தினமும் கண்ணாடி முன் பயிற்சி!செய்யுங்கள் - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வலியுறுத்தல். - Agnipuratchi

தினமும் கண்ணாடி முன் பயிற்சி!செய்யுங்கள் - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வலியுறுத்தல்.

Share This

தினமும் கண்ணாடி முன் பயிற்சி!செய்யுங்கள் - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வலியுறுத்தல்.

தைலாபுரத்தில் உள்ள பா.ம.க. அரசியல் பயிலரங்கத்தில் 2002-ஆம் ஆண்டு தொடங்கி  பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக இடையில் தடைபட்டிருந்த பயிற்சி வகுப்புகள் இப்போது மீண்டும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

பயிலரங்கில் அளிக்கப்படும் பயிற்சிகளில் மிகவும் முக்கியமானது சாதனையாளர் பயிற்சி ஆகும்.   பா.ம.க. நிர்வாகிகளின் மனதில் உள்ள தாழ்வு மனப்பான்மையைப் போக்கி தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சியின் முக்கிய அம்சங்களில் ஒன்று உறுதிமொழிப் பயிற்சி ஆகும்.

உறுதிமொழி பயிற்சி என்பது கீழ்க்கண்ட உறுதிமொழியை ஏற்றுக் கொள்வது தான்.

‘‘நான் தன்னம்பிக்கை உள்ளவன்!
  நான் சக்தி மிக்கவன்!
  நான் சாதனையாளன்!
  என்னால் முடியும்!
  வெற்றி நிச்சயம்!’’

மேற்கண்ட வாசகங்களை படிக்கும் போது, படிப்பவர் மனதில் தன்னம்பிக்கை ஏற்படும்.

பயிற்சியின் போது இந்த உறுதிமொழியை ஏற்றுக்கொள்ளும் பாட்டாளிகள் பயிற்சி முடித்து வீடு திரும்பிய பிறகு ஒவ்வொரு நாளும் கண்ணாடி முன் நின்று இந்த உறுதிமொழியை தினமும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்குப் பெயர் கண்ணாடி முன் பயிற்சி.

இந்த கண்ணாடி முன் பயிற்சியை அனைவரும் தினமும் செய்ய வேண்டும். அதன் மூலம் நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையை பெற வேண்டும் என்பது தான் எனது விருப்பமும், வழிகாட்டுதலும்.

ஆகவே, உங்கள் வீடுகளில் நீங்கள் தினமும் செய்யுங்கள் கண்ணாடி முன் பயிற்சி!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages