அக்னிப்புரட்சி இன்றைய (23.06.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (23.06.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (23.06.2022) முக்கிய செய்திகள்.

* அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த தடை இல்லை!

23 தீர்மானங்களை தவிர வேறு தீர்மானம் எதுவும் நிறைவேற்றக் கூடாது!

இரவு முழுவதும் நடந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையில் இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு!

இரு நீதிபதிகள் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இபிஎஸ் முடிவு என அதிமுக வட்டாரங்கள் தகவல்!

* தயார் நிலையில் வஜ்ரா
அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில், வன்முறைகளை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் வஜ்ரா வாகனம் கொண்டுவரப்பட்டுள்ளது

* தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நேற்று இரவே ஒ.பி.எஸ். தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

அ.தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகிய இரு நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்றனர்.

பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என ஓ.பி.எஸ். தரப்பும், பொதுக்குழுவை நடத்த வேண்டும் என இ.பி.எஸ்., தரப்பும் விடிய விடிய வாதம் நடத்தினர்.

வாதம் அதிகாலை 4.00 மணிக்கு முடிவடைந்த நிலையில், 4.20 மணிக்கு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக, பன்னீர் செல்வத்தின் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றனர்.

அதிமுக பொதுக்குழு நடத்த எந்த தடையும் இல்லை.

பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கலாம்.

மேலும் 23 தீர்மானங்களை தவிர வேறு புதிய தீர்மானங்கள் குறித்து முடிவு எடுக்கக்கூடாது என நீதிபதிகள் உத்ரவிட்டனர்.

இதையடுத்து சென்னை வானகரத்தில் உள்ள, ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில், இன்று காலை 10:00 மணிக்கு அ.தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம், தற்காலிக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடக்க உள்ளது.

இன்று நடைபெறும் அ.தி.மு.க., பொதுக் குழு கூட்டத்தில் பன்னீர் செல்வம் பங்கேற்பார் என துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் தெரிவித்தார்.

* அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு..

ஏற்கனவே மகப்பேறு விடுப்பு பெற்ற பெண் ஊழியர்கள் தங்களின் சுய விருப்பத்தின் பேரில் பணியிட மாறுதல் பெற்றால், பின் மீண்டும் மகப்பேறு விடுப்பை கோர இயலாது - மனிதவள மேலாண்மைத்துறை விளக்கம்

* அதிமுக பொதுக்குழு : வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு மண்டபத்தில் பலத்த பாதுகாப்பு

மண்டபத்திற்கு உள்ளே, வெளியே, இணைப்பு சாலைகளில் மொத்தம் 2000 போலீஸ் குவிப்பு

மண்டபம் நோக்கி அதிமுக நிர்வாகிகள் குவிந்து வருகிறார்கள்

* அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் நடைபெறவுள்ள நிலையில், பூவிருந்தவல்லி முதல் மதுரவாயல் வரை சுமார் 5 கி.மீ அளவிற்கு கடும் போக்குவரத்து நெரிசல். பள்ளிக்கு செல்பவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதி

* அதிமுக 🌱பொதுக்குழு
வருகைப் பதிவேட்டில் பொதுக்குழு உறுப்பினர்கள் யாரும் கையெழுத்திடவில்லை

பொதுக்குழுவிற்கு வரும் உறுப்பினர்கள் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடுவது நடைமுறை

வருகை பதிவேடு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள போதும், எந்த உறுப்பினரும் கையெழுத்திடவில்லை

* அதிமுக 🌱பொதுக்குழு
ஒற்றை தலைமை வேண்டும் அதுவும் எடப்பாடி பழனிசாமிதான் வேண்டும் என்பதை பொதுக்குழு கூட்டத்தில் முன்வைப்போம்” - செயற்குழு உறுப்பினர்கள் கருத்து

* அதிமுக 🌱பொதுக்குழு
ஓபிஎஸ் முன்னிலையில் ஒற்றைத் தலைமை வேண்டும் என முழக்கமிட்டதால் பரபரப்பு!

* அதிமுக 🌱பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு அரங்கில் ஓபிஎஸ்-ஐ எதிர்த்து இபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷம்... கூச்சல், குழப்பம், பதற்றம் நிலவுகிறது!

* அதிமுக பொதுக்குழு குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மறைமுக பேச்சு...

இன்னொரு பக்கத்தில் திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியும். அந்த பிரச்சனைக்கு செல்ல விரும்பவில்லை

தலையிட வேண்டிய அவசியமில்லை, திமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்துபோயுள்ளனர்

- அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் இல்ல திருமண விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு

* பொதுக்குழுவில் ஓபிஎஸ்-க்கு எதிராக முழக்கம்

ஒற்றைத் தலைமை கோரி முழக்கமிட்ட தொண்டர்களை அமைதியாக உட்காருமாறு முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் வலியுறுத்தல்

ஓ.பி.எஸ் ஆதரவாளரான ஜே.சி.டி பிரபாகரன் அவர்களுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டதால், அவரும் மேடையில் இருந்து கீழிறங்கினார்.

அதிமுக பொதுக்குழு தொடங்குவதில் தாமதம்- வழிநெடுக எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு கொடுத்ததால் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை- பெங்களூரு; சென்னை பூவிருந்தவல்லி- மதுரவாயல் சாலைகளில் பல மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த ஓ​பிஎஸ்-ஐ வரவேற்காத நிலையில், ஈபிஎஸ்-ஐ வரவேற்கும் மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுக்குழு நடைபெறும் மண்டபத்தின் காத்திருப்பு அறையில் ஓபிஎஸ் உள்ளார்

* அதிமுக 🌱பொதுக்குழு
தொடங்கியது அதிமுக பொதுக்குழு கூட்டம்:
ஒரே மேடையில் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அமர்ந்துள்ளனர்.

பொதுக்குழுவை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நடத்துவதற்கு பன்னீர்செலவம் முன்மொழிந்தார்!

பன்னீர்செல்வம் முன்மொழிந்ததை எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்தார்!

* அதிமுக 🌱பொதுக்குழு
தலைவன் இருக்கிறான், வருவான், விரைவில் வருவான் - வளர்மதி

ஒற்றை தலைமை வர வேண்டும் என அனைத்து உறுப்பினர்களும் விரும்புகின்றனர்

அடுத்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமையுடன், அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படும்!- கே.பி.முனுசாமி

“பொதுக்குழு உறுப்பினர்கள் அனைத்து தீர்மானங்களையும் நிராகரித்துவிட்டனர்; அனைத்து உறுப்பினர்களின் கோரிக்கை ஒற்றைத் தலைமை வரவேண்டும் என்பது தான்”-கே.பி.முனுசாமி

🔴 அதிமுக அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்வு
-அதிமுக பொதுக்குழு

* ஜெயலலிதாவைப் போல் வலிமையான ஒற்றைத் தலைமை ஏற்படுத்தப்பட வேண்டும். இரட்டைத் தலமையை ரத்து செய்து ஒற்றைத் தலைமையை கொண்டு வர வேண்டும்

-பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் என சி.வி.சண்முகம் வாசிப்பு

2190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட ஒற்றைத் தலைமை கோரிக்கையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளக் கோருகிறோம்; இரட்டைத் தலைமையை ரத்து செய்து, அது குறித்த விவாதத்தை பதிவு செய்ய வேண்டும்: சி.வி.சண்முகம்

🔴 11.07.2022 அன்று அதிமுக பொதுக்குழு மீண்டும் கூடும்
-அதிமுக அவைத்தலைவர் அறிவிப்பு

* ஓபிஎஸ் வெளிநடப்பு
சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழுவை நிராகரிப்பதாக மேடையில் கோஷமிட்ட வைத்திலிங்கம்

அதனை தொடர்ந்து  ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளிநடப்பு செய்தனர்

அதிமுக அவைத்தலைவராக் தேர்வு செய்யப்பட்ட தமிழ்மகன் உசேன் உரையாற்றும்போது ஓ.பி.எஸ் பெயரை குறிப்பிடவில்லை!

பரபரப்பான சூழலில் கூடிய அதிமுக பொதுக்குழு கூட்டம் சலசலப்புடன் நிறைவு

எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் நிறைவு பெற்றது அதிமுக பொதுக்குழு

இரட்டை தலைமையை ரத்து செய்து, வலுவான ஒற்றை தலைமையை கொண்டுவர உறுப்பினர்கள் கோரிக்கை

ஓபிஎஸ் மீது தாக்குதல்!
அதிமுகவினர் ஆவேசம்!

பொதுக்குழுவை விட்டு வெளியேறிய பன்னீர் செல்வம் மீது அதிமுக தொண்டர்களே தண்ணீர் பாட்டில் வீசியதால் பதட்டம்!

வைத்தியலிங்கம், ஜெ.சி.டி பிரபாகரன் மீது தீர்மான நகல்களை கிழித்து எறிந்து துரோகி என அதிமுகவினர் முழக்கம்!

டயர் பஞ்சர்
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு ஓ.பி.எஸ் வந்த பரப்புரை வாகனத்தின் டயர் பஞ்சர் செய்யப்பட்டதால் பரபரப்பு!

* ஓபிஎஸ் கையெழுத்து போட்டால்தான் அடுத்த பொதுக்குழு கூட்டம் செல்லும் - பொதுக்குழு மேடையில் இருந்து வெளியேறிய வைத்திலிங்கம் பேச்சு!

* கடலூர் எம்.புதூர் பட்டாசு ஆலையில் நடந்த வெடிவிபத்தில் 3 பேர் இறந்த நிலையில் 2 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.

* 3 லட்சம் ரூபாய் நிவாரணம்:
கடலூர்: எம்.புதூர் கிராமத்தில் பட்டாசு தொழிற்சாலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் - தமிழக முதல்வர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் - முதல்வர்.

உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு தலா 3 லட்ச ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன் - முதல்வர் மு.க.ஸ்டாலின்.

படுகாயமடைந்த பெண்ணுக்கு கடலூர் அரசு பொது மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளேன் -முதல்வர்.

* திருச்சி: பேருந்து உரிமையாளரை மிரட்டிய புகாரில் திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகனும் பாஜக பிரமுகரான சூர்யா கைது.

தன் கார் மீது பேருந்து மோதிய சம்பவத்தில் இழப்பீடு கேட்டு பேருந்தை எடுத்துக்கொண்டு, உரிமையாளரை மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

* அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 5 பேர் இரவு டெல்லி பயணம்.

உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஆகியவற்றில் முறையீடு செய்யவுள்ளதாக தகவல்.

* நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா: தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 1,063 பேர் பாதிப்பு; புதிய உயிரிழப்பு இல்லை; 567 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்.

* குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக டெல்லி செல்வதாக ஓ.பி.எஸ் பேட்டி.

எடப்பாடி பழனிசாமி சார்பாக தம்பிதுரை டெல்லி செல்வதாக தகவல்.

* தேனி: அதிமுக பொதுக்குழுவில் அவமானப்படுத்தியதாக எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் எரிக்க முயற்சி

* NIA க்கு புதிய இயக்குனர்:
NIA தேசிய புலனாய்வு முகமையின் இயக்குனராக பஞ்சாப் முன்னாள் டிஜிபி தினகர் குப்தா நியமனம்.

கேப்டன் அம்ரீந்தர் சிங்-க்குப் பிறகு பஞ்சாப் முதல்வராக பதவியேற்ற சரஞ்சித் சிங் சன்னி, இவரை டிஜிபி பொறுப்பில் இருந்து, போலீஸ் வீட்டு வசதி வாரியத்திற்கு மாற்றினார்.

பாலிடெக்னிக் முடித்தவர்கள் நேரடி 2ம் ஆண்டு பொறியியல் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

* அரசுப் பள்ளிகளில் 13 ஆயிரம் ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்ய கல்வித்துறை உத்தரவு.

ஜூலை 1ம் தேதி முதல் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய மாவட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்காலிக ஆசிரியர்களுக்கு ரூ.7500 முதல் ரூ.12 ஆயிரம் வரை சம்பளம் வழங்கவும் கல்வித்துறை உத்தரவு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages