வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்களுடன் மருத்துவர் இராமதாசு அய்யா கலந்தாய்வு - Agnipuratchi

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்களுடன் மருத்துவர் இராமதாசு அய்யா கலந்தாய்வு

Share This

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்களுடன் மருத்துவர் இராமதாசு அய்யா கலந்தாய்வு

பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் திட்டங்கள் குறித்து மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்களுடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அந்த வரிசையில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்களுடன் மருத்துவர் அய்யா அவர்கள் இன்று ஆலோசனை நடத்தினார்கள். தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்கத்தில் நடைபெற்ற இந்தக் கலந்தாய்வில், 150க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு ஒன்றியம், நகரம் மற்றும் பேரூர்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளில் எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும், இனிவரும் நாட்களில் மேற்கொள்ளப்படவிருக்கும் பணிகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, தலைமை நிலையச் செயலாளர் இசக்கி படையாட்சி, தேர்தல் பிரிவுச் செயலாளர் செல்வக்குமார் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் பாமக செயலாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages