அக்னிப்புரட்சி இன்றைய (10.07.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (10.07.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (10.07.2022) முக்கிய செய்திகள்.

* தமிழகத்தில் இன்று ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் முதல் தவணை, 2-வது தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என சுமார் ஒரு கோடியே 45லட்சம் பேர் உள்ளனர்.

* தியாகத் திருநாள் பக்ரீத் பண்டிகை இன்று உற்சாகக் கொண்டாட்டம் - உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

* உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.

அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் உயர்கல்வி பயில ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மாணவிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக ரூ.1,000 உதவித்தொகை செலுத்தப்படவுள்ளது.

https://penkalvi.tn.gov.in/
உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற இந்த லிங்க் பயன்படுத்தவும்.

* முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் என கூறி, அவரது பாதி சொத்துகளை கேட்டு மைசூரை சேர்ந்த 83 வயது முதியவர் என்.ஜெ.வாசுதேவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு.

தீபா, தீபக் ஆகியோர் ஜெ.வின் வாரிசு என 2020ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மாற்றி அமைக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை.

* நீட் தேர்வுக்கு நாளை முதல் ஹால்டிக்கெட் பெறலாம்.

நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் நாளை முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் இந்தாண்டு நீட் நுழைவுத்தேர்வு நடைபெறகிறது.

வரும் 17 ஆம் தேதி நடக்க உள்ள நீட்தேர்வுக்கு neet.nta.nic.inல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கலாம்.

* கர்நாடகாவில் கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறப்பு அதிகரிப்பு.

இன்று காலை 21 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் திறப்பு, தற்போது 50 ஆயிரம் கன அடியாக உயர்வு.

* எம்ஜிஆர் 'பொன்னியின் செல்வன்'

கடந்த 1958-ம் ஆண்டு, 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து `பொன்னியின் செல்வன்' கதையின் உரிமையைப் பெற்றார் எம்ஜிஆர்.

எம்.ஜி.ஆர் காலத்தில் காசு கொடுத்துக் கதை உரிமை பெறப்பட்டது. நடோடி மன்னன் பின் இதை படமாக்க நினைத்தார்.

அதன்பின், பொன்னியின் செல்வன் நாட்டுடைமையாக்கப்பட்டுவிட்ட காரணத்தால் தற்போது யார் வேண்டுமானாலும் அந்தக் கதையை திரைப்படமாக எடுக்கலாம். சட்டப்படி அதில் தவறில்லை. என்றாலும் தர்மப்படி கல்கியின் குடும்பத்திற்கு ஏதாவது கொடுக்கலாம் அல்லது கொடுக்காமலும் இருக்கலாம்.

பொன்னியின் செல்வனை' படமாக்க முயன்ற எம்.ஜி.ஆர், இந்தப் படத்தில் இரண்டு கேரக்டரில் நடிக்க இருந்தார். ஒன்று வந்தியத்தேவன். மற்றொன்று அருள்மொழிவர்மன். இந்தப் படத்துக்கு முன் வைஜயந்திமாலா எம்.ஜி.ஆருடன் ஒரே ஒரு படத்தில்தான் நடித்திருந்தார். அவரை பொன்னியின் செல்வனில் குந்தவை கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் செய்திருந்தார் எம்.ஜி.ஆர். ஜெமினிகணேசன், பத்மினி, சாவித்ரி, நம்பியார், டி.எஸ்.பாலையா உட்பட பலர் நடிக்க இருந்தனர். முதலில் எம்.ஜி.ஆர் தனது எம்ஜியார் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து, இயக்குவதாக இருந்தது. பிறகு தயாரிப்பு மற்றும் நடிப்பை மட்டும் பார்த்துக் கொண்டு வேறொருவர் இயக்குவற்கு முடிவு செய்யப்பட்டது.

அப்போதுதான் ஒரு நாடகத்தில் நடிப்பதற்காக, எம்.ஜி.ஆர் சீர்காழி சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினார். 6 மாதம் ஓய்வு தேவைப்பட்டது. ஓய்வு முடிந்து குணமடைந்ததும், அவர் நடிப்பில் பாதியில் நின்றபோயிருந்த படங்களை நடித்துக் கொடுத்தார். இதனால் பொன்னியின் செல்வனை அவர் எடுக்க முடியாமல் போனது.

* விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்.

இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் கிர்கியோஸை 4-6, 6-3, 6-4, 7-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் ஜோகோவிச்.

இது இவருக்கு 21வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.

* மூன்றாவது டி20 போட்டி இங்கிலாந்து வெற்றி.

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

216 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 198 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இந்திய அணியின் சூரியகுமார் யாதவ் 55 பந்துகளில் 117 ரன்களை அடித்தார்.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages