அக்னிப்புரட்சி இன்றைய (15.007.2022) முக்கிய செய்திகள்.
* CUET - PG தேர்வு - விண்ணப்பிக்கும் அவகாசம் வரும் 18-ம் தேதி வரை நீட்டிப்பு.
இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் வரும் 18-ம் தேதிக்குள் cuet.nta.nic.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.
* எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தங்கியுள்ள அரசு பங்களாவில் அதிமுகவின் எம்எல்ஏகள் கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது என முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தமிழக தலைமைச் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.
கடந்த 2017 ஆண்டு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி அப்போது பன்னீர் செல்வம் தங்கியிருந்த அரசு பங்களாவில் ஆலோசனை நடத்த அனுமதிக்கவில்லையென மேற்கோள் காட்டியுள்ளார்... மேலும் அரசு பங்ககளாவில் கட்சி கூட்டம் நடத்தவும் அனுமதிக்க கூடாது என அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.
* ஐக்கிய அமீரகத்தில் இருந்து வந்த நபருக்கு குரங்கு அம்மை: கேரளா அமைச்சர் அறிவிப்பு.
* மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிடும் நடத்துநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்-போக்குவரத்துத்துறை.
பள்ளி, கல்லூரி மாணவர்களை பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்காமல் இறக்கிவிடும் நடத்துநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்- போக்குவரத்துத்துறை எச்சரிக்கை.
மாணவர்கள் சீருடை அல்லது கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வைத்திருந்தால், இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
* 18 வயதானோருக்கு இன்று முதல் இலவச பூஸ்டர் தடுப்பூசி.
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவது இன்று முதல் தொடங்குகிறது.
நாடு விடுதலைபெற்று 75 ஆண்டுகள் ஆவதையொட்டி 75நாட்களுக்கு இலவச பூஸ்டர் டோஸ் போடப்படுகிறது.
* சர்ச்சைக் கேள்வி குறித்து பல்கலையின் துணைவேந்தர் ஜெகநாதன் விளக்கம்:
தேர்வுக்கான வினாத்தாள் பெரியார் பல்கலைக்கழகத்தால் தயாரிக்கப்பட்டது இல்லை, பிற பல்கலை/ கல்லூரிகளில் தயார் செய்யப்பட்டது.
இது குறித்து என் கவனத்துக்கு வரவில்லை,உரிய விசாரணை நடத்தப்படும்.
கேள்வி குறித்து உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மறு தேர்வு குறித்து பரிசீலிக்கப்படும்.
கசிந்துவிடும் என்பதால் முன்கூட்டியே வினாத்தாள்களை படிப்பதில்லை.
* கர்மவீரர் காமராஜர் பிறந்த தினம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்:
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை “கல்விவளர்ச்சிநாள்” எனத் தலைவர் கலைஞர் அறிவித்ததே, நாம் கல்வி பெற்றிட அவர் முன்னெடுத்த திட்டங்களைத் தலைமுறைகள் தாண்டியும் எடுத்துக்கூறும்
போராடிப் பெற்ற கல்வி உரிமையால், அறிவார்ந்த நற்சமுதாயமாய் விளங்கிடுவோம்.
கல்வியும் மருத்துவமும் நமது அரசின் இரண்டு கண்கள்.
* தரமான கல்வியும் மருத்துவமும் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் நாம் செயல்படுத்தி வரும் திட்டங்களை இன்னும் செம்மைப்படுத்திடப் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் உறுதிகொள்வோம்.
தமிழக ஆளுநரின் கருத்துகளுக்கு காழ்ப்புணர்ச்சியுடன் பேசுவதே ஆளும் அரசுக்கு வழக்கமாகிவிட்டது - திருச்சியில் ஜி.கே.வாசன் பேட்டி.
ஜி.எஸ்.டி வரி ஏற்றம், இறக்கம் என்பது நிரந்தரமானதல்ல. அதில் மக்களுக்கு பாதிப்பு உள்ளதெனில் மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது - ஜி.கே.வாசன்.
* நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் காலமானார்.
பன்னீர் புஷ்பங்கள், அழியாத கோலங்கள் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் பிரதாப் போத்தன்.
* நடிகர் விஜய் வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு:
நடிகர் விஜய் இறக்குமதி செய்த காருக்கு 2019 ஜனவரிக்கு முன்னர் முழு நுழைவு வரியும் செலுத்தியிருந்தால் அபராதம் விதிக்கக் கூடாது.
2019 ஜனவரிக்கு பின்னும் வரியை முழுமையாக செலுத்தாமல் இருந்தால் அபராதம் விதிக்கலாம்-சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.
* கொரோனா தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்து பிரதமர் மோடி தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு கேட்டு அறிந்தார்.
பிரிந்து சென்றோர் மனம் திருந்தி வந்தால் ஏற்போம் - செல்லூர் ராஜூ.
எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஓ.பி.எஸ் வருத்தம் தெரிவிக்க வேண்டும் - செல்லூர் ராஜூ.
அதிமுக சாதி ரீதியான கட்சியில்லை. சாதிய அடிப்படையில் பொறுப்புகள் வழங்கப்படவில்லை - செல்லூர் ராஜூ.
* ரிபுத்மன் சிங் சுட்டுக் கொலை!
கனடாவில் நேற்று ரிபுத் மன் சிங் அடையாளம் காண முடியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
1985 ஆம் வருடம் ஏர் இந்திய விமானம் கனிஷ்கா குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. சுமார் 325 பயணிகள் உயிர் பறிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர். வழக்கின் முடிவில் குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுவிக்கப்பட்டார். பாரதம் வருவதற்கு நிரந்தர தடை விதிக்கப் பட்டிருந்தது. 2020 இல் அத்தடை நீக்கப்பட்டு விசா வழங்கப்பட்டது. காலிஸ்தான் ஆதரவாளர்.
* கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்டத்தில் நிவாரண பணிகளை துரிதப்படுத்த குழு.
அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், செந்தில் பாலாஜி தலைமையில் குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
நிவாரண பணிகளை துரிதப்படுத்தி, சேதங்களை ஆய்வு செய்து உடனடியாக சீரமைக்க நடவடிக்கை.
தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 160 வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் - முதல்வர் ஸ்டாலின்.
* முதலமைச்சர் ஸ்டாலினின் உடல்நலம் தேறி வருவதாக மருத்துவமனை அறிக்கை
மேலும் சிறிது நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுரை
முதல்வர் ஸ்டாலின் கொரோனா தொற்றில் இருந்து விடுபடுவதற்கான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது - மருத்துவமனை
* இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார்
அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்த நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இடைக்கால அதிபராக பதவியேற்பு
* ஈரோடு சிறுமியிடம் சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்த விவகாரத்தில் சேலம் சுதா மருத்துவமனை ஸ்கேன் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டது.
மருத்துவமனை இணை இயக்குநர் நெடுமாறன் தலைமையிலான அதிகாரிகள் ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்தனர்.
4 மருத்துவமனைகளில் உள்ள ஸ்கேன் சென்டர்களை உடனடியாக மூட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று உத்தரவிட்டிருந்தார்.
* திருப்பதியில் அறைகள், தரிசனம், லட்டு டிக்கெட் பெறுவதில் முறைகேடு தடுக்க யுபிஐ க்யூ.ஆர். ஸ்கேன் பயன்படுத்த முடிவு
திருமலை: திருப்பதியில் அறைகள், தரிசனம், லட்டு டிக்கெட் பெறுவதில் முறைகேடுகளை தடுக்க யுபிஐ க்யூஆர் ஸ்கேன் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கும் அறைகள், தரிசன டிக்கெட்டுகள் பெற பணம் செலுத்தும் நிலையில் இருந்து பணம் இல்லா பரிவர்த்தனை என்ற முறையில் டிஜிட்டல் பரிவர்த்தனையான கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தில் அறைகள் பெறும் பக்தர்கள் வழங்கும் டெபாசிட் தொகை, அறையை காலி செய்யும்போது தேவஸ்தானம் அடுத்த 24 மணி நேரத்தில் அந்தந்த வங்கிகளுக்கு திருப்பி செலுத்தி விடுகிறது.
ஆனால் பக்தர்களின் வங்கி கணக்கிற்கு அந்த பணம் செல்வதற்கு 10 முதல் 15 நாட்கள் வரை ஆகிறது. இதை தவிர்க்க புதிய திட்டத்தை தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, யுபிஐ க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சோதனை முறையில் தங்கும் அறைகளை ஒதுக்கும்போது யுபிஐ கோட் ஸ்கேன் செய்து பணம் செலுத்த ஏற்பாடு செய்துள்ளது.
இதன்மூலம் பக்தர்கள் அறைகள் பெற விரைவில் பணம் செலுத்தப்படுவதோடு அறைகள் காலி செய்த பின்னர் பக்தர்களின் முன் வைப்பு தொகை விரைவில் அனுப்பி வைக்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த திட்டத்தின் வரவேற்பை பொருத்து அறைகள், லட்டு பெறுவதற்கும் தரிசன டிக்கெட் உள்ளிட்ட அனைத்து பண பரிமாற்றத்திற்கும் யுபிஐ க்யூஆர் கோடு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை முழுமையாக அமல்படுத்தினால் முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பதியில் வார நாட்களிலும் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - ரூ.5.5 கோடி உண்டியல் காணிக்கை வசூல் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையிலும், திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. வார இறுதிகளில் பக்தர்கள் பல மணி நேரம் நீண்ட வரிசைகளில் நின்று சாமி தரிசனம் செய்கின்றனர்.
அதே போல் தற்போது வார நாட்களிலும், ரூ.300 கட்டண தரிசனத்திற்காக 5 மணி நேரமும், இலவச தரிசனத்திற்காக 12 மணி நேரமும் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று ஒரு நாளில் மட்டும், உண்டியல் காணிக்கையாக 5 கோடியே 5 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளதாக திருப்பது தேவஸ்தானம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
* கோமாளி கூடாரத்திற்கு இல்லை அதிகாரம்... 'எடை'யில்லா 'பாடி'க்கு விடை கொடுக்க வேண்டி வந்துவிட்டது நேரம்"
-அதிமுகவில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்ததற்கு தேனி எம்.பி. ரவீந்திரநாத் பதில்.
* மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115 அடியை எட்டியுள்ள நிலையில் வெள்ள அபாயம்
ஓரிரு நாட்களில் 120 அடியை எட்டும் என்பதால் எந்த நேரத்திலும் அணையில் இருந்து உபரிநீர் திறக்க வாய்ப்பு.
* மார்ச் மாதம் நடைபெற்ற குரூப் -1 முதன்மை தேர்வுக்கான முடிவுகள் http://tnpsc.gov.in இணையதளத்தில் வெளியானது.
குரூப் 1 தேர்வில் செங்கல்பட்டு மாவட்டத்தை சார்ந்த லாவண்யா என்பவர் மாநில அளவில் முதலிடம்.
* 'அண்ணாமலை உடன் செல்பி போட்டி' சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடக்கும் என திருப்பூர் பாஜக விளம்பரம்;
அனுமதியின்றி கல்லூரியின் பெயரை தவறாக பயன்படுத்துவதாக கல்லூரி முதல்வர் அறிக்கை
கல்லூரி வளாகத்தில் நிகழ்ச்சி நடத்த எந்த அனுமதியும் தரவில்லை என முதல்வர் விளக்கம்.
* அரசுப்பள்ளி மாணவர்களுக்கு Laptop வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படாது!
ஆனால் பல்வேறு சிக்கல்கள் உள்ளன ; சிக்கல்களுக்கு தீர்வு கண்டு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவோம்.
-பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி.
* அரசுப்பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட்!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், வழித்தடம் குறித்து விசாரித்த முதியவர் தாக்கப்பட்ட விவகாரம்;
அரசுப் பேருந்து ஓட்டுநர் முரளி கிருஷ்ணனை சஸ்பெண்ட் செய்து சேலம் மண்டல பொது மேலாளர் உத்தரவு.
* 2022ம் ஆண்டுக்கான கல்வி நிறுவனங்களின் தர வரிசை பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி.,க்கு முதலிடம்!
இந்தியாவில் மிகவும் பிரபலமான கரக்பூர், ரூர்கீ ஐ.ஐ.டிகள் (Roorkee -IIT) 6 மற்றும் 7ம் இடத்தையும், டெல்லி ஜஹவர்லால் நேரு பல்கலை., 10 வது இடத்தையும் பிடித்துள்ளது.
* ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்!
கோவில் அர்ச்சகர்கள் உச்சநீதிமன்ற உத்தரவின்படி, ஆகம விதிப்படி நியமிக்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
அர்ச்சகர் நியமன விதிகளை எதிர்த்து மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், டெல்லியை சேர்ந்தவர்கள் தொடர்ந்த வழக்கில் உத்தரவு.
* இலங்கை: முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவும், முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவும் இலங்கையை விட்டு வெளியேற ஜூலை 28ம் தேதி வரை தடை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு.
* அதிமுக அலுவலகத்துக்கு சீல் ஏன்? வீடியோ ஆதாரங்களுடன் போலீசார் அறிக்கை.
டிவியில் காமிச்சதுல 10% கூட உங்க வீடியோவுல இல்லை: நீதிபதி அப்செட்.
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கில், 2வது நாளாக இன்றும் தொடர்ந்து விசாரணையானது நடைபெற்று வருகிறது.
நீதிபதி: கட்சி அலுவலகத்துக்குள் இருப்பவர்கள் குறித்து போலீசாருக்கு தெரியுமா?
அரசு தரப்பு: கட்சி அலுவலக மேலாளர் முதலில் ஜூலை 10 ஆம் தேதி அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றார். காலை, 6:30 மணிக்கு ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவர்கள் குவியத் தொடங்கினர். காலை 8 மணிக்கு தான் இபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டனர்.
நீதிபதி: வன்முறையை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?
அரசு தரப்பு: நாங்கள் பலத்த பாதுகாப்பு போட்டிருந்தோம். காலை 8.45 மணியளவில் இரு தரப்புக்கும் இடையே தகராறு தொடங்கியது. நாங்கள் இரு தரப்பினரையும் தடுக்க முயன்றோம் ஆனால் அவர்கள் உள்ளே நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
(இதனை தொடர்ந்து நீதிபதி அதிமுக அலுவலகத்திற்கு முன்பு நடந்த வன்முறை சம்பவ வீடியோவை பார்வையிட்டார்)
நீதிபதி: வன்முறை நடக்கும் போது போலீசார் பார்வையாளர்களாக உள்ளனர். நீங்கள் ஏன் காத்திருந்து அவர்களை அனுமதிக்கிறீர்கள்?
அரசு தரப்பு: காவல்துறையின் தலையீடு இல்லாமல் போயிருந்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும். நாங்கள் அதை தடுத்தோம். பொதுமக்கள் யாருக்கும் இதில் காயம் ஏற்படவில்லை.இவ்வளவு நடந்தும் இரண்டு நபர்கள் மட்டுமே உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர்.
நீதிபதி: போலீசார் தலையிட்டதாக தெரியவில்லை
(இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் காவல்துறை எவ்வாறு செயல்படத் தவறியது என்பதை இந்த வீடியோக்கள் காட்டும் என தெரிவித்தார். அதற்கு ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் எங்களிடமும் வீடியோவும் உள்ளது என கூறினார்)
நீதிபதி: இந்த வீடியோதான் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதா?
அரசு தரப்பு: ஆம்
நீதிபதி: டிவி சேனல்களில் காட்டப்பட்டதில் 10% கூட போலீஸ் வீடியோவில் இல்லை.
அரசு தரப்பு: இனி கட்சி அலுவலகம் தொடர்பாக எந்த சர்ச்சையும் இருக்காது என்பதில் எந்த உறுதியும் இல்லை.
நாங்கள் இதுவரை மூன்று எஃப்ஐஆர்களை பதிவு செய்துள்ளோம். முதல் FIR இல் குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்துள்ளோம். மேலும் சிசிடிவி அடிப்படையில், ஒவ்வொருவரையும், அவர்கள் யார், என்ன பதவி வகிக்கிறார்கள் என்பதை இப்போது அடையாளம் கண்டுள்ளோம்.
நீதிபதி: பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததற்காக அரசியல் கட்சிகளிடம் இருந்து எப்போதாவது நஷ்டஈடு அல்லது இழப்பீடு வசூலித்திருக்கிறீர்களா?
காவல் துறை: தற்போதும் இரு தரப்பினருக்கு இடையில் சமாதானம் ஏற்படவில்லை. மீண்டும் பிரச்சினை ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. பொது அமைதி, மக்கள், பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு முக்கியம். சீல் வைத்த உத்தரவை ரத்து செய்தால் மேலும் பிரச்னைகள் ஏற்படலாம்.
* கணவரை பிரிந்து வாழும் மனைவி, தாலிச் சங்கிலியை கழற்றுவது என்பது கணவருக்கு அளிக்கும் மன ரீதியான துன்புறுத்தல்-சென்னை உயர் நீதிமன்றம் கருத்து.
பணியிடத்துக்கு சென்று கணவரைப் பற்றி அவதூறு பரப்பியது மன ரீதியில் துன்புறுத்துவதற்கு சமம் - நீதிபதிகள்
கணவரை பிரிந்ததும் தாலிச் சங்கிலியை கழற்றி விட்டதாக மனைவி கூறியதும் கூட கணவரை மன ரீதியாக துன்புறுத்துவதற்கு சமம் - நீதிபதிகள்
மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி தாக்கல் செய்த மனுவை குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து கணவர் வழக்கில் நீதிபதிகள் கருத்து.
No comments:
Post a Comment