தமிழ்நாட்டில் மக்கள் நலனுக்காக துணிச்சலாக போராடும் ஒரே தலைவவர் மருத்துவர் இராமதாசு!
கர்நாடகத்தில் ஒலித்த குரல் - கர்நாடக வன்னியர் சங்க மாநாட்டில் தலைவர்கள் உரை
கர்நாடகா மாநிலம், சிமோகாவில் 26.6.2022-ல் வன்னிய குல சத்திரியர் மாநாடு நடைபெற்றது. கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரும் ஐக்கிய ஜனதா தள சட்டமன்ற கட்சித் தலைவருமான திரு.எச்.டி.குமாரசாமி , முன்னாள் முதலமைச்சர் திரு.எடியூரப்பாவின் மகனும், மக்களவை உறுப்பினருமான திரு.ராகவேந்திரா , கர்நாடக மாநில இன்னாள் அமைச்சர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற முன்னாள், இன்னாள் உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்று பேசினார்கள். அவர்கள் உரையாற்றும் போது தமிழகத்தில் மக்கள் நலனுக்காக நான் நடத்திய போராட்டங்களை பாராட்டிப் பேசியதாக அந்த மாநாட்டில் கலந்து கொண்ட பாட்டாளி மக்கள் கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.
கர்நாடக சட்டமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினரும் பாரதிய ஜனதாக் கட்சியின் கர்நாடக மாநில முன்னாள் துணைத் தலைவருமான திரு.பானு பிரகாஷ் உரையாற்றும் போது, தமிழகத்தில் எனது துணிச்சலான செயல்பாடுகளை பாராட்டினார்.
’’தமிழ்நாட்டிலிருந்து வருகைதந்துள்ள தலைவர், சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு மணி அவர்களே, தமிழ்நாட்டிலிருந்து வந்துள்ள பெரியோர்களே, மேடையில் அமர்ந்துள்ள அனைத்து தலைவர்களே,உடன்பிறப்புக்களே,
தமிழ்நாட்டின் திருமணி அவர்கள் பேசியபோது நான் தெரிந்துகொண்டேன். நெருக்கடியான காலத்தில்கூட அசாத்திய துணிச்சல் மிக்க தலைவர் தமிழ்நாட்டின் ஒரே தலைவர் என்றால் அவர் திரு இராமதாஸ் மருத்துவர் அய்யா மட்டுமே. தமிழ்நாட்டில் ஒரு பிரச்சினை என்றால் ஜனநாயகத்தை காப்பாற்ற மக்களுக்காக போராடக் கூடிய மிக தைரியமான துணிச்சலான தலைவர் இராமதாஸ் மருத்துவர் அய்யா அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே என்பது இன்று வரலாற்றில் இடம் பெற்றுள்ளது உண்மை. ஏனென்றால் அவர் சத்திரியர். எப்போது,எங்கு அநியாயம் நடக்கிறதோ அதை எதிர்த்து போராடக் கூடியவர்கள் சத்திரியர்கள் அது அவர்களுடைய குணம்.’’
பானுபிரகாஷின் கருத்துகளை மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் கைத்தட்டி வரவேற்றனர்.
No comments:
Post a Comment