அக்னிப்புரட்சி இன்றைய (13.07.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (13.07.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (13.07.2022) முக்கிய செய்திகள்.

* இன்று பதவி விலகுவதாக அறிவித்திருந்த நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பினார்.

ஏற்கனவே ராஜினாமா கடிதத்தில் அவர் கையெழுத்திட்ட நிலையில் இன்று பதவி விலகுகிறார்.

ராஜினாமாவிற்கு முன்னதாக கோத்தபாய ராஜபக்சே இலங்கையை விட்டு தப்பி வெளியேறியதாக தகவல்.

* நீலகிரியில் பெய்து வரும் கனமழை காரணமாக கூடலூர், பந்தலூர், உதகை, குந்தா தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (13.07.2022) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிப்பு.

* பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகலை நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் பதிவிறக்கம் செய்யலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம்.

dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விடைத்தாள் நகலை பதிவிறக்கலாம்.

மறுகூட்டலுக்கு வரும் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

* அதிமுக தலைவர்களை விமர்சித்து, பொன்னையன் பேசுவதாக ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட ஆடியோவால் சர்ச்சை.

நான் பேசியதாக வெளியான ஆடியோ பொய்யானது - பொன்னையன்

மிமிக்கிரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொய்யாக ஆடியோ வெளியிட்டு இருக்கிறார்கள்.

என் மீது அவதூறு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த ஆடியோ வெளியிட்டுள்ளனர் - பொன்னையன்.

* என்னுடன் பேசியது பொன்னையன் தான் -  அதிமுக நிர்வாகி கோலப்பன்

அவர்தான் பேசினார், மிமிக்ரி செய்ய வேண்டிய அவசியமில்லை.

பொன்னையன் எப்போது என்னிடம் பேசினார் என்பதற்கான ஆதாரம் உள்ளது  - அதிமுக நிர்வாகி கோலப்பன்.

* சிபிஎஸ்இ மாணவர்களுக்கு கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உரிய அவகாசம் தர வேண்டும்.

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு யூஜிசி உத்தரவு.

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில் யுஜிசி உத்தரவு.

* ஜேம்ஸ் தொலைநோக்கி எடுத்த பிரபஞ்சத்தின் மேலும் சில புகைப்படங்களை வெளியிட்டது நாசா.

ஜேம்ஸ் வெப் வான்வெளி தொலைநோக்கி எடுத்த பிரபஞ்சத்தின் முதல் படத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டிருந்தார்.

* இலங்கையில் அவசர நிலை பிரகடனம். இலங்கையில் போராட்டம் தொடரும் நிலையில் அவசர நிலையை பிரகடனம் செய்தார் பிரதமர் ரணில்.

இலங்கை அதிபர் கோட்டாபய பதவி விலகாமல் மாலத் தீவுக்கு தப்பிச் சென்ற நிலையில் போராட்டம் நீடிப்பு.

* வரும் 17ஆம் தேதி கூடுகிறது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்.

இடைக்கால பொதுச்செயலாளராக ஈ.பி.எஸ். பதவியேற்றபின் முதன்முறையாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்.

* அரசுப் பேருந்துகள் தனியார் மயமாகும்  என்ற பேச்சுக்கே  இடமில்லை - போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் உறுதி

* ஓப்போ மொபைல் நிறுனத்திற்கு சொந்தமான இடங்களில் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் சோதனை.

ரூ.4,389 கோடி சுங்க வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டுள்ளதாக வருவாய் புலனாய்வுத்துறை தகவல்.

* இலங்கை அரசு ஊடகமான Rupavahini நிறுவனத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றி, அரசுக்கு எதிரான தங்களது கருத்துக்களை ஒளிபரப்பியதால் பரபரப்பு.

Rupavahini செய்தி தொலைக்காட்சியின் சேவை தற்போது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை அரசின் மற்றோரு ஊடகமான ITN நிறுவனத்தின் சேவைகளும் நிறுத்தம்.

* வரும் 15ம் தேதி முதல் 75 நாட்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என மத்திய அரசு அறிவிப்பு.

சுதந்திர தின அமுதப்பெருநாளை ஒட்டி இந்த இலவச பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படுவதாக மத்திய அரசு தகவல்.

* 45 கைத் துப்பாக்கியுடன் இருவர் கைது:

தில்லியில் ஜகஜித் சிங் அவர் மனைவி ஜஸ்விந்தேர் கௌர் ஆகியோர் அனுமதியின்றி  45 கைத் துப்பாக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்துள்ளது தில்லி காவல்துறை.

* மாமல்லபுரம் :- செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க வருகிற 28ஆம் தேதி பிரதமர் மோடிஜி தமிழகம் வருகிறார்...!

* குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மழை வெள்ளத்தால் ஏழு பேர் இறந்துள்ளனர், இதுவரை 468 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 9,000 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

* சிங்கப்பூர் செல்கிறார் கோத்தபய?
கோத்தபய ராஜபக்சே மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் செல்ல உள்ளதாக தகவல்

* விரைவில் பல ஆடியோக்கள் வெளிவரும். ஓ.பி.எஸ்-ன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்வோம்

கே.பி. முனுசாமி, ஜெயகுமார் போன்ற ஒரு சிலரால் எடப்பாடி பழனிசாமிக்கு அழிவு வந்து விட்டது - புகழேந்தி

ஓ.பன்னீர் செல்வம் விரைவில் புரட்சிப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது எடப்பாடி பழனிசாமி உள்பட அவர் பக்கம் உள்ள அனைவரும் சிறையில் இருப்பார்கள் - புகழேந்தி பேட்டி

பொன்னையன் அண்ணனை ஆயிரம் வார்த்தைகளால் பாராட்டலாம், அவர் வாழ்க. அவர் உயிருக்கு ஆபத்து என்பதால் பாதுகாப்பு தேவை”

ஓ.பி.எஸ். புரட்சிப் பயணம் மேற்கொள்ளும் போது எடப்பாடி பழனிசாமி சிறையில் இருப்பார் - புகழேந்தி.

* அதிமுக தலைமை நிர்வாகத்தில் அதிரடி மாற்றம் - இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பின்னர் முக்கிய நியமனங்கள்

அதிமுக துணைப்பொதுச் செயலாளராக கே.பி.முனுசாமி மற்றும் நத்தம் விஸ்வநாதன் நியமனம்

எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக பொன்னையன், எடப்பாடி பழனிசாமி வகித்துவந்த தலைமை நிலையச் செயலாளர் பொறுப்புக்கு எஸ்.பி.வேலுமணி நியமனம்

செல்லூர் ராஜு, சி.வி.சண்முகம், தனபால், கே.பி.அன்பழகன், காமராஜ், ஓ.எஸ்.மணியன், கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, பெஞ்ஞமின், ராஜன் செல்லப்பா மற்றும் பால கங்கா ஆகியோர் அமைப்புச் செயலாளர்களாக நியமனம்.

* இன்றைய சிந்தனை

சில நாய்களுக்கும் ஒரு சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி  ஏற்பாடு செய்யப்பட்டது வானை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டு போட்டி ஆரம்பமானது.

நாய்கள் ஓட ஆரம்பித்தன....
ஆனால் சிறுத்தை தன் கூண்டை விட்டு வெளியே வரவே இல்லை. போட்டியை பார்க்க கூடியிருந்த அணைத்து மக்களுக்கும் தாள முடியாத ஆச்சரியம். -
என்ன நடந்தது? ஏன் சிறுத்தை ஓடவில்லை? என்று போட்டி ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டார்கள்.

அதற்க்கு அவர் சொன்ன விடை.....

"சில சமயங்களில் நீங்கள் சிறந்தவர் என்பதை மற்றவர்களுக்கு நிரூபிப்பது ஒரு அவமானம்." சிறுத்தை அதன் வேகத்தை வேட்டையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தும். அதன் வேகத்தையும், வலிமையையும் சில நாய்களுக்கு நிரூபிக்க வேண்டியதில்லை....
ஆகவே, நம் வாழ்வில் பல சூழ்நிலைகளில், நாம் சிறந்தவர்கள் என்பதை எல்லோருக்கும் நிரூபிக்க முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை.
அப்படி செய்வது நமக்குத்தான் கால, பொருள், ஆற்றல் விரயம்.

தேவையில்லாதவர்களிடம், தகுதியற்றவர்களிடம்  நாம் யார் என்பதை நிரூபிக்காமல் இருப்பதே சிறந்த புத்திசாலித்தனம்...

* டோலோ 650 மாத்திரை தயாரிப்பு நிறுவனம் டாக்டர்களுக்கு ரூ. 1000 கோடிக்கு பரிசுப் பொருட்கள் வழங்கியது அம்பலம் ஆகியுள்ளன.

டோலோ 650 மாத்திரை தயாரிப்பு நிறுவனத்தில் நடந்த ஐ.டி. சோதனையில் பரிசுப் பொருட்கள் தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளனர்.

* மீண்டும் இலங்கையின் அதிபரானார் ரணில்..

* இலங்கையின் இடைக்கால அதிபரானார் ரணில் விக்ரமசிங்கே; மக்கள் கொந்தளிப்பு!!

இலங்கையின் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பி ஓடிய நிலையிலும் போராட்டம் வலுத்து வருவதால் அவசர நிலையை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இன்று அறிவித்தார். அந்த நாட்டின் இடைக்கால அதிபராகவும் ரணில் விக்ரமசிங்கே நீடிப்பார் என்று தெரிய வந்துள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்புவில் போராட்டம் வலுத்து வருகிறது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் அலுவலகத்தின் முன்பு வலுக்கும் போராட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். போலீசார் கூட்டத்தைக் கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசி வருகின்றனர். ரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிக்கக் கூடாது என்று குரல் எழுப்பி வருகின்றனர்.

பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யாமல், கூடுதலாக அதிபர் பொறுப்பையும் ரணில் விக்ரமசிங்கே பார்ப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதில் இருந்து வெளி வர முடியாமல், கடனையும் அடைக்க முடியாமல், வட்டியும் கட்ட முடியாமல் பணவீக்கம் அதிகரித்து, மக்கள் அன்றாட உணவுக்கும் பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் கொந்தளித்துள்ளனர்.

பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமான அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே, தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்களிடம் இருந்து சொத்துக்களை முடக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பி வருகின்றனர்.

பிரதமர் வீடு முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த இடமே போர்க்களமாக அந்த காட்சி அளிக்கிறது. அவசர நிலை அறிவிப்பு செய்து தொடர்ந்து பதவியில் நீடிக்கவே ரணில் விரும்புகிறார் என்றும், அவர் பதவியில் இருந்து விலகும் வரை போராட்டம் தொடரும் என்று போராட்டக்காரர்கள் கூறி வருகின்றனர்.

மாலத்தீவு சென்று இருக்கும் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. அவரை மாலத்தீவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனால் அங்கும் போராட்டம் வெடித்துள்ளது.

ரணில் மறுப்பு:
இன்று மதியம் ஒரு மணிக்குள் அதிபரும், பிரதமரும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில்தான் இலங்கையில் இருந்து கோத்தபய மனைவியுடன் மாலத்தீவுக்கு நேற்று இரவே தப்பிச் சென்றார். கோத்தபய ராஜினாமா செய்து விட்டதாக கூறப்பட்டது. ஆனால், ரணில் இன்னும் செய்யவில்லை.

கைதுக்கு ரணில் உத்தரவு:
மேற்கு இலங்கை மாகாணத்தில் ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களை கைது செய்யுமாறு பிரதமர் ரணில் உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த சனிக்கிழமை அதிபரின் வீட்டுக்குள் போராட்டக்காரர்கள் புகுந்தனர். இதற்கு முன்னதாக, வெள்ளிக்கிழமை இரவே கோத்தபய ராஜபக்சே வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். இதைத் தொடர்ந்துதான், ரணில் விக்ரமசிங்கே வீட்டுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்து இருந்தனர். 

* உலகையே திரும்பி பார்க்க வைத்த நாசாவின் 'ஜேம்ஸ் வெப்' சாதனையை சிறப்பிக்கும் கூகுள் டூடுள் வெளியீடு

வாஷிங்டன்: பூமியில் இருந்து பல லட்சம் மைல்கள் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டுள்ள ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, பிரபஞ்சத்தை அற்புதமாக படம் பிடித்திருப்பதை நாசா வெளியிட்டது. உலகையே திரும்பி பார்க்க வைத்த நாசாவின் 'ஜேம்ஸ் வெப்' விண்வெளி தொலைநோக்கியின் இந்த சாதனையை சிறப்பிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் தனது முகப்புப் பக்கத்தில் டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.ஐ ரோப்பா, கனடா விண்வெளி ஆய்வு அமைப்புகளுடன் இணைந்து ‘ஜேம்ஸ் வெப்’ என்ற விண்வெளி தொலைநோக்கியை ரூ.79.6 ஆயிரம் கோடியில் நாசா உருவாக்கியது.

உலகின் மிகப் பெரிய இந்த தொலைநோக்கி, தென் அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து 5 ராக்கெட்டுகள் மூலம் கடந்த டிசம்பர் மாதம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியில் இருந்து 10 லட்சம் மைல் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டுள்ள ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்து அனுப்பிய பிரபஞ்சத்தின் முதலாவது வண்ணப்படத்தை அதிபர் பைடன் வெள்ளை மாளிகையில் வெளியிட்டார். இதற்குமுன் இப்படிப்படம் எடுக்கப்பட்டது இல்லை. இதில், ‘பிரபஞ்சம் வெள்ளை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிகப்பு நிறங்களில் புள்ளிகள், கோடுகள், சுருள்கள், சூழல்கள் என வண்ணமயமாக காட்சி அளிக்கிறது,’ என்று நாசா நிர்வாகி பில் நெல்சன் கூறியுள்ளார். இந்த நிலையில் இன்றைய கூகுளின் முகப்பு பக்கத்தில் நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியும், அதன் மூலம் எடுக்கப்பட்ட பிரபஞ்சத்தின் படங்களும் இடம்பெற்றுள்ளன.....

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages