பாட்டாளி சொந்தங்களின் நெஞ்சங்களில் வாழ்கிறேன்! - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா நினைவுகள். - Agnipuratchi

பாட்டாளி சொந்தங்களின் நெஞ்சங்களில் வாழ்கிறேன்! - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா நினைவுகள்.

Share This

பாட்டாளி சொந்தங்களின்
நெஞ்சங்களில் வாழ்கிறேன்! - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா நினைவுகள்.

தைலாபுரம் தோட்டத்தில் உள்ள எனது தரைவழி தொலைபேசி இணைப்புக்கு இன்று மாலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. தொலைபேசியில் அழைத்தவரின் பெயர் ஏழுமலை. அவர் தற்போது சிங்கப்பூரில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். தொலைபேசியை எடுத்த உடனேயே ஏழுமலை என்னிடம் கூறிய செய்தி, “உங்களுடன் தொலைபேசியில் பேச வேண்டும் என்பது தான் எனது நீண்டநாள் விருப்பம் அய்யா. உங்களுடன் பேசியதன் மூலம் எனது விருப்பம் நிறைவேறிவிட்டது அய்யா” என்பதுதான். அடுத்து அவர் கூறிய செய்தி தான் எனக்கு இப்படியும் செய்கிறார்களே என்ற அதிர்ச்சியையும், இப்படியும் நம்மீது பற்று வைத்திருக்கிறார்களே என்ற மகிழ்ச்சியையும் அளித்தது. அவர் சொன்ன செய்தி இதுதான்.

“அய்யா உங்கள் மீது எனக்கு மிகுந்த பற்று உண்டு; அதன் காரணமாக உங்களின் உருவப் படத்தை நான் எனது மார்பில் பச்சைக்குத்திக் கொண்டிருக்கிறேன்” என்று ஏழுமலை கூறினார். ஏழுமலையின் சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஆகும். 2 ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணியாற்றி வருவதாக தெரிவித்தார். தொலைபேசியில் என்னிடம் பேச வேண்டும் என்பது அவரது நீண்டநாள் ஆசையாம். அந்த ஆசை இன்று நிறைவேறிவிட்டதாக பெருமிதத்துடன் கூறினார்.

சிங்கப்பூரில் சிறப்பாக பணியாற்றி முன்னேற வேண்டும் என்று அவருக்கு வாழ்த்துத் தெரிவித்த நான், எப்போது வேண்டுமானாலும் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும்படி கூறினேன். பாட்டாளி சொந்தங்கள் அனைவருக்குமே என் மீது பற்று உண்டு. பாட்டாளி சொந்தங்கள் அனைவரின் இதயங்களிலும் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். சிங்கப்பூரில் இருக்கும் ஏழுமலையிடம் மட்டும் நான் அவரது இதயத்திற்கு உள்ளேயும், வெளியேயும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages