கண்காணித்த பிறகே உள்ளே அனுமதிக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை.
* மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம்.
உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அதிருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேவை முதலமைச்சராக பதவியேற்றார்.
அமைச்சரவையில் இடம்பெற மாட்டேன் என கூறிய பாஜக தலைவர் தேவேந்திர பட்நாவிஸ் துணை முதல்வராக பதவியேற்றார்.
* மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டேவுக்கு, முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வாழ்த்து
* சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் பரவலான மழை
* மும்பையில் கனமழை பெய்து வருவதால் ராய்காட் பகுதிக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்- மும்பை வானிலை ஆய்வு மையம்
No comments:
Post a Comment