அக்னிப்புரட்சி இன்றைய (07.07.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (07.07.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (07.07.2022) முக்கிய செய்திகள்.

* 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா - நேபாளம் இடையே மீண்டும் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் இருந்து நேபாள தலைநகர் காத்மாண்டு வரை 615 கி.மீ பேருந்து சேவை தொடக்கம்.

* விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதியில் ரஃபேல் நடால்.

விம்பிள்டன் டென்னிஸ்: முன்னணி வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார்.

4.20 மணி நேரம் நீடித்த போட்டியில் 3-6,7-5,3-6,7-5,7-6 என்ற செட்டில் டெய்லர் ஃபிரிட்ஸை வீழ்த்தினார் நடால்.

* பள்ளிகளில் தமிழ் பாடவேளைகளை குறைக்கும் முடிவை கைவிட வேண்டும் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா தனது டுவிட்டர் பதிவு

1. தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 6 - 10 வகுப்புகளுக்கான தமிழ்  மொழிப் பாடத்திற்கான  பாடவேளைகளின் எண்ணிக்கை ஏழிலிருந்து ஆறாக குறைக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுகளில் தமிழ்ப் பாடத் தேர்ச்சி விகிதம் குறைந்து வரும் வேளையில், இந்த முடிவு மிகவும் தவறானதாகும்!

2. வாரத்திற்கு ஒரு பாடவேளை நீதிபோதனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க, தேவையான  நடவடிக்கை.  அதற்காக ஆங்கில பாடவேளையை குறைத்ததுடன் நிறுத்தியிருக்கலாம்.  தமிழ் பாடவேளையையும் குறைத்திருக்கத் தேவையில்லை. அது தமிழுக்கு செய்யும் அவமரியாதை!

3. எனவே, தமிழ் பாடவேளையை குறைக்கும் முடிவை கைவிட வேண்டும். முன்பிருந்தவாறே வாரத்திற்கு 7 பாடவேளைகளை தமிழுக்கு ஒதுக்க வேண்டும். தமிழ் மொழியை இலக்கணப் பிழையின்றி எழுதுவதற்கான சிறப்புப் பயிற்சிகளை  மாணவர்களுக்கு வழங்க வேண்டும்!

* டெங்கு மற்றும் சிக்குன் குனியாவை கட்டுப்படுத்த புதிய பெண் கொசுக்களை உருவாக்கியுள்ளது புதுச்சேரியில் இயங்கும் ஐசிஎம்ஆர்-ன் ஆராய்ச்சி நிறுவனம்.

ஆண் கொசுக்களுடன் இந்த புதிய வகை பெண் கொசுக்கள் இணையும்போது உருவாகும் கொசுவில் வைரஸ் இருக்காது என ஆராய்ச்சியாளர்கள் தகவல்.

* நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இணையவழி விண்ணப்பம் வினியோகம் துவங்கியது.

* கடலூர்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 2022-23-ம் கல்வி ஆண்டில், அனைத்து துறையிலும் இளம் மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்ப வினியோகம் தொடங்கியது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் பல்வேறு பட்டப்படிப்புகள் மற்றும் விண்ணப்பங்கள் ஆகியவற்றின் விவரங்களை www.annamalaiuniversity.ac.in என்ற இணையதளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட இணையவழி விண்ணப்பங்கள் வருகிற 8.8.2022 அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்கப்படவேண்டும் -  துணைவேந்தர் கதிரேசன்.

* பல்வேறு துறைகளில் முத்திரை பதித்துள்ள சிறந்த இந்தியர்களை மோடி அரசு அங்கீகரித்து வருகிறது. ராஜ்யசபாவிற்கு நியமனம் செய்யப்பட்ட நான்கு உறுப்பினர்களின் சுருக்கமான விவரங்கள் இதோ.

* எண்ணங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் @நரேந்திரமோடி ஜி இசை, கலை மற்றும் கலாச்சாரத்தின் அழகை நமது சமூகத்தின் நீளம் மற்றும் அகலத்தை எட்டுவதற்கு இது ஒரு மரியாதை மற்றும் வாய்ப்பு. நிச்சயமாக, இந்திய அரசின் இந்த சைகை, இசை மற்றும் கலையை ஆர்வமாகவும் தொழிலாகவும் தொடர இளம் மனதைத் தூண்டும், இதன் மூலம் இந்தியா எப்போதும் அறியப்படும் செழுமையான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை புத்துயிர் பெறச் செய்யும்.
- இளையராஜா

* சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.544 குறைந்தது.

ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,672-க்கும், சவரன் ரூ.37,376-க்கும் விற்பனை.

* இந்தியாவில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு- உலக சுகாதார நிறுவனம்.

இந்தியாவில் ஒமைக்ரானின் புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் BA.2.75 என்ற புதிய வகை ஓமைக்ரான் கொரோனா கண்டுபிடிப்பு- உலக சுகாதார நிறுவனம்.

* தமிழகத்தில் 20 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை காணொலியில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தில் உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் அறிவித்தவாறு 20 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

கல்லூரிகள், பல்கலை.-களில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ஆய்வகங்கள், தொழில் முனைவோர் மையங்கள், விடுதிகளை காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ரூ.152 கோடியே 1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகங்களும் திறக்கப்பட்டது.

* மீன்வள படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம்.

B.F.Sc., B.Tech., BBA, B.Voc. உள்ளிட்ட 9 வகையான மீன்வள படிப்புகளில் உள்ள 345 இடங்களில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.

* இசையால் நம் உள்ளங்களையும் மாநிலங்களையும் ஆண்ட இசைஞானி இளையராஜா அவர்கள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினராய்ச் சிறப்புறச் செயல்பட வாழ்த்துகள்" என மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

* உலக முழுவதும் ரசிகர்களை தனது இசையால் மகிழ்வித்து, இசைஞானி என்று அன்புடன் அழைக்கப்படும் இசைஞானி இளையராஜா அவர்கள் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டதை பெருமகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். இளையராஜா  அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.- முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி

* நீதிமன்ற உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - அனைத்துத்துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம்.

நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.

* அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரிய வழக்கு.

ரூ.25 ஆயிரம் அபராதத்துடன் தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

விளம்பரத்துக்காக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் கண்டிப்பு. அதிமுக முன்னாள் உறுப்பினர் ஜோசப் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி.

* டோலோ-650 மாத்திரை நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை.

கடந்த பிப்ரவரி மாதம் அதன் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோ லேப்ஸ் வெளியிட்ட அறிவிப்பில், 350 கோடி டோலோ மாத்திரைகள் விற்பனையானதாகவும் ஓராண்டில் 400 கோடி வருவாய் கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள பெங்களூரு உட்பட நாடு முழுவதும் 40 இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை உள்ள மாத்திரை விநியோக நிறுவனத்திலும் இந்த சோதனை நடைபெற்றது.

வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் நடைபெற்ற இந்த சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* பிரிட்டனில் மொத்தம் உள்ள 122 அமைச்சர்களில் இதுவரை 49 அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்

பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலக கோரி அமைச்சர்கள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருகின்றனர்

* தமிழகத்தில் அதிகப்படியான குளிர் உணரப்படும் என பரவும் செய்தி உண்மையல்ல-வானிலை ஆய்வு மையம்.

அடுத்த சில வாரங்களுக்கு அதிகப்படியான குளிர் உணரப்படும் என பரவும் செய்தி உண்மையல்ல - வானிலை ஆய்வு மையம்.

சூரியனை விட்டு பூமி அதிக தூரம் செல்வதால் அதிகப்படியான குளிர், வரும் நாட்களில் உணரப்படும் என்ற செய்தி உண்மைக்கு புறம்பானது.

சென்னை வானிலை மண்டலம் அறிவித்ததாக பரப்பப்படும் செய்தி உண்மையல்ல - வானிலை மையம் விளக்கம்.

* எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளுபடி.

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவு.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உட்பட சண்முகம் தாக்கல் செய்த 3 மனுக்களும் தள்ளுபடி.

* காவிரி டெல்டா விவசாயிகள் தேவைக்காக 93,000 மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் கையிருப்பில் உள்ளன- வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

யூரியா உரம் 25,310 மெ.டன், டிஏபி -20,000 மெ.டன், பொட்டாஷ் -13,360, காம்ப்ளக்ஸ் உரம் -34430 மெ.டன் இருப்பில் உள்ளது.

ரசாயன உரங்கள் இருப்பு தொடர்பாக அரசு தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றது- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

* புதுக்கோட்டை எஸ்பியாக வந்திதா பாண்டே நியமனம்.

புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி.யாக வந்திதா பாண்டேவை நியமித்து தமிழக அரசு உத்தரவு.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இணை இயக்குநராக பவானீஸ்வரி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜியாக துரைகுமார் நியமனம்.

* அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய ஓ.பி.எஸ். மனு மீது உயர் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது

பொதுக்குழு நடத்தலாம் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், நான் என்ன செய்ய முடியும்? - நீதிபதி கேள்வி

பொதுக்குழுவுக்கு தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டாலும், மற்ற நிவாரணங்கள் தொடர்பான கோரிக்கைகளை எழுப்பலாம் என தெரிவித்துள்ளது - ஓ.பி.எஸ். தரப்பு

கட்சி உள்விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது - எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம்

பொதுக்குழுவுக்கு தடை கேட்பதை தவிர, வேறு நிவாரணம் கேட்கலாமே? - ஓ.பி.எஸ். தரப்புக்கு நீதிபதி கேள்வி

ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்துக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் செல்லுமா? என்பது தான் இந்த வழக்கு - ஓ.பி.எஸ் தரப்பு வாதம்

ஜூன் 23ம் தேதி நடந்த பொதுக்குழுவின் நீட்சிதான் வரும் 11ம் தேதி நடக்க உள்ள பொதுக்குழு? - நீதிபதி

அந்த கூட்டம் தனி, இந்த கூட்டம் தனி - ஓ.பி.எஸ். தரப்பு பதில்

ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கு அங்கீகாரம் அளிக்கப்படாததால், அவர்கள் செயல்பட முடியாது என்று கூறுவதை ஏற்க முடியாது அன்றைய பொதுக்குழுவில் அந்த விவகாரமே எடுக்கப்படவில்லை - ஓ.பி.எஸ். தரப்பு

தலைமை நிலைய நிர்வாகிகள் என்ற பெயரில் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்படி ஒரு பதவியே இல்லை

கட்சி விதிகளில் பொதுக்குழுவை கூட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்க்கு மட்டுமே அதிகாரமே உள்ளது - ஓ.பி.எஸ். தரப்பு வாதம்

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் செயல்பட முடியாவிட்டால் கட்சி செயல்படாதா? - நீதிபதி

அதுபற்றி கட்சி விதிகளில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை; இடைக்கால பொதுச் செயலாளரை தேர்வு செய்யவே இந்த பொதுக்குழு கூட்டம் - ஓ.பி.எஸ். தரப்பு

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் இல்லாத போது, யார் பொதுக்குழுவை கூட்ட அதிகாரம் படைத்தவர்? - நீதிபதி கேள்வி.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக இருவரும் தேர்வு செய்யப்பட்டதற்கான வெற்றி படிவம் வழங்கப்பட்டு, அது தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது; இது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது - ஓ.பி.எஸ். தரப்பு.

ஒருங்கிணைப்பாளர்களுக்கு 2026 வரை பதவிக்காலம் உள்ள நிலையில் அனைத்து விதிகளையும் புறந்தள்ளியுள்ளனர் - ஓ.பி.எஸ். தரப்பு வாதம்

ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகளை கலைத்து தற்காலிக பொதுச் செயலாளரை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டு, அதன் பின் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படும்.

பொதுச்செயலாளர் தேர்தலில் ஓ.பி.எஸ் உட்பட யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் - எடப்பாடி தரப்பு வாதம்.

இவ்வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் செய்ய வேண்டும், பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும், பின்னர் மற்றவை குறித்து தீர்மானிக்கலாம்.

ஓ.பன்னீர் செல்வத்துக்கு நோட்டீஸ் கொடுக்கவில்லை, அழைப்பிதழ்தான் வழங்கப்பட்டுள்ளது - எடப்பாடி தரப்பு வாதம்.

அதிமுக பொதுக்குழு விசாரணை: உயர் நீதிமன்ற தனி நீதிபதி விசாரணை நாளை ஒத்திவைப்பு.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகி விட்டதா?

பொதுக்குழுவை கூட்ட தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா?

பொதுக்குழு நோட்டீசில் கையெழுத்திடுவது யார்?

- விரிவான பதில்மனு தாக்கல் செய்ய எடப்பாடி தரப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.

* ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களுக்கு போட்டித்தேர்வு நடைபெறும் என அறிவிப்பு.

டெட் தேர்வுக்கு பிறகு, வேலை பெற மற்றொரு போட்டித்தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.

வரும் டிசம்பரில் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டித்தேர்வு நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.

அரசாணை எண் 149 வெளியாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில், முதல்முறையாக இந்தாண்டு தேர்வு நடக்கிறது. 

அரசாணை எண் 149-ஐ நீக்க ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்கள் கோரிக்கை.

விவோ மொபைல் நிறுவனம், அதன் சார்பு நிறுவனங்களுக்கு சொந்தமான 48 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை:

119 வங்கி கணக்குகளில் ₹66 கோடி நிரந்தர வைப்புத்தொகை, 2 கிலோ தங்க கட்டிகள், ₹73 லட்சம் ரொக்கம் பறிமுதல்.

* பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா.

2 நாட்களில் 54 அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து பதவி விலகிய நிலையில் ராஜினாமா.

* இந்தியாவில் மேலும் ஒரு புதிய விமான நிறுவனம்!

ஆகாஷா விமான நிறுவனம் இந்தியாவில் வணிக ரீதியான விமானங்களை இயக்க அனுமதி.
- விமான போக்குவரத்து ஆணையரகம்

* கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுக சாமியின் மகன் செந்தில் குமாரிடம் தனிப்படை போலீசார் விசாரணை.

அதிமுக ஆட்சியில் மாநிலம் முழுவதும் ஆறுகளில் மணல் எடுக்கும் ஒப்பந்தத்தை பெற்றவர் ஆறுமுக சாமி.

அதிமுக தலைமைக்கு நெருக்கமானவராக இருந்தவராகவும் கூறப்படுகிறது.

செந்தில் பேப்பர் நிறுவனத்திலிருந்து வருமானவரித்துறை 2017ம் ஆண்டில் எடுத்த ஆவணங்கள் கோடநாடு பங்களாவிலிருந்து திருடப்பட்டதா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை

* விவோ நிறுவனத்தின் வரி ஏய்ப்பு அம்பலம்:

விவோ நிறுவனம் ரூ.62,476 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிப்பு.

இந்தியாவில் சம்பாதித்த பணத்தை வரி செலுத்தாமல் சீனாவுக்கு அனுப்பியது அம்பலம்.

இந்தியாவில் ரூ.1 லட்சம் கோடி சம்பாதித்த் விவோ 50% வரி செலுத்தாமல் அனுப்பியுள்ளது.

நேற்று விவோவை சார்ந்த 23 நிறுவனங்களுக்கு சொந்தமான 48 இடங்களில் சோதனை.

வீவோ இந்தியா நிறுவனத்திடம் இருந்து ரூ.465.73 கோடி பறிமுதல் செய்துள்ளது அமலாக்கத்துறை.

119 வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.465 கோடி பணமும், ரொக்கமாக ரூ.73 லட்சமும், 2 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை விளக்கம்.

* தொடர் கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு நாளையும் விடுமுறை (Jul 08) அறிவிப்பு

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages