சமூகநீதி சாதிக்கட்டும்! - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வாழ்த்து.
பவானி, அந்தியூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய ஈரோடு வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, அவரது 47-ஆவது பிறந்தநாளையொட்டி அவரது பிறந்த ஊரான நெருஞ்சிப்பேட்டையில் 47 மரக்கன்றுகளை நட்டார். அதற்காக நான் அவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தேன்.
தொடர்ந்து அவரது குடும்ப உறுப்பினர்கள் பற்றி விசாரித்தேன். அப்போது தான் அவரது 17 வயது மகளின் பெயர் எனக்கு வியப்பூட்டியது. அந்த சிறுமி இப்போது 12-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார் என்பதையும் அறிந்து மகிழ்ச்சியடைந்தேன்.
17 ஆண்டுகளுக்கு முன் 2005-06 ஆம் ஆண்டுகளில் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை வென்றெடுப்பதற்காக நான் தீவிரமாக போராடிக் கொண்டிருந்தேன். அதனால் ஏற்பட்ட உணர்வு கூட கிருஷ்ணமூர்த்திக்கு, அந்த நேரத்தில் பிறந்த தமது மகளுக்கு, அப்படி ஒரு பெயரை வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.
சரி.... அந்த பெண் தெய்வத்தின் பெயர் என்னவாக இருக்கும் என்று யூகித்தீர்களா?
அந்த பெண் குழந்தையின் பெயர் சமூக நீதி!
சமூக நீதி அவரது வாழ்க்கையில் சாதிக்கட்டும்!!
சமூகநீதியை பெற்ற கிருஷ்ணமூர்த்தி இணையருக்கு வாழ்த்துகள்!!!
No comments:
Post a Comment