அக்னிப்புரட்சி இன்றைய (02.07.2022) முக்கிய செய்திகள்.
* 13000 தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.
உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை தொடர்ந்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் கல்வி ஆணையர்.
பழைய நியமனங்கள் அனைத்தும் ரத்தானது - பள்ளிக்கல்வி ஆணையம்.
* கரூர் மாவட்டத்தில் ரூ.28.60 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட திட்டப்பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ரூ.581.44 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
ஓராண்டு கால ஆட்சி எனக்கு மனநிறைவை தருகிறது.
- கரூர் அரசு நலத் திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
80,750 பேருக்கு ஒரே நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஒவ்வொருவருக்கும் தமது மனசாட்சியே நீதிபதி என்பார்கள். அதன்படி எனது மனசாட்சிக்கு உண்மையாக ஆட்சி நடத்துகிறேன். ஓராண்டு கால ஆட்சி மனநிறைவைத் தருகிறது. - ஸ்டாலின்
மக்களிடம் இருந்து வரும் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற எப்போதும் தயார்.
என்னை விமர்சிப்பதன் மூலம் பிரபலமடையலாம் என்று தினந்தோறும் ஊடகங்களுக்கு பேட்டிக் கொடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு பதில் சொல்ல எனக்கு விருப்பமில்லை, நேரமுமில்லை.
மக்களுக்கான திட்டங்கள் பற்றி சிந்திக்கவே, செயலாற்றவே நேரம் போதவில்லை. - ஸ்டாலின்.
மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம். ஆனால், மானத்தைப் பற்றி கவலைப்படாத ஒருவருடன் போராடுவது சிரமமான காரியம் என்று பெரியார் சொல்வார். எனவே, வீண் விமர்சனங்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. - ஸ்டாலின்
மக்களுடைய முகத்தில் தென்படும் மலர்ச்சியும் மகிழ்ச்சியும் தான் இந்த ஆட்சி எப்படி நடக்கிறது என்பதற்கான சாட்சி. - ஸ்டாலின்.
ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் தொழில் வளர்ச்சியில் போட்டி இருக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டமும் வளர்ந்தால் தான் தமிழ்நாடு வளரும். கரூர் மாவட்டம் திருப்பூர் மாவட்டத்தை விட தொழில் வளர்ச்சியில் வளர வேண்டும். - ஸ்டாலின்.
* தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு புதுச்சேரி வந்தார்
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மலர்கொத்து கொடுத்து திரௌபதி முர்முவை வரவேற்றார்
பாஜக, என்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் ஆதரவு கோருகிறார் திரௌபதி முர்மு
* ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய விரும்பும் தேர்வர்கள், வரும் 11ம் தேதி முதல் 16 ம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம்.
ஆசிரியர் தகுதித் தேர்வு 1 மற்றும் 2 ஆகிய தாள்களை எழுத 6 லட்சம் பேர் விண்ணப்பம்-ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.
* லாட்டரி மார்டினின் ரூ.173 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சோத்துகளை முடக்கியுள்ளது அமலாக்கத்துறை.
சட்ட விரோத பரிவர்த்தனை வழக்கின் கீழ் லாட்டரி விற்பனையாளர் மார்டின் மற்றும் அவருக்கு நெருங்கியவர்கள் மீதும் நடவடிக்கை.
* பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸுக்கு சொந்தமான ரூ.234.75 கோடி சொத்துகளையும் முடக்கியது அமலாக்கத்துறை.
* நுபுர் ஷர்மாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்.
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவுக்கு, மேற்கு வங்கம் போலீஸ் லுக் அவுட் நோட்டீஸ் விடுத்திருக்கிறது.
மேற்கு வங்கத்தில் அவர் மீது பதியப்பட்ட வழக்குகள் குறித்து நேரில் ஆஜராக மேற்கு வங்கம் போலீஸ் உத்தரவிட்டது.
ஆனால், அவர் ஆஜாராகாததால் தற்போது லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டிருக்கிறது.
* முதல் இன்னிங்ஸிலேயே இந்திய அணி அபார பேட்டிங்.
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட்: தனது முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை எடுத்து இந்திய அணி அபார பேட்டிங்.
அதிகபட்சமாக ரிஷப் 146, ஜடேஜா 104 ரன்கள் விளாசினர்; ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்கள் கைப்பற்றி அசத்தல்.
* உலக சாதனை படைத்த பும்ரா:
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ஒரு ஓவரில் 35 ரன்கள் (எக்ஸ்ட்ரா உட்பட) எடுத்து உலக சாதனை படைத்தார் இந்திய அணி வீரர் பும்ரா.
பிரையன் லாரா டெஸ்ட் உலக சாதனையை முறியடித்தார் பும்ரா.
ஸ்டூவர்ட் பிராடின் ஒரே ஓவரில் 35 ரன்கள் விளாசப்பட்டது, இதில் 4 பௌண்டரிகள் 2 சிக்சர்களை விளாசி 29 ரன்களை மட்டையில் எடுத்ததன் மூலம் பிரையன் லாரா எடுத்த ஒரே ஓவர் 28 ரன்கள் டெஸ்ட் உலக சாதனையை முறியடித்தார் பும்ரா.
* சென்னையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோரினார் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு.
அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்பு.
* பிரதமர் மோடியின் வரவேற்கத்தக்க இந்த அறிவிப்பை அதிமுக முழு மனதுடன் ஆதரிக்கிறது
சமூக நிதி பேசும் திமுக திரௌபதி முர்முவை ஏன் ஆதரிக்கவில்லை- எடப்பாடி பழனிசாமி
ஜார்கண்ட் மாநிலத்தில் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையும் திரௌபதி முர்முவுக்கு உண்டு
அவருக்குத் தலைசிறந்த நிர்வாகத் திறனும் அனுபவமும் உள்ளது
திரௌபதி முர்மு நமது நாட்டின் தலைசிறந்த குடியரசு தலைவராக நிச்சயம் இருப்பார்- எடப்பாடி பழனிசாமி
* எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மேடையில் இருந்து சென்ற பிறகு, திரௌபதி முர்முவை சந்தித்து ஆதரவு தெரிவித்தார் ஓ.பன்னீர்செல்வம்.
சட்டவிதிகளின் படி இன்று வரை நான் தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர்.
அதிமுக சட்ட விதிப்படி இன்றுவரை நான்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகின்றேன்.
குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவை தனியாகச் சந்தித்து ஆதரவு தெரிவித்த பின் ஓபிஎஸ் பேட்டி.
* சென்னையில் இன்று (02.07.2022) தாஜ் ஹோட்டலில் குடியரசு தலைவர் வேட்பாளர் திருமதி திரெளபதி முர்மு அவர்களை பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் சந்தித்து பாமக சார்பில் வாழ்த்து கூறி தனது ஆதரவை வழங்கினர் உடன் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி. முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், இரா. அருள், எஸ். சதாசிவம், சி.சிவக்குமார், வழக்கறிஞர் கே.பாலு உள்ளிட்டோர் நேரில் சந்தித்து வாழ்த்து கூறினர்
* நாட்டின் சுதந்திரத்தில் தமிழ்நாடும், தமிழ்நாட்டு வீரர்களும் முக்கிய பங்கு வகித்தனர்.
என்னை உங்கள் சகோதரியாக எண்ணி, ஆதரவளித்து என்னை வெற்றி பெற வைக்க வேண்டும்- திரெளபதி முர்மு.
* காரைக்கால் மாவட்டம் “பொது சுகாதார அவசர நிலையாக” அறிவிப்பு.
புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தை “பொது சுகாதார அவசர நிலையாக” அறிவித்தது சுகாதாரத்துறை.
குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் 800-க்கும் மேற்பட்டோருக்கு உடல் நலக்குறைவு மற்றும் காலரா நோய் தாக்கப்பட்ட நிலையில் அறிவிப்பு.
* வரலாறு காணாத அளவுக்கு சரிந்த இந்திய ரூபாய் மதிப்பு..!
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தில் டாலர் முக்கிய பங்கு வகிக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.
இன்றைய வர்த்தக நேரத்தின் இடையே டாலருக்கு நிகாரான ரூபாயின் மதிப்பு 79 ரூபாய் அளவுக்கு சரிந்தது. இது இந்திய ரூபாயின் வரலாறு காணாத வீழ்ச்சியாகும்.
இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரக் காரணம், வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் இந்தியாவில் இருந்து தொடர்ந்து வெளியேறிக் கொண்டே இருக்கின்றன.
இதுமட்டுமின்றி சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. இனி கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்தால் இந்திய ரூபாயின் மதிப்பும் இன்னும் கிழே இறங்கும்.
மேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் 80 ரூபாயை தாண்டும் அச்சமும் உள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.
கடைசி கட்டமாக, ரூபாய் மதிப்பு சரிவதை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி, கையிருப்பில் உள்ள அமெரிக்க டாலர் கரன்சிகளை, அதிக அளவில் வெளியிட்டு ரூபாய் மதிப்பு சரிவடையாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
1947ம் ஆண்டு ஒரு அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு 3 ரூபாய் 30 காசுகளாக இருந்தது. 1967ம் அண்டு 7 ரூபாய், 50 காசுகளானது. 1990ம் ஆண்டு 17 ரூபாய் ஆனது. உலகமயமாக்கலில் கையெழுத்திட்ட 1990 களின் மத்தியில் இரட்டிப்பாகி 32 ரூபாய் ஆனது.
2000 ல் 43 ரூபாயாகவும், உலக பொருளதாரம் சரிவு கண்ட 2007ம் ஆண்டில் மீண்டும் இந்திய ரூபாய் வலுவடைந்து, 37 ரூபாயாக நிலை கொண்டது குறிப்பிடதக்கது. 2012ல் 60 ஆகவும் தற்போது 79 ரூபாயாக உயர்ந்துள்ளது.
சில நேரங்களில் சர்வதேச நிதியம், உலக வங்கி மற்றும் பன்னாட்டு அமைப்புகளின் அழுத்தங்களால் இந்திய ரூபாயின் மதிப்பு குறைக்கப்பட்ட வரலாறும் உண்டு.
* சைபர் கிரைம் மோசடியில் இது புதுசு: போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
போலீஸ் அதிகாரிகள் படத்தை பயன்படுத்தியும், மின் இணைப்பை துண்டிக்கப் போகிறோம் எனக் கூறியும், சைபர் கிரைம் குற்றவாளிகள், நுாதன முறையில் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக, போலீஸ் கமிஷனர் எச்சரித்துள்ளனர்.
சைபர் கிரைம் குற்றவாளிகள், மோசடிக்கு பல விதமான யுத்திகளை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், தற்போது, பொது மக்களின் மொபைல் போன்களுக்கு, 'உங்கள் வீட்டு மின் இணைப்பு இன்று இரவோடு துண்டிக்கப்படும். நீங்கள் சென்ற மாத மின் கட்டணம் குறித்து 'அப்டேட்' செய்யவில்லை. உடனடியாக மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொள்ளவும்' என, மொபைல் போன் எண்களை அனுப்புகின்றனர்.
நம்ப வேண்டாம்
இதை உண்மை என நம்பி தொடர்பு கொள்வோரின் வங்கி கணக்கு விபரங்களை பெற்று, நுாதன முறையில் மோசடி செய்து வருகின்றனர். பொது மக்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று வரும் தகவல்களை நம்ப வேண்டாம். மின்வாரியம் ஒரு போதும், இதுபோன்ற தகவல்களை மொபைல் போன்களுக்கு அனுப்புவது இல்லை. உங்கள் மொபைல் போன் எண்களுக்கும் தொடர்பு கொள்ள மாட்டார்கள்.அதேபோல, அரசு உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் படங்களை, 'வாட்ஸ் ஆப்'பில், முகப்பு படமாக, சைபர் கிரைம் குற்றவாளிகள் வைக்கின்றனர்.
இதன் வாயிலாக அவர்களின் நண்பர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களின் மொபைல் போன் எண்களுக்கு, 'அமேசான் கிப்ட் கார்டு வாங்கி அனுப்புங்கள். மிகவும் அவசரம் பணம் அனுப்புங்கள்' என, தகவல் அனுப்புகின்றனர். 'இதுபோன்று தெரியாத எண்களில் இருந்து, தங்களுக்கு தெரிந்த அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் படம் வைக்கப்பட்ட எண்ணில் இருந்து வரும் தகவல்களை புறக்கணிக்க வேண்டும். 'இதுபோன்ற தகவல்கள், சமூக வலைதளம் மற்றும் மின்னஞ்சல் என அதில் வந்தாலும், பணம் அனுப்ப வேண்டாம்' என, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.
No comments:
Post a Comment