அக்னிப்புரட்சி இன்றைய (12.07.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (12.07.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (12.07.2022) முக்கிய செய்திகள்.

* ஒகேனக்கல் காவரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடியாக அதிகரிப்பு.

இதனால் அருவிகளில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் 3வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா பாசனத்துக்காக 15,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

* ஐந்தாண்டு சட்டப்படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் வரும் 29ம் தேதி வரை நடைபெறுகிறது.

tndalu.ac.in என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் அறிவிப்பு.

* James Webb தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட முதல் படத்தை வெளியிட்டது நாசா.

விண்வெளியில் இதுவரை எடுக்கப்பட்ட படங்களில் இதுதான் மிகத்தெளிவான படம் என நாசா பெருமிதம்.

* புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பாட்டினத்தில் இருந்து மீன்பிடிப்பதற்காக 93 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

இதில் கார்த்திக் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கார்த்திக் உள்பட தேவராஜ், சுரேஷ், திருமேனி, வேல்முருகன், சுந்தரம் ஆகியோர் கடலுக்கு சென்றனர்.

அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தனர்.

* அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை வைத்த சீலை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு.

வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

* மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முன்னேற்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு.

52,000 சதுர அடி, 22,000 சதுர அடி பரப்பளவில் 2 பிரமாண்ட அரங்கங்கள் அமைப்பு.

ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை செஸ் ஒலிம்பியாட் நடைபெறுகிறது.

* அதிமுக வரவு செலவு கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்.

நானே அதிமுக பொருளாளர்; வேறு யாரையும் அதிமுக வரவு, செலவுகளை கையாள அனுமதிக்க கூடாது - வங்கிகளுக்கு ஓபிஎஸ் கடிதம்.

புதிய பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் என வங்கிகளுக்கு ஈபிஎஸ் கடிதம் எழுதிய நிலையில், ஓபிஎஸ்ஸும் கடிதம்.

* மதுரை காமராஜர் பல்கலை பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறோம் - உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி.

ஆளுநரின் செயல்பாடு பாஜகவின் பிரச்சாரம் போல உள்ளது - பொன்முடி.

பட்டமளிப்பு விழா தொடர்பாக என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. அரசை ஆலோசிக்காமல் காமராஜர் பல்கலை. பட்டமளிப்பு விழா அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பட்டமளிப்பு விழாவில் மாணவர்களிடம், ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியலை புகுத்துகிறார் - பொன்முடி.

இந்திய நாட்டின் வரலாற்றை கொஞ்சமாவது ஆளுநர் படிக்க வேண்டும் - பொன்முடி.

ஒன்றிய அரசால் நியமிக்கப்படுவதால் ஒன்றிய ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. மாநில அரசின் கொள்கைகளை, திட்டங்களை நிறைவேற்றுவதே ஆளுநரின் கடமை.

ஆளுநர் எந்த ‘-ism’ பின்பற்றுவேராக இருந்தாலும் 'Humanism' என்ற மனிதாபிமானத்தை பின்பற்ற வேண்டும்.

கௌரவ விருந்தினர் என்ற அடிப்படையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பட்டமளிப்பு விழாவுக்கு அழைக்கப்பட்டதின் நோக்கம் என்ன? - பொன்முடி.

* சுங்கச்சாவடி கட்டணம் - நீதிமன்றம் உத்தரவு.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடியில் மாத கட்டண முறையில் பேருந்துகளுக்கு பாஸ் வழங்குவதில் 50 முறைதான் பயணிக்க வேண்டும் என கட்டுப்படுத்த கூடாது.

எத்தனை முறை சுங்கச்சாவடிகள் கடந்து செல்கின்றதோ அதற்கு ஏற்றார் போல் மாதாந்திர சலுகை கட்டண பாஸ் வழங்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

* முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று.

தொற்று உறுதியானதை தொடர்ந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

* இலங்கை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சே அமெரிக்கா தப்பி செல்ல முயற்சி

பசில் ராஜபக்சேவின் ஆவணங்களை சரிபார்க்க விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் மறுப்பு

கட்டுநாயக்கா விமானநிலைய அதிகாரிகளின் நடவடிக்கையால் மீண்டும் இல​ங்கை திரும்பிய பசில் ராஜபக்சே

* எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் பயிற்சி பட்டறையில் படித்தவள் சொல்கிறேன்,
வீர தமிழச்சியாக சொல்கிறேன், நான் இருக்கின்றவரை அதிமுகவை யாரும் அபகரிக்கவோ, அழித்துவிடவோ முடியாது திமுக எத்தனை கணக்கு போட்டாலும் அது பலிக்காது"
- வி.கே.சசிகலா

* ஒரு காலத்தில் நம் வீட்டில் வானொலிப் பெட்டி வைத்திருந்தால், அதற்கு உரிமம் எடுக்க வேண்டும். அந்த உரிமத்தினை, அதெற்கென விற்கப்படும் அஞ்சல் தலைகளை வாங்கி அந்த உரிமக் கையேட்டில் ஒட்டி உரிமத் தொகையினை (cancel) மதிப்பிழப்பு செய்ய வேண்டும். அதற்கான அஞ்சல் தலைகளைத் தான் இங்கே காண்கிறீர்கள்.

இது போன்ற, இன்னும் சுவாரஷ்யமான வானொலித் தொடர்பான அஞ்சல் தலைகள், முதல் நாள் கடித உரைகளைக் காண ஆகஸ்ட் 12-14, 2022 கிண்டி ஒலிம்பியாட் அரங்கில் நடைபெற உள்ள AMRITPEX 2022 க்கு வாருங்கள்.

* புதிய நாடாளுமன்றத்தில் 'சிங்கம்' தூண் சர்ச்சை!

தொட்டதற்கு எல்லாம் குற்றம் கண்டு பிடிப்பவர்கள் இன்று நமது புது பாராளுமன்றத்தின் மீது வைக்கப்பட்டிருக்கும் சிங்க தூண் பற்றி பேசி வருகிறார்கள்

ஒரு சாரார் அது மிகவும் ஆக்கிரோஷம் ஆக இருக்கிறது, அழகாக இல்லை, நமது தேசிய சின்னத்தை அவமதித்து விட்டார்கள் என்றும்

இன்னொரு சாரார் தைக்கப்பட்ட சிங்கத்தின் வாயை திறந்த வீரர் மோதி, அது சிங்கமா இல்லை பூனையா என்றும் பேசி வருகின்றனர்

உண்மையில் இருவரும் தவறு தான்.

இப்போது நிறுவப்பட்டுள்ள சிங்க இலச்சினை அசோகன் ஸ்தூபியின் பெரிது படுத்தப்பட்ட வடிவம்.

மிக பெரிய உயரத்தில் வைக்கப்பட உள்ளதால் பெரிதாக செய்யப்பட்டுள்ளது.  சுமார் 20 அடி உயரம் இருக்கலாம்.  9.5 டன் எடை.  வெங்கலத்தினால் ஆன சிலை.

நமது பாரம்பரிய சின்னத்தில் கூட சிங்கம் வாயை திறந்து பல் காட்டியபடி தான் இருக்கும்.  ஆனால் புதிய சிலையின் உயரம் காரணமாக அதை கீழிருந்து மேலாக படம் பிடித்து உள்ளனர்.  அதன் காரணமாக சிங்கத்தின் வாய் பிளந்து உள்ளது போல தெரிகிறது. 

பக்கத்தில் உள்ள மற்ற முகங்களை சிறிது பார்க்கவும்.  இது போல தெரியாது.  இது புகைப்படம் எடுத்த கோணத்தினால் வரும் விளைவு. நேர் கண் நோக்கி ட்ரோன் புகைப்படம் எடுத்தால் இப்படி தெரியாது.

இரண்டாவது அழகியல்.  இது சிறிய சிலை அல்ல மிக அழகாக வடிப்பதற்கு.  சிலைகள் பெரிதாக ஆகும் போது அதை மிக அருகில் இருந்து பார்த்தால் அழகாக இருக்காது.  இது நம் பார்வை கோளாறு தான்.  பெரிய கட்டிடத்தின் மீது வைக்கப்பட்டு தூரத்தில் இருந்து பார்க்கும் போது இப்படி இருக்காது.

மேலே சொன்ன விஷயங்கள் புரியாமல் இரு தரப்பும் அடித்து கொள்வது வேடிக்கை தான்.

இதில் ஒரு அறிஞர் இது நமது பாரம்பரிய சின்னங்களை appropriate செய்வது ஆகும் என்று வேறு கருத்து தெரிவித்து உள்ளார். 

பழைய படத்தையும், புதியதாயும் கொடுத்து உள்ளேன்

* முதல் ஒருநாள் போட்டி - இந்தியா அபார பந்துவீச்சு:

முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 111 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து அணி.

முதலில் ஆடிய இங்கிலாந்து 25.2 ஓவர்களில் 110 ரன்களுக்கு சுருண்டது.

4 பேரை டக் அவுட்டாக்கிய பும்ரா 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

* இனி ரூபாயில் வெளிநாட்டு வர்த்தகம்!

பல நாடுகள் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு பெரும்பாலும் அமெரிக்க டாலரையே சார்ந்துள்ளன

அவ்வப்போது நிகழும் டாலர் மதிப்பு ஏற்றத்தாழ்வு அந்தந்த நாடுகளின் பொருளாதாரத்தையும் பாதிக்கும் நிலை. இந்தியா போன்ற பல நாடுகள் இப்போது அப்பிரச்னையை  சந்தித்துக்கொண்டுள்ளன

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிந்துள்ளது.  அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்து வருகிறது. குறுகிய காலத்தில் 270 பில்லியன் டாலர் வெளிநாட்டு கடனை திரும்பத் தர வேண்டிய நிர்பந்தம் இந்தியாவுக்கு  ஏற்பட்டுள்ளது.

இப்படியான நெருக்கடியான ஒரு சூழலில் அமெரிக்க டாலர் சார்ந்திருப்பை குறைத்துக்கொள்ளும் முயற்சியாக ரூபாய் அடிப்படையிலான வர்த்தகத்தை பெருக்கும் அறிவிப்பை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது

இன்றைய ஆர்பிஐ அறிக்கை மூலம் ரூபாய் அடிப்படையிலான வெளிநாட்டு வர்த்தகம் ரெகுலரைஸ் ஆக்கப்பட்டு அது இன்னும் பரவலாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க டாலரை சார்ந்திருப்பது குறையும் என்பதால் மத்திய அரசின் பொருளாதார நெருக்கடி குறையும்

பல நாடுகள் இந்தியாவுடனான ரூபாயை பொது நாணயமாக பயன்படுத்த முன் வரும் என்பதால் அதற்கான தேவை அதிகரித்து அதன் மதிப்பும் அதிகரிக்கும்

அண்டை நாடுகளும் ஈரான் போன்ற நாடுகளும் இந்தியாவுடன் பெருமளவு ரூபாய் வர்த்தகத்திற்கு மாற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது

உலக வர்த்தகத்தில் இந்தியா கணிசமான பங்கை வகிப்பதால் ரூபாய் வர்த்தகம் பலன் தரும் என அரசு நம்புகிறது

எனினும் ரூபாய் அடிப்படையிலான வர்த்தகத்தை முடக்க சில நாடுகள் முயற்சி செய்யக்கூடும். சர்வதேச அரசியல், பொருளாதார சூழல்களும் ரூபாய் வர்த்தக திட்டத்திற்கு பெரும் சவால்களாக அமையும்

சீனா  தனது பணமான ரென்மின்பியை உலகளாவிய பணமாக்க தீவிர முயற்சி செய்கிறது. இப்போது இந்தியாவும் அப்பாதையில் முறைப்படி பயணிக்க தொடங்கியுள்ளது.

* முதல் ஒருநாள் போட்டி: இந்தியா 10 விக்கெட்டில் அபார வெற்றி .

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.

111 என்ற இலக்கை 18.4 ஓவரில் அடித்து அசத்தல், துவக்க வீரர்களான ரோகித் 76 ரன்களும், தவான் 31 ரன்களுடன் அவுட்டாகமல் வெற்றியை தேடிதந்தனர்.

* நீட் தேர்வு - விதிமுறைகள்:
ஜூலை 17ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு முகக்கவசம் கட்டாயம். வெப்பநிலை பரிசோதனை நடத்தப்படும்.

வெப்பநிலை அதிகமாக உள்ள தேர்வர்கள் தனி அறையில் அமர்ந்து தேர்வு எழுதலாம்- தேசிய தேர்வு முகமை.

ஹால்டிக்கெட்டுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை இருந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதி.

தேர்வு முடிந்த உடன் ஹால் டிக்கெட்டை தேர்வறை கண்காணிப்பாளரிடம் கட்டாயம் ஒப்படைக்க வேண்டும்.

ஜூலை 17ம் தேதி பகல் 1.30 மணிக்கு மேல் வரும் எந்த தேர்வருக்கும், தேர்வு மையத்துக்குள் அனுமதியில்லை- தேசிய தேர்வு முகமை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages