ஆன்லைன் சூதாட்டத்தில் தற்கொலை செய்து உயிரிழந்த திருவொற்றியூர் மணலிபுதுநகர் பவானி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் - பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி - Agnipuratchi

ஆன்லைன் சூதாட்டத்தில் தற்கொலை செய்து உயிரிழந்த திருவொற்றியூர் மணலிபுதுநகர் பவானி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் - பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி

Share This

ஆன்லைன் சூதாட்டத்தில் தற்கொலை செய்து உயிரிழந்த திருவொற்றியூர் மணலிபுதுநகர் பவானி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் - பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி

சென்னை திருவொற்றியூர் மணலி புதுநகர் பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவரின் மனைவி பி.எஸ்.சி பட்டதாரியான பவானி ஆன்லைன் சூதாட்டத்தில் தனது 20 பவுன் நகைகளை விற்று சூதாடி அதை இழந்து பின்னர் தனது இரு சகோதரிகளிடம் இருந்து தலா ஒன்றரை லட்சம் வீதம் மூன்று லட்சம் பெற்று அதையும் இழந்துவிட்ட சோகத்தில் நீடித்து வந்துள்ளார். அவரது சகோதரிகளும் கணவரும் எவ்வளவோ அறிவுரை சொல்லியும் ஆன்லைன் சூதாட்டத்தை கைவிடு என வலியுறுத்தியும் கேட்காமல், இறுதியில் மிகுந்த இழப்பிற்கு ஆளாகி விட்ட பவானி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியும் வேதனையும் ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆன்லைன் சூதாட்டத்தில் தமிழ்நாட்டில் தொடர்ந்து தற்கொலை சாவுகளும், கொலைகளும், பொருளாதார இழப்பும் இதனால் குடும்பங்கள் சீரழிவது தொடர்கதையாகி வருகிறது, உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். பட்டதாரி பெண் பவானியை இழந்து மீளா துயரில் வாடும் அவரது கணவர் பாக்கியராஜ், குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages