அக்னிப்புரட்சி இன்றைய (11.07.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (11.07.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (11.07.2022) முக்கிய செய்திகள்.

* அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு.

* அதிமுக தலைமை அலுவலகம் அருகே பயங்கர மோதல்.

ஓபிஎஸ் தனது இல்லத்தில் இருந்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவகத்திற்கு புறப்பட்டார் ஓ.பன்னீர்செல்வம்.

பழனிசாமி பொதுக்குழுவில் பங்கேற்க சென்றுள்ள நிலையில் பன்னீர்செல்வம் கட்சி அலுவலகத்திற்கு செல்கிறார்.

ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் கற்கள் மற்றும் ஆயுதங்களை கொண்டு தாக்கி கொள்வதால் பெரும் பதட்டம்.

ஓபிஎஸ் வாகனத்தை அதிமுக தலைமை அலுவலகம் அருகே செல்ல முடியாத அளவிற்கு கற்கள் வீச்சு நடைபெற்று வருகிறது.

கலவர பூமியாக காட்சியளிக்கிறது அதிமுக தலைமை அலுவலகம்.

வன்முறை, கலவரத்துக்கு இடையே அதிமுக தலைமை அலுவலகம் சென்றார் ஓ.பன்னீர்செல்வம்.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள், பூட்டை உடைத்து அதிமுக அலுவலகத்திற்குள் புகுந்ததால் பரபரப்பு.

* அதிமுக தலைமை அலுவலகத்தின் உள்ளே இருந்த ஆவணங்களை கைப்பற்றி ஓபிஎஸ் வாகனத்தில் வைத்த ஆதரவாளர்கள்

* ஶ்ரீவாரு மண்டபத்தில் தொடங்கியது அதிமுக  செயற்குழு கூட்டம்.

அதிமுக அவைத்தலைவர் முன்னிலையில் அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்களை நிறைவேற்ற ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

அதிமுக செயற்குழுவில் 16 வரைவு தீர்மானங்களை வாசித்தார் பொன்னையன்.

பொன்னையன் வாசித்த 16 தீர்மானங்களுக்கும் ஒப்புதல் அளித்தது அதிமுக செயற்குழு.

சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் அதிமுக செயற்குழு கூட்டம் நிறைவு பெற்ற நிலையில், தற்போது அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.

அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ரத்து செய்து தீர்மானம்

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தவும், தேர்தல் அதிகாரியை நியமிக்கவும் தீர்மானம்

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்து தீர்மானம்.

4 மாதங்களுக்குள் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தி முடிக்க தீர்மானம்.

தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமனை நியமித்து தீர்மானம்.

துணை ஒருங்கிணைப்பாளர்கள் பொறுப்பு, இனி துணை பொதுச்செயலாளர் என மாற்றம்.

பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட 10 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும்.

* ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது காவல்நிலையத்தில் ஈபிஎஸ் தரப்பு புகார்.

அதிமுக தலைமை அலுவலக கல்வீச்சு மோதல் சம்பவம் தொடர்பாக புகார் மனு.

* ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என அதிமுக பொதுக்குழுவில் எராளமான தொண்டர்கள் முழக்கம்.

* ஓ.பி.எஸ்-க்கு நீதிபதி கண்டனம்:
கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையை பெற முடியாதவர்கள், நீதிமன்றத்தை ஒரு கருவியாக பயன்படுத்தகின்றனர்.

ஜனநாயகத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பம் தான் மேலோங்கி இருக்கும்.

ஒருங்கிணைப்பாளர் என்பவர் கட்சி நலன் வளர்ச்சிக்கு ஏற்றவாறு உறுப்பினர்களை சமாதானம் செய்ய வேண்டும் - அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஓபிஎஸ் க்கு கண்டனம்.

* ஓ.பி.எஸ். அதிமுகவிலிருந்து நீக்கம்
பொருளாளர், அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி தீர்மானம்

மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம், உள்ளிட்டோரும் அதிமுகவிலிருந்து நீக்கம்...

ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கம் - பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்.

அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம் கொண்டுவந்தார் நத்தம் விஸ்வநாதன்.

ஓ.பன்னீர் செல்வத்துடன் யாரும் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது - அதிமுக தீர்மானம்

வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோருடனும் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என சிறப்பு தீர்மானம்

தந்தை பெரியார், அண்ணா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு 'பாரத ரத்னா' விருதை, மத்திய அரசு வழங்ககோரி தீர்மானம் நிறைவேற்றம்.

அதிமுக பொதுச் செயலாளரை, கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்யும் வகையில் விதிகளில் மாற்றம்.

பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுபவர் 5 ஆண்டுகள் தலைமை கழக நிர்வாகியாக பதவி வகித்திருக்க வேண்டும்.

அதிமுகவில் முதன்முறையாக துணைப் பொதுச் செயலாளர் என்ற பதவி உருவாக்கம்.

துணைப் பொதுச் செயலாளராக கே.பி.முனுசாமி நியமனம்.

துணை பொதுச் செயலாளர்களை, பொதுச் செயலாளர் நியமனம் செய்வார்.

* சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பணி சிறக்க  எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!  என்று பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

* அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக அக்கட்சியின் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  அவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! என்று பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

* என்னை கட்சியை விட்டு நீக்கும் அதிகாரம் இபிஎஸ்-க்கு இல்லை - ஓபிஎஸ்.

எடப்பாடி பழனிசாமி மற்றும் கேபி முனுசாமியை அதிமுகவில் இருந்து நீக்குவதாக ஓபிஎஸ் அறிவிப்பு.

* சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.

வருவாய் துறையை சேர்ந்த வருவாய் கோட்டாட்சியர் ஓபிஎஸ் இடம் சீல் வைப்பதற்கான நோட்டீசை வழங்கிய பின்னர் தாசில்தார் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

இந்த நடைமுறை 145 குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவின் அடிப்படை ஆகும்.

* அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம்.

* வருகிற ஜூலை 17ம் தேதி காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

* கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் மீண்டும் திமுகவில் இணைப்பு.

கடலூர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஐயப்பன் மீண்டும் திமுகவில் பணியாற்ற தலைமை அனுமதி.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி ஐயப்பன் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்.

தற்பொழுது சஸ்பெண்ட் நடவடிக்கை கைவிடப்பட்டு மீண்டும் அவர் திமுகவில் பணியாற்ற அனுமதிக்கப்படுவதாக கட்சித் தலைமை அறிவிப்பு.

* புதுச்சேரி டி.ஜி.பி.யாக இருந்த ரன்வீர் சிங் கிருஷ்னியா டெல்லிக்கு இடமாற்றம்; அவருக்கு பதிலாக மனோஜ் குமார் லால் புதிய டி.ஜி.பி.யாக நியமனம்.

* புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற வளாகத்தின் மேற்கூறையில் 9500 கிலோ வெண்கலத்தால் ஆன தேசிய சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

* அதிமுக பொதுக்குழு முடிவுகள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல்.

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானது தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதிமுகவின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டதும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல்.

* அதிமுக தலைமை அலுவலகத்தில் சமூக விரோதிகள் அத்துமீறி நுழைந்தது குறித்து காவல்துறையில் புகார் அளித்தோம்; எனினும், பாதுகாப்பு வழங்கப்படவில்லை - எடப்பாடி பழனிசாமி பேட்டி.

அதிமுக தலைமை அலுவலத்தில் ரவுடிகளை அழைத்து வந்து, கட்சிக்காரர்களை ஓ.பி.எஸ். தாக்கிய சம்பவம் வேதனை அளிக்கிறது

இவரையெல்லாம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சர் ஆக்கியதற்கு தக்க வெகுமதியை தந்திருக்கிறார்.

நீங்கள் இன்று கொடூரமாக அடித்து, தாக்கிய கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தான் உங்களை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஆக்கியது

பொதுக்குழுவில் அவருக்கு மேடையில் நாற்காலி போடப்பட்டது; ஆனால், அவர் வரவில்லை.

காவல்துறையினர் எங்களது ஆதரவாளர்களைத் தாக்கினரே தவிர, ஓ.பி.எஸ் அழைத்து வந்த ரவுடியினரை தடுக்கவில்லை

ஓ.பி.எஸ். ஒரு சுயநலவாதி என்பதை மீண்டும் காட்டியுள்ளார்.

தனக்கு கிடைக்காத பதவி, எவருக்கும் கிடைக்கக் கூடாது என்று சுயநலமாக செயல்படக்கூடியவர்தான் ஓ.பி.எஸ் - எடப்பாடி பழனிசாமி

* இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பத்துடன் வெளிநாடு தப்பியோடியது உறுதியானது.

இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியதாக நாடாளுமன்ற சபாநாயகர் தகவல்.

இலங்கையை விட்டு வெளியேறிய கோட்டாபய அருகில் உள்ள ஒருநாட்டில் இருப்பதாகவும் சபாநாயகர் தகவல்.

* எதற்கெடுத்தாலும் திமுகவை தாக்கிப் பேசுவது எடப்பாடி பழனிசாமிக்கு வாடிக்கையாகிவிட்டது

அதிமுகவுக்குள் நடக்கும் சண்டைக்கும், திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை - திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி பேட்டி

சட்டம்-ஒழுங்கு எங்கும் மீறப்படவில்லை, உடனடியாக 144 போடப்பட்டது.

சட்டம், ஒழுங்கு காரணமாக அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

எந்த நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது காவல்துறையை வைத்திருந்த ஈபிஎஸுக்கு தெரியாதா? - ஆர்.எஸ்.பாரதி.

ஜெயலலிதா, எம்ஜிஆர் காலத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் 5 ஸ்டார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டார்களா?

அதிமுக செய்த வன்முறையை பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டிய ஊடகங்களுக்கு தனிப்பட்ட முறையில் பாராட்டுக்கள் - ஆர்.எஸ்.பாரதி

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages