அக்னிப்புரட்சி இன்றைய (06.06.2022) முக்கிய செய்திகள்.
* கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆறு, குளம், ஏரி மற்றும் தடுப்பணைகளில் குளிப்பதற்கு ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது.
கடலூர் அருகே ஆற்றுத் தடுப்பணை நீரில் மூழ்கி 7 பேர் உயிரிழந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தகவல்.
ஆர்வ மிகுதியால் தடையை மீறி இறங்கி குளிக்கும்போது உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்படுகின்றன.
நீர்நிலைகளில் இறங்கி குளிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
சிறுவர்கள் நீர்நிலைகளில் இறங்கி குளிக்க முற்படுவதை, பெற்றோர்கள் கண்டிப்பாக அனுமதிக்க கூடாது - கடலூர் ஆட்சியர் பாலசுப்ரமணியம்.
* சென்னை உயர் நீதிமன்றத்தில் கோடை விடுமுறைக்கு பின் இன்று முதல் வழக்கமான விசாரணை தொடங்கப்பட உள்ளது.
கடந்த ஏப்ரல் 30ம் தேதி முதல் ஜூன் 5ம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் கோடை விடுமுறைக்கு பின் இன்று முதல் வழக்கமான விசாரணை தொடங்கப்பட உள்ளது.
கடந்த ஏப்ரல் 30ம் தேதி முதல் ஜூன் 5ம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
* தமிழகத்திற்கு அடுத்து வரும் 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை. - இந்திய வானிலை ஆய்வு மையம்.
* பிரதமர் மோடி இரங்கல்:
கடலூர் கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பேர் உயிரிழந்ததை அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்;
அவர்களது நண்பர்கள், குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்- பிரதமர் மோடி.
* மாற்றுத் திறனாளிகளுக்கான 'அனைத்தும் சாத்தியம்' என்ற அருங்காட்சியகத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சென்னை, காமராஜர் சாலையில் ரூ.1 கோடி மதிப்பில் அருங்காட்சியகம் அமைப்பு.
* சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட சுந்தர் மோகன், குமரேஷ் பாபுவுக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதிகளின் எண்ணிக்கை 58-ஆக உயர்ந்தது.
* இன்று (07.06.2022) தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களை முன்னாள் அமைச்சரும் இந்நாள் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் சந்தித்து வாழ்த்து பெற்றார்
* 2021-22 கல்வியாண்டில் 9 ம் வகுப்பு இறுதித்தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி வழங்கப்படாது- பள்ளிக்கல்வித்துறை.
* பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் பயண அட்டை வழங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது- போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்.
ஸ்மார்ட் கார்டு வழங்கும் வரை பழைய பயண அட்டையை பயன்படுத்தி பேருந்தில் பயணம் செய்யலாம் - அமைச்சர் சிவசங்கர்.
* இந்திய அரசு அனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதை அளிக்கிறது.
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பிற்கு இந்திய வெளியுறவுத்துறை விளக்கம்.
தேவையற்ற மற்றும் குறுகிய எண்ணம் கொண்ட கருத்துக்களை அரசு திட்டவட்டமாக நிராகரிக்கிறது - இந்திய வெளியுறவுத்துறை.
ஒரு மத ஆளுமையை இழிவுபடுத்தும், புண்படுத்தும் ட்வீட்கள் மற்றும் கருத்துக்கள் சில நபர்களால் செய்யப்பட்டன.
அவை எந்த வகையிலும் இந்திய அரசின் கருத்துக்களைப் பிரதிபலிக்கவில்லை.
சம்பந்தப்பட்ட கட்சிகளால் குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராக ஏற்கனவே கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - இந்திய வெளியுறவுத்துறை
* ஆற்றில் மூழ்கி 7 பேர் உயிரிழந்த நிகழ்வு என்னைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
குழந்தைகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்.
கடலூர் மாவட்டம் கெனிலம் ஆற்று நீரில் மூழ்கி 7 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்.
* ஆவின் பால் பவுடர் ஊட்டச்சத்து அல்ல - அமைச்சர் மா. சுப்பிரமணியன்.
ஆவின் பால் பவுடர் ஊட்டச்சத்துக்கானது அல்ல; டீ, காபியில் கலந்து சாப்பிடத்தான் பயன்படும்.
ஆவின் ஹெல்த்மிக்ஸ் கர்ப்பிணிகளுக்கு உதவுமா என்பது கேள்வியாக இருக்கிறது; குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
விலை குறைவு என்பதால் ஆவினில் வாங்க முடியாது; வாங்க வேண்டியதைதான் ஆவினில் வாங்க முடியும்.
மார்க்கெட்டில் ரூ.588க்கு விற்கப்படும் ஹெல்த் மிக்ஸை ரூ.460.50க்கு கொள்முதல் செய்கிறோம்.
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்து பொருளை அரசே வாங்குவது 2018-ல் இருந்தே நடைமுறையில் உள்ளது.
டெண்டர் இன்னும் கொடுக்காத சூழலில், குறிப்பிட்ட நிறுவனத்துக்கே செல்லும் என எப்படி யூகமாக பேசமுடியும்?
கர்ப்பிணிகளுக்கான தொகுப்பு பற்றி அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுக்கு மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்.
* 1,2,5,10,20 ரூபாய் புதிய நாணயங்கள் வெளியீடு.
பார்வை குறைபாடு உள்ளவர்களும், எளிதில் கண்டறியும் விதமாக புதிய நாணயங்கள் அறிமுகம்.
1,2,5,10,20 ரூபாய் நாணயங்களை வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி.
* பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்:
தங்கள் நாட்டில் உள்ள சிறுபான்மையினரின் பாதுகாப்பு மீது பாகிஸ்தான் கவனம் செலுத்த வேண்டும்.
இந்திய அரசு அனைத்து மதங்களுக்கும் அதிகபட்ச மரியாதையை அளிக்கிறது.
இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பு பற்றி அறிக்கை வெளியிட்ட பாகிஸ்தானுக்கு வெளியுறவுத்துறை கண்டனம்.
* நளினி, ரவிச்சந்திரனை விடுதலை செய்ய உயர்நீதிமன்றமே பரிசீலிக்கலாம் - தமிழக அரசு.
தங்களை விடுவிக்கக் கோரி நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு.
* ரூபாய் நோட்டுக்களில் காந்தியின் படம் மாற்றப்படும் என பரவி வந்த செய்தி உண்மை இல்லை.
காந்தியின் படம் மாற்றப்படாது, அவ்வாறு மாற்ற வேண்டும் என எந்த கோரிக்கையும் வரவில்லை- ரிசர்வ் வங்கி விளக்கம்.
No comments:
Post a Comment