அக்னிப்புரட்சி இன்றைய (01.07.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (01.07.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (01.07.2022) முக்கிய செய்திகள்.

* பான் மற்றும் ஆதார் எண்களை இணைக்காவிடில் இன்று முதல் ரூ.1,000 அபராதம்.

பான், ஆதார் எண்களை அபராதத்துடன் இணைப்பதற்கான காலக்கெடு அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பு - வருமான வரித்துறை.

* வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு:

19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.187,குறைந்து ரூ.2186-க்கு விற்பனை.

சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் ரூ 2373-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

வீட்டு  பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

* சென்னையில் 40வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இல்லை.

பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24க்கும் விற்பனை.

* லைவ் ஸ்ட்ரீமிங்கில் சட்டம், நிதி, மருத்துவ விவாதங்களுக்கு தகுதி அவசியம்: இன்ஃப்ளூயன்சர்களுக்கு சீனா கடிவாளம்

பெய்ஜிங்: பல்வேறு பிளாட்பார்மில் லைவ் ஸ்ட்ரீமிங் மூலம் சட்டம், நிதி, மருத்துவம், கல்வி குறித்து சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர்கள் விவாதிப்பதற்கான தகுதி அவசியம் என சீனா கட்டுப்பாடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்றைய டிஜிட்டல் உலகில் தொழில்நுட்ப வளர்ச்சியினால் சாமானிய மக்களும் பல்வேறு வலைதளங்கள் மூலம் பரவலாக அறியப்படுகின்றனர். அதற்கு காரணம் அவர்கள் கொடுக்கும் கன்டென்ட். வீடியோ, ஆடியோ, டெக்ஸ்ட் என எந்த வகையில் வேண்டுமானாலும் அது இருக்கலாம். இருந்தும் இப்போதைக்கு வீடியோ தான் மிகவும் டிரெண்டாக உள்ளது. இது உலக அளவில் பொருந்திப் போகின்ற விஷயமாகவும் உள்ளது. அந்த சாமானியர்களின் வீடியோக்கள் பரவலாக பகிரப்பட்டால் அவர்கள் அனைவரும் அறிந்த முகங்களாக உருவாகிறார்கள்.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என பலவற்றிலும் ஹெல்த் டிப்ஸ், நிதி மற்றும் சட்ட வழிகாட்டுதல் என வெவ்வேறு ஜானரில் பலரும் தங்களுக்கு பிடித்த களத்தில் கன்டென்ட் கொடுத்து வருகின்றனர். சில நேரங்களில் அது ஃப்ரீ அட்வைஸாகவும் மாறி விடுகிறது.

இந்நிலையில், இந்த பணியை மேற்கொள்பவர்களுக்கு தகுதி அவசியம் என தெரிவித்துள்ளது சீனா. அது தொடர்பாக அந்த நாட்டில் கொள்கை ரீதியான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, பல்வேறு இணையதள பிளாட்பார்மில் லைவ் ஸ்ட்ரீமிங் மூலம் சட்டம், நிதி, மருத்துவம், கல்வி குறித்து விவாதிக்க சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர்களுக்கு தகுதி அவசியம் என சீனா தெரிவித்துள்ளது. இருந்தாலும் அதன் தகுதியின் விவரம் எதுவும் வெளியாகவில்லை எனத் தெரிகிறது. மேலும் அரசியல் தலைவர்கள் மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க தலைவர்கள் குறித்து விமர்சிக்கவும் கூடாது என சொல்லியுள்ளதாக தெரிகிறது.

* அக்னிபத் திட்டத்தில் சேர 2.72 லட்சம் பேர் பதிவு

புதுடில்லி அக்னிபத்' திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர இதுவரை, 2.72 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.

முப்படைகளுக்கு, நான்கு ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை, மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், பொது மக்களிடம் ஆதரவு உள்ளது. இந்நிலையில், ராணுவம், விமானப்படை, கடற்படை என முப்படைகளுக்கும் அக்னிபத் திட்டத்தின் கீழ் தனித்தனியாக வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ் 'பணியில் சேர ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள், https://agnipathvayu.cdac.in/AV/ என்ற இணையதளத்தில் தங்கள் விபரங்களை பதிவு செய்யலாம்' என, விமானப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், கடந்த ஏழு நாட்களில், அக்னிபத் திட்டத்தின் கீழ் பணியில் சேர இதுவரை 2.72 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

* நாடு முழுவதும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் தடை.

பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை.

* பினாமி பெயரில் சசிகலா வாங்கிய ரூ.15 கோடி மதிப்பிலான  சொத்தை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர்.

சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் நிறுவனம், சசிகலாவின் பினாமி சொத்து என உச்ச நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டதை அடுத்து சொத்து முடக்கம்.

* சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.856 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,280-க்கும், ஒரு கிராம் ரூ.4785-க்கும் விற்பனை.

* தமிழகத்தில் மீண்டும் 2 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை.

தலைமைச்செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை.

* அரசுப் பள்ளிகளில் காலி பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்ப இடைக்கால தடை.

ஆசிரியர்களை தகுதி அடிப்படையில் நியமிப்பதற்கும், முன்னுரிமை அடிப்படையில் நியமிப்பதற்கும் வேறுபாடு உள்ளது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா தாக்கல் செய்த மனு மீது உத்தரவு.

* நுபுர் ஷர்மாவின் பேச்சு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்.

ஒரு கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருப்பதாலேயே எதையும் பேசிவிட முடியாது.

நுபுர் சர்மாவுக்கு அச்சுறுத்தலா? அல்லது அவரால் நாட்டுக்கு அச்சுறுத்தலா? - உச்ச நீதிமன்றம் கேள்வி.

நுபுர் சர்மா நாட்டையே தீக்கிரையாக்கிவிட்டார் ; உதய்பூரில் டெய்லர் கொல்லப்பட்டது நுபுர் சர்மாவின் பேச்சால்தான் - உச்ச நீதிமன்றம்.

டிவியில் தோன்றி நாட்டு மக்களிடம் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் - உச்ச நீதிமன்றம்.

ஒரு கட்சியின் செய்தித்தொடர்பாளர் என்றால், நீங்கள் இதுபோல் எது வேண்டுமானாலும் சொல்வதற்கு லைசன்ஸ் இல்லை.

நாட்டில் தற்போது நடப்பதற்கு இந்த பெண்மணியே பொறுப்பு.

முகமது நபி குறித்த கருத்தால் பல மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை டெல்லிக்கு மாற்றக்கோரி நுபுர் சர்மா மனு தாக்கல் செய்திருந்தார்.

* 210 ஆர்டர்லிகள் திரும்ப பெறப்பட்டனர்:

காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லிகளாக பணியாற்றிய 210 காவலர்கள் திரும்பப் பெறப்பட்டனர்.

இன்றும் 150 காவலர்கள் தங்கள் காவல் பணிக்கு திரும்பவில்லை என காவல்துறை தகவல்.

* தஞ்சையில் காணாமல் போன 300 ஆண்டுகள் பழமையான பைபிள் லன்டனில் கண்டுபிடிப்பு.

தஞ்சாவூர் அருங்காட்சியத்தில் இருந்து 2005ம் ஆண்டு காணாமல் போன பைபிளை மீட்டது தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை.

* டீ விலை ரூ.20 + சேவை கட்டணம் ரூ.50: மொத்தம் ரூ.70 செலுத்திய ரயில் பயணி | விளக்கம் கொடுத்த ரயில்வே

போபால்: சதாப்தி ரயிலில் பயணித்த பயணி ஒருவர் 70 ரூபாய் செலுத்தி தேநீர் பருகி உள்ளார். அதற்கான ரசீதை அவர் சமூக வலைதளத்திலும் பகிர்ந்துள்ளார். இந்த செய்தி தேநீர் பிரியர்களுக்கு கொஞ்சம் கசப்பாக இருக்கலாம். அதற்கான காரணம் என்ன என இந்திய ரயில்வே தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 28-ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த பயணி டெல்லி - போபால் தடத்தில் இயங்கும் சதாப்தி ரயிலில் பயணித்துள்ளார். காலை நேரம் எனபதால் கொஞ்சம் களைப்பாக இருந்த காரணத்தால் இளைப்பாறும் நோக்கில் அவர் தேநீர் ஆர்டர் செய்துள்ளார். அதற்கான விலையை பார்த்ததும் அவர் கொஞ்சம் அதிர்ந்து போயுள்ளார். அதில் தேநீரின் விலை ரூ.20 என்றும், சேவை கட்டணம் ரூ.50 எனவும், மொத்தமாக ரூ.70 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான கட்டணத்தை அவர் செலுத்தி உள்ளார்.

இருந்தும் அதனை ஜீரணித்துக் கொள்ள முடியாத அந்த பயணி, அதை அப்படியே சமூக வலைதளத்தில் பகிர்ந்து, தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். இது பகல் கொள்ளையாக இருக்கிறது எனவும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதற்கு ரயில்வே தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த 2018 ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை இப்போது மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. ராஜ்தானி, சதாப்தி போன்ற ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் ரிசர்வேஷனின் போது உணவை முன்பதிவு செய்யவில்லை எனில் அதற்கு சேவை கட்டணம் ரூ.50 வசூலிக்கப்படும். அது தேநீர், காபி, உணவு என அனைத்திற்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளது ரயில்வே. மற்றபடி பயணியிடமிருந்து கூடுதல் கட்டணம் ஏதும் வசூல் செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* மேலும் ஒரு மாநிலத்தில் ஆட்சியை இழந்தது, காங்கிரஸ்: தொடர் வீழ்ச்சியால் கட்சியினர் கலக்கம்

மராட்டியத்தில் புதிய அரசு அமைந்ததன் மூலம் மேலும் ஒரு மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது.
புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த ஒரு சில மாநிலங்களில் மராட்டியமும் ஒன்றாக இருந்தது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணியில் தேசியவாத காங்கிரசுடன், காங்கிரசும் இணைந்திருந்தது. ஆனால் இந்த கூட்டணி ஆட்சி கவிழ்ந்து நேற்று புதிய அரசு அமைந்து உள்ளது. பா.ஜனதா ஆதரவுடன் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.வான ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரி ஆகி உள்ளார்.

மராட்டியத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததன் மூலம், நாட்டில் மேலும் ஒரு மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் ஆட்சி அகற்றப்பட்டு உள்ளது. தற்போது ராஜஸ்தான், சத்தீஸ்காரில் அந்த கட்சி தனித்தும், ஜார்கண்டில் கூட்டணி ஆட்சியும் என 3 மாநிலங்களில் மட்டுமே அந்த கட்சி ஆட்சியில் உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் சட்டசபை தேர்தல்களில் கட்சியின் வெற்றி சதவீதம் வேகமாக சரிந்து வருகிறது. குறிப்பாக இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் ஒரு மாநிலத்திலும் அந்த கட்சியால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. இது ஒருபுறம் இருக்க, கட்சியின் முன்னணி தலைவர்கள் அடுத்தடுத்து விலகி தலைமைக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளித்து வருகின்றனர்.

இவ்வாறு கட்சியின் அதிகாரம் கைவிட்டுப்போவதும், முன்னணி தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறுவதும் கட்சித்தலைமைக்கு மட்டுமின்றி தொண்டர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்றால் மிகையல்ல.

* லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகளின் விசாரணைக்கு தடை கேட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கோரிக்கையை மீண்டும் நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

* ENG vs IND 5வது டெஸ்ட் மேட்ச், பர்மிங்காம், இங்கிலாந்து பந்துவீச்சு எட்ஜ்பாஸ்டனில் நடந்த டெஸ்ட் போட்டியானது, #COVID19 காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கடந்த ஆண்டு சுற்றுப்பயணத்தில் இருந்து 5வது டெஸ்ட் ஆகும். இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

* ஜூன் மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் 1.44 லட்சம் கோடி. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வந்த வரியை விட 56% உயர்ந்துள்ளது.

1.40 லட்சம் கோடி என்பது தான் நாங்கள் தோராயமாக திட்டமிட்ட வரி வசூல்- நிர்மலா சீதாராமன், மத்திய நிதியமைச்சர்.

* இந்தியா-இங்கிலாந்து ஐந்தாவது டெஸ்ட் - இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. ஷுப்மான் கில் மற்றும் சேதேஷ்வர் புஜாராவுடன் இந்தியா தொடங்கும்.

* சர்வ ஷிக்க்ஷா அபியானின் அதிகாரப்பூர்வமான வலைத்தளம் என்ற பெயரில் samagra.shikshaabhiyan.co.in எனும் போலி வலைத்தளம் ஏமாற்றி வருகின்றது.

இதுதான் samagra.education.gov.in அதிகாரப்பூர்வமான வலைத்தளம் -மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சகம் எச்சரிக்கை.

* காங்கிரஸ் திட்டமிட்டிருந்த ஜிஎஸ்டி தற்போது பாஜகவால் வில்லன் போல் மாற்றமடைந்திருக்கிறது. தொழில் நிறுவனங்களுக்கு இது ஆபத்தானது

நிறுவனங்களை காக்கும் விதத்தில் புதிய மற்றும் குறைவான வரி திட்டத்தை (ஜிஎஸ்டி 2.0) காங்கிரஸ் கொண்டுவரும்- ராகுல் காந்தி, காங்., எம்.பி.

* ஜூலை 4ம் தேதி சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு.

சென்னை: தாஜ் ஓட்டலில் வரும் 4ஆம் தேதி தொழில் மாநாடு - அமைச்சர் தங்கம் தென்னரசு.

ரூ.3,494 ஆயிரம் கோடி தொழில் முதலீடுகள், 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு.

29 திட்டங்களுக்கு நிலம் அடையாளம் காணும் பணி நிறைவு: 25 திட்டங்கள் அனுமதி பெறும் நிலையில் உள்ளது  - தங்கம் தென்னரசு.

* தமிழகத்தில் உள்ள அணைகளை பாதுகாக்க மாநில அணை பாதுகாப்பு அமைப்பை உருவாக்கியது தமிழக அரசு

மத்திய அரசின் அணை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாநில அணை பாதுகாப்பு உருவாக்கம்

சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மண்டலங்களின் தலைமைப் பொறியாளர்கள் உட்பட 15 பேர் உறுப்பினர்களாக நியமனம்

அணையின் பாதுகாப்பு, நீர் வருகை, நீர் வெளியேற்றம் உள்ளிட்டவைகளை இந்த அமைப்பு கண்காணிக்கும்

* மரம் விழுந்து விபத்து
சென்னை சிட்டி சென்டர் சாலையில் திடீரென மரம் சாய்ந்து விழுந்தது. விபத்து மற்றும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.

சற்றுநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாநகராட்சி, போக்குவரத்து காவல்துறையினர் மரத்தை அகற்றினர்.

வீடியோ: https://twitter.com/IndiaNewsDigest/status/1542860035713183744?t=6uSLSs0Eu88uVaxm1Zkb-g&s=19

* இது, டிராக்டர் ரேஸ்!

வீடியோ: https://twitter.com/IndiaNewsDigest/status/1542873613732352001?t=g27TynC6VIX_nJNsu4OP9w&s=19

* தமிழ்நாட்டில் இன்று மேலும் 2,385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு 34,77,570 ஆக உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 1,025, செங்கல்பட்டு 369, திருவள்ளூர் 121 பேருக்கும் தொற்று.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages